கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித் துறை - தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் - 6 அலுவலர்களுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்க்கான தேசிய விருதுகள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Department of School Education - National Institute of Educational Management and Planning - National Awards for Innovation and Best Practices in Education Management for 6 Officers - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 57652/ அ1/ இ4/ 2020-8, நாள்: 08-02-2022...



>>> பள்ளிக் கல்வித் துறை -  தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் -  6 அலுவலர்களுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்க்கான தேசிய விருதுகள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Department of School Education - National Institute of Educational Management and Planning - National Awards for Innovation and Best Practices in Education Management for 6 Officers - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 57652/ அ1/ இ4/ 2020-8, நாள்: 08-02-2022...

இன்றைய (09-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 09, 2022




நுட்பமான அறிவு திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.


பரணி : லாபம் ஏற்படும். 


கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 09, 2022




தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் படிப்படியாக குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. கல்வி கற்கும் நிலைகளில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்களின் மூலம் லாபம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : ஆதரவான நாள். 


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 09, 2022




வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் சுதந்திர உணர்வு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவாதிரை : குழப்பங்கள் நீங்கும். 


புனர்பூசம் : சுதந்திரமான நாள்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 09, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவி கிடைக்கும். சபை தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள். 


பூசம் : உதவி கிடைக்கும். 


ஆயில்யம் : சாதகமான நாள். 

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 09, 2022




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழில் அபிவிருத்திகான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தந்தைவழி உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : சோர்வு நீங்கும். 


பூரம் : மேன்மை உண்டாகும். 


உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 09, 2022




தெய்வீகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அஸ்தம் : செல்வாக்கு மேம்படும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 09, 2022




உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவசாய பணிகளில் சிந்தித்து செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : மாற்றம் உண்டாகும். 


சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


விசாகம் : சேமிப்புகள் குறையும். 

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 09, 2022




அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான உதவி கிடைக்கும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : உதவி கிடைக்கும். 


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 09, 2022




உத்தியோகம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலவிதமான குழப்பங்களிலிருந்து நிலையான முடிவுகளை எடுப்பீர்கள். சிறுதொழில் புரிவோர் வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். புதிய நபர்களின் அறிமுகம் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வெற்றி நிறைந்த நாள் .



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



மூலம் : பயணங்கள் உண்டாகும்.


பூராடம் : தெளிவு பிறக்கும். 


உத்திராடம் : மாற்றமான நாள்.

---------------------------------------






மகரம்

பிப்ரவரி 09, 2022




கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். 


திருவோணம் : மகிழ்ச்சியான நாள். 


அவிட்டம் : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------






கும்பம்

பிப்ரவரி 09, 2022




கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து சுகபோகங்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : மேன்மை உண்டாகும்.


சதயம் : அனுசரித்து செல்லவும் 


பூரட்டாதி : ஈர்ப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 09, 2022




விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வீடு மற்றும் மனை சார்ந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : லாபம் உண்டாகும்.


உத்திரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரேவதி : முன்னேற்றமான நாள். 

---------------------------------------


நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...



>>> நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🌟  எண்ணும் எழுத்து இயக்கம் - எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி பங்கேற்பாளர்கள்


அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். பயிற்சியில் பங்கேற்பது எப்படி:   

TNEMIS-  வாயிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் தங்களது USER ID மற்றும் PASSWORD மூலமாக LOGIN செய்து செய்து இணையதளம் ONLINE மூலம் பயிற்சியில் பங்கேற்றல், தொடங்குதல்.


 எண்ணும் எழுத்தும் அடிப்படை பயிற்சி கால  அட்டவணை கட்டகம்.


 1) 09 .02.22 முதல் 12.02.22- கட்டகம் 1 


2) 14.02.22 முதல் 19.02.22- கட்டகம் 2,3 


3) 21.02.22 முதல் 25.02.22-கட்டகம் 4, 5 ,6 


4) 28.02.22 முதல் 05.03.22 கட்டகம் 6,7 


5) 07.03.22 முதல் 12.03.22 கட்டகம் 8,9 


6) 14.03.22 முதல் 19.03.22 கட்டகம் 10, 11 


7) 21.03.22 முதல் 25.03.22-கட்டகம் 12 


8) 28.03.22 -அனைத்துக் கட்டகங்களில் விடுபட்டோருக்கான பயிற்சி துவக்கம். 


9) 09.04.22- விடுபட்டோருக்கான பயிற்சி நிறைவு.


இதில் காணொலிகள், உரை வளங்கள்(Texts) பல விதமான செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு (Assignment)(ஒவ்வொரு பயிற்சியிலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.) வடிவில் வழங்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் ஆசிரியர்கள் படித்து கட்டகத்தை 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.


 மிக கவனம் : ஒவ்வொரு கட்டகத்தின் முடிவில் ஆசிரியர்கள் ஒரு கொள்குறி வகை(Multiple choice) வினாடி-வினாவிற்கு விடை அளிக்க வேண்டும். மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறவில்லை எனில் மீண்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வரையில் பயிற்சியினை தொடர்தல் வேண்டும்.


 சான்றிதழ் : பயிற்சியில் பங்கேற்று சான்றிதழை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறு வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து 100% இலக்கினை அடைய வழிவகை செய்ய வேண்டும்.


FLN (Foundational Literacy and Numeracy) எனப்படும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான அறிவிப்பு;


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும்  நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி TNEMIS இணையதளத்தின் மூலம் கடிதத்தில் உள்ளவாறு நாளை முதல்(09-02-2022) வழங்கப்பட உள்ளது.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து ஆசிரியர்களும்,அவர்களின் Android செயலி Mobile Phone ல் TNEMISE இணையதளத்தில் ஆசிரியர்களின் Individual User ID, Password னை பயன்படுத்தி மேலே உள்ள கடிதத்தில் கூறியுள்ள கால அட்டவணைப்படி பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் TNEMIS  இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள 12 கட்டகங்களின் செயல்பாடுகளையும் கடித்த்தில் குறிப்பிடபட்டுள்ள தேதிக்குள் கூறியுள்வாறு முடிக்கப்பட வேண்டும்.

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


மலை சுழற்சி உள்ள ஒன்றியங்களில் மட்டும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (08.02.2022) நடைபெறாது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Elementary School Headmasters Transfer Counselling will not take place today (08.02.2022) only in the unions in the Hill Rotation. Date to be announced later - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 05-02-2022...

 


>>> மலை சுழற்சி உள்ள ஒன்றியங்களில் மட்டும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (08.02.2022) நடைபெறாது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Elementary School Headmasters Transfer Counselling will not take place today (08.02.2022) only in the unions in the Hill Rotation. Date to be announced later - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 05-02-2022...

07.02.2022 - உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - (High school HM promotion Counselling ) கலந்தாய்வு நிலவரம்...



07.02.2022 - (High school HM promotion) கலந்தாய்வு நிலவரம்:


மொத்த காலிப் பணியிடங்கள்: 411


பேனலில் உள்ளோர் (பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி) :482 மற்றும் BEO'S


💥 கலந்தாய்வு நிறைவு. 


 🛑பதவி உயர்வு  பெற்றவர்கள்: 264 (PG AND BT: 255 ,BEO:9)

 


🛑பதவி உயர்வு துறந்தவர்கள்: 218


🛑கலந்தாய்வு முடிவில்  காலியிடமாக உள்ள உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 151

இன்றைய (08-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 08, 2022




நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். நன்மையான நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும். 


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 08, 2022




மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : நெருக்கடியான நாள். 


ரோகிணி : அனுசரித்து செல்லவும்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 08, 2022




பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும். 


புனர்பூசம் : தலையீடுகளை தவிர்க்கவும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 08, 2022




குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : தாமதங்கள் குறையும். 


ஆயில்யம் : வரவு உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 08, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆலய வழிபாடுகளால் மனதிற்கு திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய இலக்குகள் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



மகம் : மாற்றம் உண்டாகும். 


பூரம் : திருப்தியான நாள்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 08, 2022




வியாபார ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். வாகன பயணங்களின் மூலம் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வசதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சாதகமான நாள். 


அஸ்தம் : அனுபவம் பிறக்கும்.


சித்திரை : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 08, 2022




செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 08, 2022




குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். ஆதரவான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : போட்டிகள் குறையும். 


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 08, 2022




புதிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அனுகூலமான நாள். 


பூராடம் : எதிர்ப்புகள் குறையும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------






மகரம்

பிப்ரவரி 08, 2022




குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : லாபம் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 08, 2022




தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். 


சதயம் : பொறுமை வேண்டும். 


பூரட்டாதி : மரியாதை அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 08, 2022




எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். செல்வாக்கு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.


ரேவதி : ஆதரவு பெருகும்.

---------------------------------------


LKG & UKG வகுப்புகளைக் கையாள பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்கு ஈர்த்தல் - ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை (கூடுதல் தேவை உள்ள இடங்களையும் தேர்வு செய்யலாம்) - கலந்தாய்வு நடைபெறும் நாள்: 16-02-2022 - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Secondary Grade Teachers who have been deployed with the posts to handle LKG & UKG Classes, Attracting to the Unions where they have worked - They Can also select places of need posts - Date of Counselling: 16-02-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 07-02-2022...



>>> LKG & UKG வகுப்புகளைக் கையாள பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்கு ஈர்த்தல் -  ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை (கூடுதல் தேவை உள்ள இடங்களையும் தேர்வு செய்யலாம்) - கலந்தாய்வு நடைபெறும் நாள்: 16-02-2022 - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Secondary Grade Teachers who have been deployed with the posts to handle LKG & UKG Classes, Attracting to the Unions where they have worked - They Can also select places of need posts - Date of Counselling: 16-02-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 07-02-2022...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...