கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...

 



குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மீன ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சத்ரு ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் விவேகத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!!

குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் வாக்கு பலிதமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து நிம்மதி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தன, தான்ய விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். போட்டி, பொறாமை கொண்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்குகளில் இருந்துவந்த சட்ட சிக்கல் குறைந்து எண்ணிய முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.


குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். விலகி சென்ற தூரத்து உறவினர்கள் விரும்பி வருவார்கள். பிற மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விசா கிடைப்பதில் இருந்த தாமதங்கள் விலகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.

பொருளாதாரம்:


எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுத்திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்:


நோய், நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். மூச்சுத்திணறல், சளி தொந்தரவு போன்றவைகள் குறையும்.

பெண்களுக்கு:


பெண்கள் மனம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் மீதான கவலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் சந்தேக உணர்வுகள் மேம்படும். கல்வி கற்றவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். ஞாபக மறதி பிரச்சனைகள் குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். விளையாட்டு விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாகும். நண்பர்கள் வழியில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் மேம்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:


தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். விவசாய பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசு சார்ந்த வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் உள்ள சில தடைகளால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அறிமுகமில்லாத துறையில் பெரிய அளவிலான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். சிலருக்கு அரசு தொடர்பான மரியாதைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முற்போக்கான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். துறை சார்ந்த சபைகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

நன்மைகள்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். இழுபறியான சுபகாரியங்கள் எதிர்பாராத சில உதவிகளால் நிறைவுபெறும்.

கவனம்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதும், பேச்சுக்களால் மற்றவர்களை அடக்கி ஆளும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது.

வழிபாடு:


கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடி குரு பகவானை வியாழக்கிழமையில் தரிசித்து வரவும்.


வயது முதிர்ந்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மேன்மையை உருவாக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...