கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (07-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (07-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...

 



மேஷம்

ஆகஸ்ட் 07, 2022



உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்ப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : மந்தத்தன்மை ஏற்படும்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : சேமிப்பு குறையும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 07, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். 


ரோகிணி : ஆதாயம் மேம்படும்.


மிருகசீரிஷம் : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 07, 2022



மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாகனம் சார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 07, 2022



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குழப்பம் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : தெளிவு பிறக்கும். 


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 07, 2022



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி சார்ந்த விரயங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மகம் : நெருக்கடிகள் குறையும். 


பூரம் : விரயங்கள் உண்டாகும். 


உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 07, 2022



உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




உத்திரம் : மாற்றம் ஏற்படும்.


அஸ்தம் : அனுகூலமான நாள். 


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 07, 2022



உடன்பிறந்தவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி ஆர்வம் மேம்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பேசும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபிட்சம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


சுவாதி : ஆர்வம் மேம்படும். 


விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும். 

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 07, 2022



புதிய முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களை பற்றி புதிய கண்ணோட்டம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : செல்வாக்கு மேம்படும். 


கேட்டை : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஆகஸ்ட் 07, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த  பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 07, 2022



நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரம் நிமிர்த்தமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் சாதகமான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




உத்திராடம் : ஆதாயம் ஏற்படும். 


திருவோணம் : உதவி கிடைக்கும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 07, 2022



கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த குழப்பம் நீங்கும். சுயதொழிலில் பொறுமையும், கவனமும் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


சதயம் : குழப்பம் குறையும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 07, 2022



உத்தியோக பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


உத்திரட்டாதி : தடைகள் விலகும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு - மாணவர்களின் உடல், மனநலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Awareness week observance in schools from 12.08.2022 to 19.08.2022 - Special exercises to protect physical and mental health of students - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019527 /எம்/இ1/2022, நாள்.06.08.2022...



>>> பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு - மாணவர்களின் உடல், மனநலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Awareness week observance in schools from 12.08.2022 to 19.08.2022 - Special exercises to protect physical and mental health of students - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019527 /எம்/இ1/2022, நாள்.06.08.2022...







தேசியக்கொடியை ரூ.25 - க்கு Online வழியாக பெற E-Post office - வலைதள முகவரி (Get National Flag Online for Rs.25 through E-Post office - Website Address)...



ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சென்னை நகரம், அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் வேலூரில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் சுமார் 57,000 தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

ஆகஸ்ட் 1 முதல் சென்னை நகரம், அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் வேலூர் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் அஞ்சல் துறை கிட்டத்தட்ட 57,000 கொடிகளை விற்பனை செய்துள்ளது.  

தேசியக் கொடிகள் ஒவ்வொன்றும் ₹25 விலையில் இப்பகுதியில் உள்ள 2,191 தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் கொடிகளை வாங்கலாம், மேலும் தபால் நிலையங்களில் கொடிகள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் ஜி.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொடிகளை வழங்குவது மட்டுமின்றி, தெருவோர வியாபாரிகள், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடையும் வகையில் தபால் ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கொடிகளுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் செல்ஃபி பாயின்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடிகளை வீட்டிற்கு கொண்டு வர மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தபால் நிலையங்கள் தேசியக் கொடிகளின் விற்பனையைத் தொடங்கியுள்ளன.


>>> E-Post office - தேசியக்கொடி ரூ.25 - க்கு  Online வழியாக பெற வலைதள முகவரி...


 


About 57,000 national flags have been sold through post offices in Chennai city, its neighbouring districts and Vellore since August 1.


The Department of Posts has sold nearly 57,000 flags in post offices across Chennai city, its neighbouring districts and Vellore since August 1.


Priced at ₹25 each, the national flags are being sold through 2,191 post offices in the region. Flags can also be bought online through www.epostoffice.gov.in and post offices would sell flags in bulk quantity, said a press release from G. Natarajan, Postmaster General, Chennai City Region.


Besides delivering flags, postal staff members are engaged in a campaign to reach out to various sections of people, including street vendors and schoolchildren. At Anna Road Head Post Office, a selfie point has been created where customers can take a photograph along with the flags that they have purchased.


Post offices have started sale of the national flags as part of a campaign to encourage residents to bring home tricolour flags, ahead of the 75th Independence Day.





 

பள்ளிப் பார்வைப் படிவம் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கானது (Visit format for Primary and Middle School on 10th and 11th August)...

 


>>> பள்ளிப் பார்வைப் படிவம் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கானது (Visit format for Primary and Middle School on 10th and 11th August)...





தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...

 


 

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.



 முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.




இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education)...



>>> பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Name List of Teachers Participating in Training)...





முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள் (Review Meeting for CEOs / DEOs on 12.08.2022 and 13.08.2022 at Chennai - Proceedings of the Commissioner of School Education and Agenda)...



>>> முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள் (Review Meeting for CEOs / DEOs on 12.08.2022 and 13.08.2022 at Chennai - Proceedings of the Commissioner of School Education and Agenda)...






EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...



EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...


EMIS மற்றும் TNSED App குறித்து ஆசிரியர்களிடையே நிலவும் அதிருப்தியை தெரிவித்தோம் . அதற்கு அவர் EMIS என்பது தவிர்க்க இயலாதது . நாம் e-governance முறைக்கு மாற வேண்டும் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இது என்றும், இது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். மேலும் EMIS App  வாயிலாக ஆசிரியர்களின் வேலைப்பளு குறைக்கப்படும். மாதாந்திர அறிக்கை, Pay Bill, Aquittance , மதிப்பெண் பட்டியல்கள், இலவச சீருடை, புத்தகம், நோட்டு வழங்கிய பட்டியல் போன்றவைகள் இனி எமிஸ் இணையதளம் வாயிலாகவே தயாரித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டி வராது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர்களும் TNSED App  மூலம் தனக்கு தேவையான விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடுமுறை கடிதங்களை கொடுத்துவிட்டு அது ஒப்புதல் பெறப்படுமா அல்லது பெறப்படாதா என்று வட்டாரக்கல்வி அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர்களிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி ஆசிரியர்களுக்கான பணிப்பளுவை குறைப்பதற்காக இந்த ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


அப்பொழுது ஆசிரியர்களுக்கு பல இடங்களில் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் Configuration  குறைவாக இருப்பதால் Attendance போடுவதிலும் இன்டர்நெட் கிடைப்பதிலும் சிரமமாக இருக்கிறது. எனவே கல்வித் துறையே உயர்தர Configuration (6gb ram ,128 gb inbuilt memory) கொண்ட செல்போன் வழங்கி அதற்கு சிம் வழங்கி அந்த சிம்மில் இன்டர்நெட் கனெக்சன்  மற்றும்  டேட்டா ஆகியவற்றை துறைசார்பாக  வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் . மேலும் அவ்வாறு வழங்கும்பொழுது அதை கல்வித்துறைப்பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத வகையில் Lock செய்து (தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பொழுது அவர்கள் பணியைத் தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாததை போன்று) வழங்குங்கள் அல்லது இன்டர்நெட் மற்றும் டேட்டா இணைப்புடன் கூடிய சிம்கார்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.


 இது சார்பாக நிதித்துறை அலுவலர்களுடன் பேசி வருவதாகவும் Device வழங்குவதா அல்லது டேட்டா வித் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்குவதா என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக ஆணையாளர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார் 


தகவல் கே.பி.ரக்ஷித்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...