>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான புது ஊஞ்சல் திங்கள் விட்டு திங்கள் இதழ்-01 PDF - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு (Pudhu Oonjal (New Swing) Monthly Magazine for Class Three to Five Students-01 PDF - Published by: School Education Department, Government of Tamil Nadu)...
பள்ளி மாணவர்களுக்காக ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு மாத இதழ்கள், ஆசிரியர்களுக்காக 'கனவு ஆசிரியர்' இதழ் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin launched Unjal and Thenchittuittu monthly magazines for school students and 'Kanavu Aasiriyar' magazine for teachers)...
பள்ளி மாணவர்களுக்காக ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு மாத இதழ்கள், ஆசிரியர்களுக்காக 'கனவு ஆசிரியர்' இதழ் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin launched Unjal and Thenchittuittu monthly magazines for school students and 'Kanavu Aasiriyar' magazine for teachers)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Today's (12-10-2022) Wordle Answer...
Today's (12-10-2022) Wordle Answer: IONIC
இன்றைய (12-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
அக்டோபர் 12, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : பொறுப்புகள் மேம்படும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 12, 2022
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். அசதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 12, 2022
நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : தெளிவு பிறக்கும்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 12, 2022
விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயல்பாடுகளிலும் ஆராய்ந்து செயல்படவும். செலவுகளை குறைத்து கொள்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் மனதில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். செல்வச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : எண்ணங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 12, 2022
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். ஆரம்ப கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : நம்பிக்கை ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 12, 2022
உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கொள்கை தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கண்கள் சார்ந்த இன்னல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : இன்னல்கள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 12, 2022
மனதில் உயர்நிலைக்கு செல்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : எண்ணங்கள் உண்டாகும்.
சுவாதி : உதவி கிடைக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
விருச்சிகம்
அக்டோபர் 12, 2022
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 12, 2022
தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சில கவலைகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : இழுபறிகள் குறையும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 12, 2022
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 12, 2022
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சாதனை நிகழும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தைரியம் அதிகரிக்கும்.
சதயம் : அனுபவம் வெளிப்படும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 12, 2022
குடும்பத்தில் பொருளாதாரம் சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். நண்பர்களின் உதவியின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தனவரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : திருப்திகரமான நாள்.
உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.
ரேவதி : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு.
குறள் 12.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொருள் :
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.
பழமொழி :
Never cast the oar till you are out
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன்.
2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.
பொன்மொழி :
கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.
பொது அறிவு :
1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ?
நெல் .
2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ?
1953 ஆம் ஆண்டு.
English words & meanings :
Catenation - bonding of atoms of the same elements to form a chain. Carbon atoms tend to form catenation. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு
ஆரோக்ய வாழ்வு :
கேரட் வேர் காய்கறியை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
நீதிக்கதை
குகையுடன் பேசிய நரி
ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டுத் திரும்பி மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து உண்டுவிடலாம் என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது.
அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தப்போது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது.
நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது.
சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது.
நீதி :
எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.
இன்றைய செய்திகள்
12.10.22
* அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.
* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
* 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.
* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை பார்க்க இருக்கின்றனர்.
* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.
* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.
* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.
* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.
* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி.
Today's Headlines
* Even if there is heavy rain, the power supply will not be affected: Minister Senthilbalaji assures.
* 17 instructions have been issued to the ration shops on behalf of the Cooperative Department to avoid damage to the products during the Northeast Monsoon season.
* After 5 years, Tamil Nadu has received permission to set up 25 primary health centers and 25 urban health centers, Minister M. Subramanian said.
* Higher Education Minister Ponmudi has said that the number of students enrolling in engineering courses has increased this year.
* Chennai Meteorological Department has informed that 16 districts of Tamil Nadu are likely to receive heavy rain today.
* National Vocational Training Mela was held yesterday at 280 locations across the country under Prime Minister Narendra Modi's Skill India program.
* The Jharkhand government has provided a TV and inverter to the family of India captain Astam Oran in the FIFA U-17 World Cup football tournament. With this, the family and the villagers are witnessing their daughter playing on the field for the first time.
* NASA has released a photo of the eye-catching bubble-covered nebula 7,100 light-years away from Earth.
* UN In an emergency session of the General Assembly, Ukraine has registered its strong condemnation, criticizing Russia as a terrorist state.
* Tamil Nadu is ranked 5th in the medal list in the national sports competition.
* The 16-team Junior Women's World Cup started in India yesterday.
* Women's Asia Cup Cricket: The Thailand team made surprising progress to the semi-finals for the first time
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...