கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (28-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 28, 2022



உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : காலதாமதம் உண்டாகும்.


கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 28, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


ரோகிணி : வாய்ப்புகள் அமையும். 


மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 28, 2022



மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். காப்பீடு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

அக்டோபர் 28, 2022



நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். 


பூசம் : பொறுப்புகள் மேம்படும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 28, 2022



தாயாரிடம் அனுசரித்து செல்லவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : உதவி கிடைக்கும்.


உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 28, 2022



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.


அஸ்தம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 28, 2022



எதிர்பாராத இடத்திலிருந்து தனவரவு மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் மாற்றம் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




சித்திரை : தனவரவு மேம்படும். 


சுவாதி : கலகலப்பான நாள்.


விசாகம் : லாபம் அடைவீர்கள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 28, 2022



குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 28, 2022



புதிய முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மூலம் : ஆதரவு கிடைக்கும். 


பூராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 28, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : தெளிவு பிறக்கும்.


திருவோணம் : அனுகூலமான நாள்.


அவிட்டம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 28, 2022



உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : ஆதாயகரமான நாள்.


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 28, 2022



பிள்ளைகளின் தனித்திறமைகளை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பயணங்கள் சார்ந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.


உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



SSR-2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 நவம்பர் 12,13, 26 & 27 (SSR-2023 Election Commission of India Approved Special Voter Camp Days 2022 November 12,13, 26 & 27) Chief Electoral Officer Letter No.4800/ Ele-II / 2022-26, Dated: 27-10-2022...


>>> SSR-2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 நவம்பர் 12,13, 26 & 27 (SSR-2023 Election Commission of India Approved Special Voter Camp Days 2022 November 12,13, 26 & 27) Chief Electoral Officer Letter No.4800/ Ele-II / 2022-26, Dated: 27-10-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வருகின்ற 29.10.2022 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் (CRC) நடைபெறும் - பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள்: 27-10-2022 (On 29.10.2022 Cluster Resource Center meeting will be held only for teachers teaching 6th to 10th class - Cluster Resource Center meeting for teachers teaching class 11th and 12th has been postponed due to various administrative reasons - State Council of Educational Research and Training Director's Proceedings No: 01625 / O1/ 2022, Dated: 27-10-2022)...


>>> வருகின்ற 29.10.2022 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் (CRC) நடைபெறும் - பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள்: 27-10-2022 (On 29.10.2022 Cluster Resource Center meeting will be held only for teachers teaching 6th to 10th class - Cluster Resource Center meeting for teachers teaching class 11th and 12th has been postponed due to various administrative reasons - State Council of Educational Research and Training Director's Proceedings No: 01625 / O1/ 2022, Dated: 27-10-2022)...




தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி நாள் மாற்றம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Change of Leadership Training Day for HeadMasters - Joint Director of School Education Proceedings)...



>>> தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி நாள் மாற்றம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Change of Leadership Training Day for HeadMasters - Joint Director of School Education Proceedings)...








இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வாழ்க்கை வரலாறு (UK Prime Minister Rishi Sunak Biography)...



 ரிஷி சுனக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது. குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா.


பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன். பர்மாவிலும் இதேபோல் தான் நடந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.


ஆனால் பர்மாவில் இருந்து இந்திய்ர்கள் அடித்து விரட்டபட்ட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அல்லக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 2,50,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். "ப்ரிட்டிஷ் ஆசியர்கள்" என அழைக்கப்பட்டர்கள். அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது. 


சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக்கொண்டது. அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார். டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர் தான் ரிஷி சுனக். பிறந்த ஆண்டு 1980.


நல்ல வசதியான குடும்பம். ரிஷியும் நன்றாக படிக்கும் மாணவன். ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்.


அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார். அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். எம்பி ஆனார். மந்திரி ஆனார். இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.


இந்தியாவின் மருமகன், ஆனால் இந்தியர் அல்ல


ஆபிரிக்காவின் மகன், ஆனால் ஆபிரிக்கர் அல்ல


ப்ரிட்டிஷ் குடிமகன், ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள்.


பூர்விகம் பாகிஸ்தான், ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை.


இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரண்டு ஓடவில்லை.


ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம் :-)


ப்ரிட்டன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இரண்டும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சாதிப்பாரா ரிஷி? 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





Today's (27-10-2022) Wordle Answer...

                                                                                                               

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (27-10-2022) Wordle Answer: CARRY













 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


பொருள்:

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.


பழமொழி :

Good to forgive,best to forget.


மன்னிப்பதை விட மறப்பது நன்று.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 


2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.


பொன்மொழி :


கடிகாரத்தை நிறுத்தலாம் காலத்தை அல்ல. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்


பொது அறிவு :


1. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையை வந்தடைய எத்தனை மைல்கள் பயணம் செய்கின்றன?


 6,30,04,000 மைல்கள். 


2. D.D.T யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 


டாக்டர் பால்முல்லர்.


English words & meanings :


Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is a infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு


ஆரோக்ய வாழ்வு :


மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும்.  இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.



NMMS Q :


அன்பு ஒரு தேர்வில் 500க்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில் அவர் பெற்ற மதிப்பெண்களை சதவீதத்தில் கூறுக: 


விளக்கம் : அன்பு பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் = (436 / 500 ) x 100 = 87.2%


நீதிக்கதை


 உண்மைக்குக் கிடைத்தப் பரிசு


ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 


ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 


வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 


அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 


இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 


அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 


அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 


ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 


உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 


ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 


பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 


சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 


ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 


ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 


பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 


பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 


நீதி :

கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.


இன்றைய செய்திகள்


27.10.22


* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் அக்டோபர் 29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழைக்கு வாய்ப்பு.


* பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்.


* கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்.


* கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.


* அடுத்து வரும் சில காலம் பொருளாதார ரீதியில் கடினமான காலம் - உலக நாடுகளுக்கு சவுதி எச்சரிக்கை.


* ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி.


* உலக பேட்மிண்டன் தரவரிசை: 3 ஆண்டுகளுக்கு பின் டாப்-5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் பிவி சிந்து.


* சுல்தான் ஆப் ஜோகர் ஹாக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்.


Today's Headlines


* The Madras High Court has ordered the Tamil Nadu School Education Department to issue a new notification so that only those who have passed the Teacher Eligibility Test can participate in the counseling for graduate teachers.


 * Northeast Monsoon begins in Tamil Nadu on October 29;  Chance of heavy rain on Oct 30.


* Firecracker sales cross Rs 200 crore: Traders report.


* Artist's Integrated Agricultural Development Program;  Reservations can be made to benefit from fallow land package: Minister MRK to farmers  Panneerselvam request.


* The US has praised India for its role in producing vaccines during the Corona period.


 *The next few days will be tough economically - Saudi warns the world.


*  ICC T20 Rankings: Kohli returns to top-10.


* Badminton World Rankings: PV Sindhu re-enters top-5 after 3 years.


* Sultan of Johor Hockey Cup: Team India beat Japan.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...