கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி - பழைய மற்றும் புதிய முறை கணக்கீடுகள் - தகுதியான சேமிப்புகள் - கழிவுகள் மற்றும் வரிவிலக்கு பெறும் பிரிவுகள் (தமிழில்) - நிதியாண்டு 2022-2023 / மதிப்பீடு ஆண்டு 2023-2024 (Income Tax - Old and New Regime - Calculations - Eligible Savings - Deductions and Exemption Categories (in Tamil) - Financial Year 2022-2023 / Assessment Year 2023-2024)...

 


>>> வருமான வரி - பழைய மற்றும் புதிய முறை கணக்கீடுகள் - தகுதியான சேமிப்புகள் - கழிவுகள் மற்றும் வரிவிலக்கு பெறும் பிரிவுகள் (தமிழில்) - நிதியாண்டு 2022-2023 / மதிப்பீடு ஆண்டு 2023-2024 (Income Tax - Old and New Regime - Calculations - Eligible Savings - Deductions and Exemption Categories (in Tamil) - Financial Year 2022-2023 / Assessment Year 2023-2024)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி (Untouchability Abolition Day Pledge)...



>>> தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி (Untouchability Abolition Day Pledge)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (30-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (30-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 30, 2023



அரசு சார்ந்த துறைகளில் பொறுமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : நெருக்கம் அதிகரிக்கும். 


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 30, 2023



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



கிருத்திகை : தெளிவு கிடைக்கும். 


ரோகிணி : கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 30, 2023



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயம் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும். 

---------------------------------------



கடகம்

ஜனவரி 30, 2023



தொழிலில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், அமைதியும் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூசம் : அமைதி உண்டாகும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 30, 2023



முன்கோபமின்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வரவுக்கேற்ற செலவு உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணம் செல்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கவலை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : ஈடுபாடு உண்டாகும். 

---------------------------------------




கன்னி

ஜனவரி 30, 2023



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சோர்வின்றி செயல்படவும். பொருளாதார தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். பகை விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : தீர்வு கிடைக்கும். 


அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.  


சித்திரை : தாமதம் உண்டாகும். 

---------------------------------------



துலாம்

ஜனவரி 30, 2023



உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். கால்நடைகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



 சித்திரை : பொறுப்பு அதிகரிக்கும்.


சுவாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 30, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 



விசாகம் : உற்சாகமான நாள்.


அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கேட்டை : முன்னேற்றம் கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 30, 2023



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



மூலம் : சிந்தித்து செயல்படவும். 


பூராடம் : அனுசரித்து செல்லவும். 


உத்திராடம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 30, 2023



குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அவிட்டம் : துரிதம் உண்டாகும். 

---------------------------------------



கும்பம்

ஜனவரி 30, 2023



சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். கூட்டாளிகளுடன் இருந்துவந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : அனுபவம் உண்டாகும்.


பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 30, 2023



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



பூரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும். 


ரேவதி : உதவி கிடைக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.


பொருள்:

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்


பழமொழி :

இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.


To say today; tomorrow, indicates refusal.



இரண்டொழுக்க பண்புகள் :


1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 


2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :


மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.


பொது அறிவு :


1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? 


 தாம்சன். 


 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?


 இந்தியா.


English words & meanings :


stair – step. noun. படிக்கட்டு. stare - to look at steadily. verb. உற்று நோக்கு. வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்

கலோரிகள் - 75

புரதம் - 2.5 கிராம்

கொழுப்பு - 0கிராம்

கார்போஹைட்ரேட்டுகள் - 17 கிராம்

நார்ச்சத்துக்கள் - 3 கிராம்

கால்சியம் - 3%DV

இரும்புச் சத்து - 7%DV

மக்னீசியம் - 5%

பாஸ்பரஸ் - 5% DV

பொட்டாசியம் - 7% Dv

துத்தநாகம் - 4% DV

ஃபோலேட் - 9% DV

இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


NMMS Q


6 இன் வர்க்கத்துடன் எந்த எண்ணின் கனத்தைக் கூட்டினால் 10,000 இன் வர்க்கமூலம் கிடைக்கும்?


 விடை : 4


ஜனவரி 30


மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை


ராமன் மற்றும் பேசும் கிளி


யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.


ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.


அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.


ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.


உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.


ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.

இன்றைய செய்திகள்


30.01.2023


* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு.


* பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.


* நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்.


* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.


Today's Headlines


* According to the officials, during the bird survey conducted in Pallikaranai marshland, a flying Mallard duck was seen at a height of 14 thousand feet.


 * A team of officials inspected Mamallapuram ahead of the arrival of G20 conference delegates on February 1.


 * Chance of heavy rain in delta districts on February 1: Chennai Meteorological Department information.


* According to the Union Ministry of Health and Family Welfare, a total of 220.4 crore corona vaccine doses have been administered so far under the nationwide vaccination drive.


* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.


* Floods in New Zealand: 3 dead;  Emergency declared in Auckland city.


* Hockey World Cup: India beat South Africa to finish 9th


 * Australian Open Tennis: Djokovic wins the title.


இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...



இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...


1. உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும். வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம். 


3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.


4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.


5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.


6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம். 


7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். 

மதிய உறக்கம் வேண்டாம். 


8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும். 


9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள். 


10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.


11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம். 


12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .


13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.


14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை. 

கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.

கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .


15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்...!!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (29-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (29-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 29, 2023



புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : முடிவு கிடைக்கும். 


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 29, 2023



 விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதிய வேலையின் நிமிர்த்தமாக முயற்சிகள், அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.


ரோகிணி : சோர்வு நீங்கும்.


மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும். 

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 29, 2023



மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


திருவாதிரை : நம்பிக்கை ஏற்படும்.


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------

 


கடகம்

ஜனவரி 29, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த சில எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும். 


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 29, 2023



நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்தவாறு வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில செயல்களில் உள்ள இழுபறியான சூழல் நீங்கும். சிக்கல்கள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 29, 2023



உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பக்தி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்



உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அஸ்தம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 29, 2023



புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



சித்திரை : புதிய இலக்குகள் பிறக்கும்.


சுவாதி : லாபம் அதிகரிக்கும்.


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 29, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் படிப்படியாகக் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : அலைச்சல்கள் குறையும்.


கேட்டை : எண்ணங்கள் அதிகரிக்கும். 

---------------------------------------



தனுசு

ஜனவரி 29, 2023



பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : லாபகரமான நாள்.


பூராடம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 29, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாசனை திரவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : தாமதங்கள் குறையும். 


திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.


அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 29, 2023



உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : விருப்பம் நிறைவேறும்.


பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------




மீனம்

ஜனவரி 29, 2023



பயணங்களின் போது பிறமொழி பேசும் மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். வாக்குவன்மையால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தினால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். 


ரேவதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------


நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் (Namma School Foundation) இயக்குநர்கள் குழு மற்றும் அவர்களின் செயல்பாடுகள் - அரசாணை (நிலை) எண்.158, நாள்: 21-09-2022 வெளியீடு (G.O.Ms.No.158, Dated: 21-09-2022 - The Board of Directors of the Namma School Foundation and their Functions)...

 



>>> நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் (Namma School Foundation) இயக்குநர்கள் குழு மற்றும் அவர்களின் செயல்பாடுகள் - அரசாணை (நிலை) எண்.158, நாள்: 21-09-2022 வெளியீடு (G.O.Ms.No.158, Dated: 21-09-2022 - The Board of Directors of the Namma School Foundation and their Functions)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special facility for those who are not able to appear in TNPSC Group 4 Counselling

    TNPSC  குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி Special facility for those who are not able to appear in TNPSC Grou...