>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014)...
2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014)...
அண்ணாமலை பல்கலைகழகம் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் கடந்த 2002 முதல் 2014 வரை தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வருகின்ற மே மாதம் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆக இரண்டு காலப்பருவ தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியில் பதிவு செய்துவிட்டு "மே மற்றும் டிசம்பர் 2023 தேர்வு எழுதலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள் ஆகவே இதை தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்வது கொள்ளுங்கள் (http://www.coe.annamalai University.ac.in/bank/splddeapp.php)
03.03.2023 முதல் 31.03.2023 வரை தங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2022 - School Morning Prayer Activities...
>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் : 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
பொருள்:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
பழமொழி :
When one door shuts another open.
ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். --விக்டர் ஹ்யூகோ
பொது அறிவு :
1. சிலோன் எப்போது ஸ்ரீலங்கா ஆனது ?
மே 1972ல்.
2. மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அதிபர் ஆகியவர் யார் ?
தியோடர் ரூஸ்வெல்ட்.
English words & meanings :
cell - compartment. noun. அறை. பெயர்ச் சொல். sell - vend. verb.விற்பது. வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
அன்னாசிப்பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்களை நிரப்புகிறது மற்றும் இறுதியில் திருப்தியைத் தூண்டுகிறது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், அன்னாசிப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு என்சைம் ப்ரோமெலைன் உள்ளது. இந்த நொதி புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
டிசம்பர் 02
சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்
சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
நீதிக்கதை
புத்திசாலி அம்மா
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான்.
பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன்.
நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.
இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது.
நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது.
இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.
அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.
புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது.
வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள்.
நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.
இன்றைய செய்திகள்
02.12.22
மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
* தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.
*பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
*சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
*தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.
*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது .
*3-வது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.
Today's Headlines
* The TN government informed the High court that a 10 people group is organised under the director of Tourism to investigate and punish the people who made artificial falls in western ghats
* In PM's Crop Insurance scheme farmers are requested to insure the winter crops by TN Agricultural and Farmers Welfare Department
* In Chennai Anna University the TN government planned to construct a Information Technology Center - by Information and Technology Minister Mano Thangaraj.
* To buy 1,000 new buses for TN Transport Corporation government issued a GO to allocate 420 crore rupees.
* In INS Vikrant Ship a war craft is joined information by Naval Marshall Hari Kumar
* The Board of Control for Cricket in India appointed a council for Cricket.
* In 3rd Hockey tournament India won its first victory by that gave a shock wave to Australia.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இன்றைய (02-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
டிசம்பர் 02, 2022
வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொந்த ஊர் செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பங்காளிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 02, 2022
தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 02, 2022
வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பத்திரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : நம்பிக்கை ஏற்படும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 02, 2022
உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். காணாமற்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : திறமை வெளிப்படும்.
பூசம் : குழப்பம் நீங்கும்.
ஆயில்யம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 02, 2022
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் தன்மையை அறிந்து செயல்படவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 02, 2022
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் அமையும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திரம் : லாபம் கிடைக்கும்.
அஸ்தம் : திருப்திகரமான நாள்.
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 02, 2022
இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 02, 2022
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : இழுபறிகள் குறையும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 02, 2022
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : திறமைகளை அறிவீர்கள்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 02, 2022
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். காது தொடர்பான இன்னல்கள் அகலும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : இன்னல்கள் அகலும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 02, 2022
வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். துரித உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : லாபம் மேம்படும்.
பூரட்டாதி : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 02, 2022
புதிய பயணங்களின் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : தெளிவு ஏற்படும்.
உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மாதங்கள் வாரியாக முக்கிய தினங்கள் (Important Days by Month)...
மாதங்கள் வாரியாக முக்கிய தினங்கள் (Important Days by Month)...
ஜனவரி
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
29- இந்திய செய்தித்தாள்கள் தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்
பிப்ரவரி
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்
மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்
ஏப்ரல்
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்
ஜூன்
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
ஜூலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்
செப்டம்பர்
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்
அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்
டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2022 டிசம்பர் மாத நாள்காட்டி (December Diary)...
2022 டிசம்பர் மாத நாள்காட்டி (December Diary)...
*03.12.2022- சனிக்கிழமை*
_*CRC -பயிற்சி நாள்(1-5வகுப்பு)*_
_*BEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*06.12.2022- செவ்வாய்க்கிழமை*
_*கார்த்திகை தீபம் (RL)*_
*10.12.2022- சனிக்கிழமை*
_*DEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*17.12.2022- சனிக்கிழமை*
_*CEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*12.12.2022 முதல் 23.12.2022*
_*1-3 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*15.12.2022 முதல் 23.12.2022*
_*6-8 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*19.12.2022 முதல் 23.12.2022*
_*4-5 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*24.12.2022 முதல் 01.01.2023*
_*இரண்டாம் பருவ விடுமுறை*_
(அரையாண்டு)
*24.12.2022- சனிக்கிழமை*
_*கிறிஸ்துமஸ் ஈவ் (RL)*_
*31.12.2022- சனிக்கிழமை*
_*நியூ இயர்ஸ் ஈவ் (RL)*_
*குறிப்பு* :
இரண்டாம் பருவ தேர்வு தேதி மற்றும் விடுமுறை தேதி மாறுதல் உட்பட்டது.
*DEC 2022 - DIARY*
BEO அலுவலக குறைதீர் நாள் - 03.12.2022
🔵 RL LIST
1. 06.12.2022- கார்த்திகை தீபம்
2. 24.12.2022 - கிறிஸ்துமஸ் ஈவ்
3. 31.12.2022 - நியூஇயர் ஈவ்
👉🏼 CRC DAY - 03.12.2022
👉🏼 அரையாண்டு தேர்வு
6, 7, 8,
15.12.2022 முதல் 23.12.2022 வரை
1 - 5 STD
19.12.2022 முதல் 23.12.2022 வரை
2nd TERM Leave
Dec - 24 to 31 & Jan 1
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
VILLAGE ASSISTANT NOTES - STUDY MATERIALS - கிராம உதவியாளர் தேர்வுக்கு உதவும் பாடக்குறிப்புகள் - 279 பக்கங்கள் - கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள், பணி விதிகள், கிராம கணக்குகள் - நிலம் - நிலத் தீர்வை - நிலவரி, அரசுக்கு சேர வேண்டிய நிலுவைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இதரப் பணிகள் (Duties and Responsibilities of Village Administrative Officers, Work rules, Village accounts - Land - Land settlement - Land Tax, Dues to Government, Disaster Management and Relief works, Maintenance of law and order, Public Health, Social Security Schemes & Other Works)...
STUDY MATERIALS - VILLAGE ASSISTANT NOTES - STUDY MATERIALS 2023 - கிராம உதவியாளர் தேர்வுக்கு உதவும் பாடக்குறிப்புகள் - 279 பக்கங்கள்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
At the Block education office, the teachers are on a sit-in
வட்டாரக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் At the Block education office, the teachers are on a sit-in கோவை: மதுகரை வட்...