கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்

தகுதியான் வென்று விடல்.


பொருள்:

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்


பழமொழி :

Do not count your chickens before they are hatched


கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 


2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :


பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.


பொது அறிவு :


1. அடர்த்தி குறைவான கோள் எது? 


 சனி . 


 2. ஈராக்கின் பழைய பெயர் என்ன? 


 மெசபடோமியா


ஆரோக்ய வாழ்வு :


கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி நீரை பருகலாம். அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபடு வழி கிடைக்கும். மேலும், கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.


கணினி யுகம்


Ctrl+Tab : Switch between open tabs in browsers or other tabbed ... Ctrl+End : Its use is to move the cursor to the last of the document.  


மார்ச் 17


சாய்னா நேவால் 


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.


நீதிக்கதை


புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?


ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலிராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும்போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.


அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலிராமன் காவலர்களை பார்த்து என் மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்? என்று கேட்டான். அவர்களோ! உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார் என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.


தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான். இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலி மகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவ்வொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருப்பதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர். 


காவலர்கள் மன்னரை பார்த்து, அரசே! தெனாலிராமனின் மகன் பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும், என்று கூறினர். மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, திருடிய பூக்கள் எங்கே? என்று கேட்டார். காவலர்கள் மன்னரை பார்த்து, பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது என்று காவலர்கள் கூறினர்.


அரசர் தெனாலி மகனை பார்த்து, உன் கைகளை காட்டு என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை. மன்னர் தெனாலி மகனை பார்த்து, நீ பறித்த பூக்கள் எங்கே? என்று கேட்டார். அவனோ! மன்னரைப் பார்த்து, நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்! என்று கூறினான். மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.


இன்றைய செய்திகள்


17.03. 2023


🌸பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



🌸சென்னை ராணி மேரி கல்லூரியில் "பப்ளிக் போலீஸ்" என்ற தன்னார்வ அமைப்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.



🌸பொதுத் தேர்வில் 49000 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்விற்கு ஆப்சென்ட் : அதிர்ச்சியான பள்ளிக்கல்வித்துறை!



🌸புதிய கோவிட் வைரஸ்.‌ இஸ்ரேல் அடையாளம் தெரியாத இரண்டு புது வைரஸ்களை கண்டு பிடித்துள்ளது.



🌸சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்.. ஒரே மேடையில் ஸ்டாலின், தோனி, உதயநிதி.. நாளை திறப்பு!



🌸தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் ஒரு பந்து கூட போடாத நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானதால் விரக்தியில் உள்ளனர்


Today's Headlines



 🌸Minister Anbil Mahesh has said that there is no plan to conduct a special examination for students who have not written the 12th standard general examination.



🌸A seminar on "Public Police", a voluntary organization, was held at Queen Mary College, Chennai.  School Education Minister Anbil Mahesh and retired Justice Balakrishnan inaugurated the seminar.



🌸49000 students are absent for the English subject in the general exam : School education department was shocked.



🌸 New covid variant: Israel discovers two unidentified viruses.



🌸Kalaignar Karunanidhi Stand in Chepakkam.. Stalin, Dhoni and Udhayanidhi join together and opens tomorrow.



🌸South Africa and West Indies were frustrated because of the ODI was abandoned without a ball being bowled by the rain.

 

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துணிப் பதாகை (Cloth Banner - Ennum Ezhuthum - Let's Celebrate Learning)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துணிப் பதாகை (Cloth Banner - Ennum Ezhuthum - Let's Celebrate Learning)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துண்டுப் பிரசுரம் (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Notice Pamphlet)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துண்டுப் பிரசுரம் (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Pamphlet)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - வாகன பரப்புரை & பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ( Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Vehicle Campaign & Events to be carried out in Schools - Proceedings of Chief Education Officer)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - வாகன பரப்புரை & பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ( Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Vehicle Campaign & Events to be carried out in Schools - Proceedings of Chief Education Officer)...



>>>  எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - சிறப்புகள் குறித்து மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம்  விளக்கி *எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த  விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு  ஏற்படுத்தும் வகையில்* பள்ளி அளவில் *எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்* என்ற நிகழ்வு *20.3.23 & 21.3.23 ஆகிய தேதிகளில் 1,2 & 3 வகுப்பு மாணவர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும்*  நடைபெற  வேண்டும்.


✏️இந்நிகழ்வை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் 20.3.23 அன்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 20.3.23 மற்றும் 21.3.23 ஆகிய நாட்களில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை *நிகழ்வு அட்டவணையில் உள்ளபடி*  நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.


 ✏️இது சார்ந்த தகவல்களை 1,2 & 3 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய முறையில்  தெரிவித்து அவர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் நாளில் தங்கள் பள்ளியில் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.


 ✏️எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை கையாளும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை  தாங்கள் செய்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களின் படைப்புகள்  மற்றும் அரசால் வழங்கப்பட்ட TLM ஆகியவை கொண்டு வகுப்பறையை இன்றே     (17.3.23)  அழகு படுத்த வேண்டும். இதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.


✏️மேலும் *எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்* நடைபெறும் நாளன்று 9:45 மணி முதல் 11 மணி வரை   *என் மேடை* என்ற நிகழ்வு நடைபெறும். இதில் மாணவர்கள் தங்கள் *எண்ணும் எழுத்தும் பாடப் புத்தகங்களில் உள்ள  பாடல்களை* தனியாகவோ குழுவாகவோ *ஆடல் பாடல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து  பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் .*  ஆகவே இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் *ஆடல் பாடல்களுக்கான எண்ணம் எழுத்தும் பாடல்களை* தேர்வு செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 ✏️மேலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு *நிகழ்வு அட்டவணையில்* கொடுக்கப்பட்டுள்ள மூன்று செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டை பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளளதால் அது சார்ந்தும் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



>>> HD Print Banner...


>>> Bid Notice pdf...



அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம் (Aadhaar card details can be updated online for free for the next 3 months)...



 அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை  இணையம் மூலம் இலவசமாக  புதுப்பிக்கலாம் (Aadhaar card details can be updated online for free for the next 3 months)...


அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை  இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்.


மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும். இந்த சேவையை மைஆதார் ‘myAadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். 


ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும்.


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள்  myaadhaar.uidai.gov.in எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Keep Demographic Details Updated to Strengthen Your #Aadhaar.


If your Aadhaar had been issued 10 years ago & had never been updated - you may now upload Proof of Identity & Proof of Address documents online at myaadhaar.uidai.gov.in ‘FREE OF COST’ from 15 March - June 14, 2023.


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP 2022-27) DD- பொதிகை சேனலின் நேரடி ஃபோன்- இன்- ப்ரோக்ராம் - முறைசாரா & வயது வந்தோர் கல்வி, இயக்குநரின் தகவல் (New India Literacy Program (NILP 2022-27) DD-Podhigai Channel Direct Phone- In- Program - Non-Formal & Adult Education, Director Information)...

 


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP 2022-27) DD- பொதிகை சேனலின்  நேரடி ஃபோன்- இன்- ப்ரோக்ராம் - முறைசாரா & வயது வந்தோர் கல்வி, இயக்குநரின் தகவல் (New India Literacy Program (NILP 2022-27) DD-Podhigai Channel Direct Phone- In- Program - Non-Formal & Adult Education, Director Information)...


அன்புள்ள அனைவருக்கும், 


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP 2022-27) மாவட்ட மற்றும் வட்டார மட்டங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளின் குறிப்பிடத்தக்க ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


 இப்போது, ​​இத்திட்டத்தின் கீழ் 28848 மையங்களில் பதிவு செய்த 5.28 லட்சம் கற்பவர்களுக்கு இறுதி அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வை 19.03.23 (ஞாயிற்றுக்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக, டிடி-பொதிகை சேனலில் 17.03.23 (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரடி ஃபோன்-இன்-ப்ரோக்ராம் திட்டமிடப்பட்டுள்ளது.


 எனவே, கற்றவர்கள், தன்னார்வலர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், ஆர்வமுள்ள ஆசிரியர்கள், NSS/NCC/NYK தன்னார்வத் தொண்டர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், படித்த/வேலையற்ற இளைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் கேள்விகளை எழுப்பி வயது வந்தோர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


DD- பொதிகை சேனலின் பின்வரும் அழைப்பாளர் லைன்களைப் பயன்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ளபடி நேரடி ஃபோன்-இன்-ப்ரோக்ராமின் போது வயது வந்தோருக்கான மற்றும் கல்வியறிவற்றவர்களுக்கு கல்வி அவசியம் குறித்த ஐயங்களுக்கு விடைகள் அறியலாம். 

812 444 6611 

812 444 6622 

944 490 1011 


இயக்குனர்,

முறைசாரா & வயது வந்தோர் கல்வி, சென்னை-6.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Dear All, 


       I wish to state that the Puthiya Bharatha Ezhutharivu Thittam (NILP 2022-27) is being successfully implemented with the remarkable supports of all officers at the district and Block levels. 


      Now, it is planned to conduct final Basic Literacy Asseessment Test to 5.28 lakh learners enrolled in 28848 centers under this scheme on 19.03.23(Sunday).  


      In this connection, a live Phone-in-Programme is scheduled in DD-Podhigai channel from 12 PM to 1 PM on 17.03.23(Friday).


      Hence, the Learners, Volunteers, BRTEs, interested Teachers, NSS/NCC/NYK Volunteers, Retired Govt officials, Educated/ Unemployed youths, Homemakers and Common Public are requested to raise their queries to know the salient features of the programme/ importance of Adult Education & necessity to educate the Adult Illiterates etc., during the live Phone-in-Programme as mentioned above by utilizing following Caller Lines of DD-Podhigai channel. 


812 444 6611

812 444 6622

944 490 1011


Director

Non-Formal & Adult Edn

Chennai-6.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


17.3.23 முதல் ஓசூரில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Spiritual Tourism from Hosur to Tirupati from 17.3.23 - Tamil Nadu Tourism Development Board)...



>>> 17.3.23 முதல் ஓசூரில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Spiritual Tourism from Hosur to Tirupati from 17.3.23 - Tamil Nadu Tourism Development Board)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...