கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதிய திட்டம் : தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றியது இமாசலப் பிரதேச அரசு (Old Pension Scheme: Himachal Pradesh Govt Fulfills Election Time Promise - Office Memorandum of Finance (Pension) Department of Government of Himachal Pradesh)...


>>> பழைய ஓய்வூதிய திட்டம் : தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றியது இமாசலப் பிரதேச அரசு (Old Pension Scheme: Himachal Pradesh Govt Fulfills Election Time Promise - Office Memorandum of Finance (Pension) Department of Government of Himachal Pradesh)...


மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும் (Backlog vacancies under 4% reservation for differently abled persons will be filled within one year)...

 மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும் (Backlog vacancies under 4% reservation for differently abled persons will be filled within one year)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள்களில் வழங்கப்படுவது போன்று கருணாநிதி பிறந்த நாளிலும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் (Sweet Pongal will be served in schools on Karunanidhi's birthday just like காமராஜர், Anna, MGR and Jayalalitha birthdays)...

 காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள்களில் வழங்கப்படுவது போன்று கருணாநிதி பிறந்த நாளிலும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் (Sweet Pongal will be served in schools on Karunanidhi's birthday just like காமராஜர், Anna, MGR and Jayalalitha birthdays)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பொது வாழ்வில் நேர்மை - இன்றைய சிறுகதை (Honesty in Public Life - Today's Short Story)...


பொது வாழ்வில் நேர்மை - இன்றைய சிறுகதை (Honesty in Public Life - Today's Short Story)...


வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை... 

இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.


ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்.


"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார் அரசர்.


அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.


சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.


குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.


சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.


திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?'' என்றான்.


அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் மன்னர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார் சாணக்கியர்.


திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்'' என்று சத்தியம் செய்தார்கள்.


கதையின் நீதி:


பொது வாழ்க்கையில் ஒருவர்  நேர்மையாக இருக்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கக் கல்வித் துறை - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 482/ ஆ3/ 2023, நாள்: 17-04-2023 (Elementary Education Department - Passing Teacher Eligibility Test (TET) is mandatory for promotion to B.T. Assistant (Graduate Teacher) - Aranthangi District Educational Officer (Elementary Education) Proceedings RC.No: 482/ A3/ 2023, Dated: 17-04-2023)...

 

>>> தொடக்கக் கல்வித் துறை  - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 482/ ஆ3/ 2023, நாள்: 17-04-2023 (Elementary Education Department - Passing Teacher Eligibility Test (TET) is mandatory for promotion to B.T. Assistant (Graduate Teacher) - Aranthangi District Educational Officer (Elementary Education) Proceedings RC.No: 482/ A3/ 2023, Dated: 17-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...

 



குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மீன ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சத்ரு ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் விவேகத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!!

குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் வாக்கு பலிதமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து நிம்மதி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தன, தான்ய விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். போட்டி, பொறாமை கொண்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்குகளில் இருந்துவந்த சட்ட சிக்கல் குறைந்து எண்ணிய முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.


குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். விலகி சென்ற தூரத்து உறவினர்கள் விரும்பி வருவார்கள். பிற மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விசா கிடைப்பதில் இருந்த தாமதங்கள் விலகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.

பொருளாதாரம்:


எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுத்திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்:


நோய், நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். மூச்சுத்திணறல், சளி தொந்தரவு போன்றவைகள் குறையும்.

பெண்களுக்கு:


பெண்கள் மனம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் மீதான கவலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் சந்தேக உணர்வுகள் மேம்படும். கல்வி கற்றவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். ஞாபக மறதி பிரச்சனைகள் குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். விளையாட்டு விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாகும். நண்பர்கள் வழியில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் மேம்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:


தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். விவசாய பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசு சார்ந்த வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் உள்ள சில தடைகளால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அறிமுகமில்லாத துறையில் பெரிய அளவிலான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். சிலருக்கு அரசு தொடர்பான மரியாதைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முற்போக்கான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். துறை சார்ந்த சபைகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

நன்மைகள்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். இழுபறியான சுபகாரியங்கள் எதிர்பாராத சில உதவிகளால் நிறைவுபெறும்.

கவனம்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதும், பேச்சுக்களால் மற்றவர்களை அடக்கி ஆளும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது.

வழிபாடு:


கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடி குரு பகவானை வியாழக்கிழமையில் தரிசித்து வரவும்.


வயது முதிர்ந்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மேன்மையை உருவாக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

களத்திர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு, எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!!

குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரத்தில் இருக்கும் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாடு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.


குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.


குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.

பொருளாதாரம்:


பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். அஜீரணம், உடல் சோர்வு போன்றவை அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு:


பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வெளி இடங்களுக்கு போகும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். பிரிந்து போன உறவினர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். கடினமான முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசு வழியில் எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கான செயல்களில் ஆர்வம் மேம்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகத்தில் திடீர் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் மேம்படும். திட்டமிடாத சில பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். சட்டம் மற்றும் அதிகாரம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு:


வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது நல்லது. புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப ஆதாயமும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும். வியாபார ரீதியாக கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். வெளியூர் தொடர்பான நபர்களின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு:


கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். நவீனத்துவமான முறைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த படைப்புகள் வெளிப்படும். 

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. எதிராக இருப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அரசு ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமான வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்து செல்வது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.

நன்மைகள்:


மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் மேம்படும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

கவனம்:


எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் துரிதத்தை விட விவேகம் சிறப்பானதாகும்.

வழிபாடு:


செவ்வாய்க்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.


ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வது மேன்மையை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...