கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு - எண்ணும் எழுத்தும் (Vowels, Consonants - A set of words made to hang three-dimensionally on a string - Ennum Ezhuthum)...

   

>>> உயிர் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு (Vowels - A set of words made to hang three-dimensionally on a string)...



>>> மெய் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு (Consonants - A set of words made to hang three-dimensionally on a string)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கல்லூரி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST) மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு (POST MATRIC SCHOLARSHIP FOR SC/ST STUDENTS IN COLLEGE STUDIES - Press Release)...


>>> கல்லூரி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST) மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு (POST MATRIC SCHOLARSHIP FOR SC/ST STUDENTS IN COLLEGE STUDIES - Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (10-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

இன்றைய (10-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 10, 2023



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் உயர்வு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெற்றி கிடைக்கும் நாள்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : முன்னேற்றம் உண்டாகும். 


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 10, 2023



உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும்.  வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 10, 2023



தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும், சூழலும் அமையும். முயற்சி ஈடேறும் நாள்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும். 


திருவாதிரை : லாபம் கிடைக்கும்.


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 10, 2023



உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பூசம் : மாற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 10, 2023



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாறுதல்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 10, 2023



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி, மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.





அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.


சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 10, 2023



சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர்வு உண்டாகும் நாள்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும். 


சுவாதி : சிந்தித்து செயல்படவும். 


விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 10, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாகும். சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும். 


அனுஷம் : ஒற்றுமை மேம்படும்.


கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 10, 2023



வியாபார ரீதியான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூராடம் : அனுசரித்து செல்லவும்.


உத்திராடம் : திருப்தியான நாள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 10, 2023



பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்கவும். புகழ் நிறைந்த நாள்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.


அவிட்டம் : வாய்ப்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 10, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். அசதிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


சதயம் : உதவிகள் கிடைக்கும்.


பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 10, 2023



புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்னல்கள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : இழுபறிகள் மறையும். 


உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் : 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.


பொருள்:

அடக்கம் ஒருவனுக்கு அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.


பழமொழி :

Doubt is the key of knowledge.


ஐயமே அறிவின் திறவுகோல்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 


பொன்மொழி :


அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை.


பொது அறிவு :


1. பாலைவனங்கள் இல்லாத கண்டம் எது? 


ஐரோப்பா . 


2.திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? 


ஜி .யு. போப்.



English words & meanings :


ant that is friendly and lovely - coolant


ஆரோக்ய வாழ்வு :


குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.


NMMS Q


வைரஸ் என்னும் சொல் எந்த மொழி சொல்?


விடை: இலத்தின்


நீதிக்கதை


தைரியம்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.


திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.


பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.


ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள்


09.02.2023


* விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம்: தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி.


* அறிவுரையை மீறி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகார் அளிக்க நடத்துநர்களுக்கு உத்தரவு.


* திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.


* கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிப்போர் ஆன்லைனில் பெறும் நில பதிவேடு நகலில் சான்றொப்பம் கேட்க கூடாது: நில அளவை ஆணையர் அறிவுறுத்தல்.


* உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த தமிழகத்தில் 10 உள்ளிட்ட 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று ஜல்சக்தித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.


* புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07' உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகின்றன.


* உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


* டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.


* தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி வெற்றி.



Today's Headlines


* Fiberglass Bridge between Vivekananda Rock - Tiruvalluvar Statue: Tamil Nadu Coastal Regulatory Zonal Authority approval.


 * Conductors are instructed to file complaints against students who defy advice and travel dangerously.


 * An ancient Tamil inscription dating back to around 2,200 years ago has been discovered in a cave in Tiruparangundram. It made surprised archeology enthusiasts.


 * Applicants for building permission should not ask for attestation in a copy of the Land Registry received online: Commissioner of Land Survey Instructions.


 * 111 waterways have been notified in 24 states including 10 in Tamil Nadu to improve domestic waterway transport, said the Minister of State for Water Resources.


 * 3 satellites including 'EOS-07' for earth observation are being launched today by a small SSLV rocket.


 * For the first time in the world, scientists from Israel have developed robots that can sniff or eat using Bio-technology.


*  Ashwin is the third player to score 3000 runs and 450 wickets in Test cricket.


* National Junior Table Tennis: Tamil Nadu women's team won the opening match.


திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வழிமுறை (Ways to know in advance about planned power shutdown area)...


>>> திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வழிமுறை - காணொளி (Ways to know in advance about planned power shutdown area - Video)...



>>> திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வலைதள முகவரி (Website Link to know in advance about planned power shutdown area)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...









பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் எண்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.


பொருள்:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்


பழமொழி :

Measure is treasure. 


அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 


பொன்மொழி :


காலம் மிகவும் நம்மை கவனிக்கத்தக்கது.இன்பமும் துன்பமும் முன் காலத்தின் பயனின்று கிடைப்பதுவே._____ ஸ்ரீ ராமர் 


பொது அறிவு :


1. கல் உப்பின் வேதியல் பெயர் என்ன ?


 சோடியம் குளோரைடு. 


 2. காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் கருவி எது ? 


 ஹைக்ரோ மீட்டர்


English words & meanings :


ant that feels bad for his mistakes- Repentant

ஆரோக்ய வாழ்வு :


தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.







NMMS Q


தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த எம் முறை பயன்படுத்தப்படுகிறது


விடை :மரபு வகைப்பாட்டு முறை


நீதிக்கதை


இரண்டு அணில்கள்


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.


அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.


இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.


அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.


அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்


09.02.2023


* “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


* ஆவின் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


* செயல்பாடுகள், சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதலிடம்: சேலம் மருத்துவமனைக்கு 2-ம் இடம், கோவைக்கு 3-ம் இடம்.


* சென்னை, கோவை, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 63 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பு: மத்திய அரசு தகவல்.


* கடந்த 6 ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


* உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார்.


* எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.


*தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் தொடங்கியது.


* ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு.



Today's Headlines


* Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that the higher education enrollment of women has increased by 27 percent compared to last year due to the new women's program PUDHUMAI PENTHITTAM


 * Tamil Nadu Government has decided to fill the vacant posts of Avin through TNPSC.


 * Chennai Rajiv Gandhi Government General Hospital ranks first in Tamil Nadu in terms of operations and treatment: 2nd to Salem Hospital and 3rd to Coimbatore.


* Organizat of 63 Software Technology Parks across the country including Chennai, Coimbatore, and Puducherry said by Central Govt.


 * According to the central government, 30 lakh Indian students have gone abroad for higher education in the last 6 years.


 * Indian-American student Natasha Periyanayagam has been ranked in the list of smartest students in the world for the 2nd time.


 * Russia's ambassador to India, Denis Alibov, has said that the 3rd batch of S-400 missiles will be delivered to India soon.


 * National Junior Table Tennis Tournament started in Chennai.


* Indian player Subman Gill was shortlisted for The Best Player of the Month award for January.

 

இன்றைய (09-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

இன்றைய (09-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 09, 2023



உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சாதகமான உதவிகள் கிடைக்கும். நண்பர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். 


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 09, 2023



வியாபார ரீதியான பணிகளில் சிறு சிறு தாமதங்கள் தோன்றி மறையும். தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




கிருத்திகை : தாமதங்கள் மறையும்.


ரோகிணி : வசதிகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 09, 2023



எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திடீர் பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். சுபகாரியங்களில் விவேகம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.


திருவாதிரை : விவேகம் வேண்டும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 09, 2023



திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும். எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.


பூசம் : புரிதல் உண்டாகும். 


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 09, 2023



தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கோப உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். செல்லப்பிராணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மகம் : வரவு உண்டாகும். 


பூரம் : இன்னல்கள் குறையும். 


உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 09, 2023



எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : ஒற்றுமை மேம்படும். 


அஸ்தம் : சிந்தனைகள் உண்டாகும். 


சித்திரை : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 09, 2023



உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் தாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 09, 2023



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : லாபம் உண்டாகும். 


கேட்டை : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 09, 2023



உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : உதவி கிடைக்கும்.


பூராடம் : அனுகூலம் ஏற்படும்.


உத்திராடம் : கலகலப்பான நாள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 09, 2023



சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களால் சுபவிரயங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறை வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும். பகை குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : கவனம் வேண்டும்.


திருவோணம் : லாபம் ஏற்படும். 


அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும். 

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 09, 2023



மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வெளியுலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : குழப்பம் நீங்கும்.


சதயம் : பொறுப்புகள் மேம்படும். 


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 09, 2023



சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்து கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...