கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருபெயர்ச்சி பலன்கள் - மேஷம் - 2023 - 2024

 



குருபெயர்ச்சி பலன்கள் - மேஷம் - 2023 - 2024


இதுவரை மேஷ ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

புத்திர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

களத்திர ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் துரிதமாகவும், வேகமாகவும் செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!!


குரு ஜென்ம ராசியில் நிற்பதால் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர சிந்தனைகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வித்தியாசமான கனவுகளினால் அடிக்கடி குழப்பங்கள் உண்டாகும்.


பலன்கள் :


குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமான தம்பதிகளுக்கு மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தொழில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவு பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் திருத்தல மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கு அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக தொழில்களில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.

பொருளாதாரம்:


புதுமையான சில சிந்தனைகளின் மூலம் வரவுகளை மேம்படுத்துவீர்கள். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். தூக்கமின்மையால் அடிக்கடி சோர்வும், கோபமும் ஏற்படும். சில நேரங்களில் அலர்ஜி தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு:


பெண்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பெற்றோர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். விருப்பமான சில விஷயங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த செயல்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் குறையும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றியும், பாராட்டும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் உண்டாகும். சில நேரங்களில் தனிமையை விரும்புவீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.

வியாபாரிகளுக்கு:


புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். விவசாய பணிகளில் உற்பத்தி அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் வரவுகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய துறைகளில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். பாதியில் நின்றுபோன பணிகளை செய்து முடிப்பீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து செல்வதால் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். பேச்சுக்களால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் உட்கட்சி விவகாரங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் தேவையற்ற பகைமை உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்:


ஜென்ம ராசியில் குரு சஞ்சாரம் செய்வதினால் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கவனம்:


ஜென்மத்தில் குரு சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதால் திடீரென முடிவு எடுப்பதை தவிர்க்கவும். எதிலும் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.

வழிபாடு:


திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரரை வணங்கி வர சிந்தனையில் தெளிவும், உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.


ஏழை மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதனால் நிம்மதி உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.



நகராட்சி நிர்வாகத்துறையில் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு ஊதியத்தை மறு நிர்ணயம் செய்து நிதித்துறை அரசாணை வெளியீடு (G.O.Ms.No.86, Dated: 28-03-2023 - Revised Scales of Pay, 2009 – Revision of scales of pay for the post of Superintendent in Municipal Administration Department – Amendment - Orders - Issued)...


>>> நகராட்சி நிர்வாகத்துறையில் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு ஊதியத்தை மறு நிர்ணயம் செய்து நிதித்துறை அரசாணை வெளியீடு (G.O.Ms.No.86, Dated: March 28, 2023 - Revised Scales of Pay, 2009 – Revision of scales of pay for the post of Superintendent in Municipal Administration Department – Amendment - Orders - Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண்: 175

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.


பொருள்:

கலைஞர் உரை :

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?


பழமொழி :

Accept if the counsel be good no matter who gave it.


அறிவுரை நல்லதாய் இருப்பின் யாராயினும் கேள் .


இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 


2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.


பொன்மொழி :


மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.


பொது அறிவு :


1. தமிழர்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்க நகரம் எது? 


 டர்பன் . 


 2. உலகிலேயே மிகவும் ஆழமான ஏரி எது?


 பைகால்.


English words & meanings :


 quintuplets - 5 children born at the same time. noun. ஒரே தடவையில் பிறக்கும் 5 குழந்தைகள். பெயர்ச் சொல்


ஆரோக்கிய வாழ்வு


கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது மற்றும் விரைவாக வளர்சிதை மாற்றமடைய உதவுகிறது. இதனால், உங்கள் உடல் எடையும் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். கறிவேப்பிலை உங்கள் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க முனைகிறது மற்றும் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தும் போது, இரத்த சர்க்கரை அளவு சீராகும்.



ஏப்ரல் 17 


ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது.[1] உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.


நீதிக்கதை


கதை :


கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 




ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 




மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 




இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 




ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 




மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 


நீதி :


பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.


இன்றைய செய்திகள்


17.04. 2023


* கிருஷ்ணகிரி அருகே பறை இசை கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு.


* சென்னை- தென்பிராந்திய  ராணுவ அதிகாரியாக லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் பொறுப்பேற்றுக் கொண்டார்.


* சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.


* மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


* கலவர பூமி ஆன சூடான்: விமான நிலையத்தைக் கைப்பற்றிய துணை ராணுவப் படை; இந்தியர்களுக்கு எச்சரிக்கை.


* தேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 2 தங்கம் வென்றார்.


* இஷன் கிஷன் அதிரடி. 5 -விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி.


* சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்.


Today's Headlines


* A 17th-century midden found near Krishnagiri for parai drum musicians.


* Chennai- Lieutenant General Karanbir Singh Brar has taken charge as the South Regional Army Officer.


 * Chief Minister M.K.Stalin was proud at the book launch ceremony held in Chennai that studies show that Tamils ​​have the right to celebrate the culture of the Indus Valley.


 * The Central Armed Police Forces (CAPF) written test will henceforth be conducted in 13 state languages ​​including Tamil besides Hindi and English, the Union Home Ministry has announced.


 * Sudan in turmoil: Paramilitary force seizes airport;  Warning to Indians.


* Dr. Sivanthi Aditanar, Assistant Professor, College of Physical Education, won 2 gold medals in the National Masters Athletics Competition.


 * Ishan Kishan action.  Mumbai Indians won by 5 wickets.


 * Ticket sales will start on 18th for the IPL match to be held on 21st in Chepauk.

 

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் குறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செய்தி வெளியீடு (Fortified Rice Provision - Tamil Nadu Government Cooperative, Food and Consumer Protection Department Press Release)...



>>> செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் குறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செய்தி வெளியீடு (Fortified Rice Provision - Tamil Nadu Government Cooperative, Food and Consumer Protection Department Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வித் துறை - 2022-23ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்பு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் விவரம் (FOREIGN TOUR - ITK Teachers List) - கடவுச் சீட்டு (Passport) பெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019523/ எம்/ இ2/ 2022, நாள்: 12-04-2023 (Department of School Education - Hon'ble Minister of School Education for the year 2022-23 - Announcement of Grant Request - Notification of Selected Illam Thedi Kalvi Co-ordinators Details for Foreign Tour - Obtaining Passport - Proceedings of Commissioner of School Education RC.No: 019523/ M/ E2/ 2022, Dated: 12-04-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறை - 2022-23ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்பு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் விவரம் (FOREIGN TOUR - ITK Teachers List) - கடவுச் சீட்டு (Passport) பெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019523/ எம்/ இ2/ 2022, நாள்: 12-04-2023 (Department of School Education - Hon'ble Minister of School Education for the year 2022-23 - Announcement of Grant Request - Notification of Selected Illam Thedi Kalvi Co-ordinators Details for Foreign Tour - Obtaining Passport - Proceedings of Commissioner of School Education RC.No: 019523/ M/ E2/ 2022, Dated: 12-04-2023)...



மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலக்கிய மன்றம் , வினாடி வினா போட்டிகள் , சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்தப்பட்டு 150 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பார்வை ( 2 ) -இல் காணும் செயல்முறைகள், நா.10.04.2023 - இன்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா செல்ல கடவுச் சீட்டுகள் விண்ணப்பித்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2022-2023ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் (NMMS) தேர்வு - கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை (NMMS Exam - Total Number of Passed Students Educational District wise)...

 

>>> 2022-2023ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் (NMMS) தேர்வு - கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை (NMMS Exam - Total Number of Passed Students Educational District wise)...



>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) - பிப்ரவரி 2023 - தேர்வான மாணவர்களின் பெயர் பட்டியல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (RDO) சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...

 

>>> தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...