கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2023 - School Morning Prayer Activities...

  


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :219


நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


விளக்கம்:


உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.



பழமொழி :

A young calf knows no fear


இளங்கன்று பயமறியாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


ஒரு புத்திசாலி பல சாதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர், ஆயினுங்கூட மேலும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். --எட் பார்க்கர்


பொது அறிவு :


1. சர்தார் சரோவர் அணை எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?


விடை: நர்மதா நதி


2. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடருக்கு இடையே ஓடும் ஆறுகள் எது?


விடை: நர்மதை நதி



English words & meanings :


 kiwi - a wingless bird சிறகற்ற ஒருவகை பறவை;

 lad - a boy சிறுவன்


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது.


நீதிக்கதை


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.



நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கி  கொள்ளவேண்டும்.


இன்றைய செய்திகள்


19.07. 2023


*வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடம் திறப்பு. பிரதமர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


*மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.


*மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


*வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்த முடிவு.


*இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிற்பங்களை ஒப்படைத்தது அமெரிக்கா.


*இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம். நான்காவது போட்டி நாளை தொடக்கம்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு.


Today's Headlines


*Inauguration of new building of Veera Savarkar International Airport.  Prime Minister inaugurated through video presentation.


 * Tamil Nadu government issued an ordinance to allocate 4.5 crore rupees to provide scooters for disabled people.


 *There is a ban on fishing in the Gulf of Mannar.


 *Decision to double entry fee at Vandalur Zoo.


 *US hands over 15 ancient sculptures smuggled from India.


 *Australia keen to win Ashes Test series against England.  The fourth match starts tomorrow.


 *Asian Games: 800-strong Indian team participates.

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023 - School Morning Prayer Activities...

  


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :218


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.


விளக்கம்:


செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.


பழமொழி :

A wild goose never lay a lame egg


புலிக்கு பிறந்தது பூனையாகுமா.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்


பொது அறிவு :



1. சோம்நாத் கோவில் இந்தியாவின் எந்த மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது?


விடை: குஜராத்


2. உலகிலேயே அதிக இரத்த அழுத்தம் உள்ள விலங்கு எது?


விடை: ஒட்டகச்சிவிங்கி



English words & meanings :


 incitement - stimulus ஊக்கம்; 

jealous - envious பொறாமை


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.


ஜூலை 18


நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்



நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்

. அமைதிக்கான நோபல் பரிசு  இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.


நீதிக்கதை


விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான்.


 அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.


சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது.


எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு   கொண்டிருந்தது.


ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சிடம் ,ஒரு கோழிக்குஞ்சு வானத்தில்   மேகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, "அச்சோ..!   அந்த கழுகினை பார்..! எவ்வளவு   உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது."   என்று கவலையோடு கூறியது.


இதைக்கேட்ட அந்த கழுகு குஞ்சும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது.." என்றது.


கழுகு குஞ்சிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.


இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட மற்ற மாணவர்களோடு சேர்ந்து தங்களின் திறனை உணராமல், இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.


 நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.



"பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்".


இன்றைய செய்திகள்


18.07. 2023


*ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.


*தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாய தம்பதி. ஒரே மாதத்தில் ரூபாய் 2.8 கோடி வருமானம் ஈட்டினார்.


*புவி சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-3 விண்கலம் சுற்றிவரும் உயரம் இரண்டாவது முறையாக அதிகரிப்பு.  41,600 கிலோமீட்டர் உயரத்தில் விண்கலம் இருப்பதாக இஸ்ரோ தகவல்.


*நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்று சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அல்காரஸ். 


*வாஷிங்டன் பிரீடம் அணிக்கு எதிரான போட்டியில் டெக்ஸாஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்  உட்பட 39 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அசத்தினார்.


Today's Headlines


*Farmers are happy with rise in turmeric prices in Erode.


 *Farmer couple who became millionaires by selling tomatoes.  He earned Rs 2.8 crores in a single month.


 *Chandrayaan-3 orbiting altitude is increasing for the second time.  ISRO reports that the spacecraft is at an altitude of 41,600 km.


 *Algares has captured the attention of international fans by winning the Wimbledon trophy for the first time after defeating the star player Djokovic.


 * In the match against the Washington Freedom team, the star player of Texas Bravo scored 76 runs in 39 balls including 6 sixes and 5 fours.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வி - பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடுவதற்கான அரசாணை (நிலை) எண்: 127, நாள்: 12-07-2023 வெளியீடு (School Education - Part-time Vocational Teachers Pension Calculation G.O. (Ms) No: 127, Dated: 12-07-2023 Issued)...


>>>  பள்ளிக் கல்வி - பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடுவதற்கான அரசாணை (நிலை) எண்: 127, நாள்: 12-07-2023 வெளியீடு (School Education - Part-time Vocational Teachers Pension Calculation G.O. (Ms) No: 127, Dated: 12-07-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவர அறிக்கையை ஜூலை 25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு (Order to file property statement of registration officers and all employees and their families by July 25)...



>>> பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவர அறிக்கையை ஜூலை 25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு (Order to file property statement of registration officers and all employees and their families by July 25)...


பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25-க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு!


சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க சுற்றறிக்கை ஆணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட சில வகை செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து அரசாணை (G.O.No.: 218, Dated:13-07-2023) வெளியீடு (Government Order (G.O.No.: 218, Dated: 13-07-2023) issuing to remove restrictions on certain types of expenditure imposed during the Corona period due to improvement in the financial condition of the Government of Tamil Nadu)...

 

>>> தமிழ்நாடு அரசின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட சில வகை செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து அரசாணை (G.O.No.: 218, Dated:13-07-2023) வெளியீடு (Government Order (G.O.No.: 218, Dated: 13-07-2023) issuing to remove restrictions on certain types of expenditure imposed during the Corona period due to improvement in the financial condition of the Government of Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :217


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.


விளக்கம்:


பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.


பழமொழி :

All work and no play makes Jack a dull boy


ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு



இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவன் தேடலும் அறிவும் வாழக்கை பாதையின் முடிவுக்கு வரும்


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?


விடை: நீலகிரி உயிர்க்கோள காப்பகம், தமிழ்நாடு


2. இந்தியாவின் மிகப்பெரிய அணை எது?


விடை: பக்ரா நங்கல் அணை, இமாச்சல பிரதேசம்


English words & meanings :


 fantasy – imagining impossible things, நடை முறைக்கு சாத்தியம் இலலாத கற்பனை.gusto – enjoyment in doing something.ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் ஆர்வ உணர்வு


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.


நீதிக்கதை


அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் நின்றன.  பாலத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும்.


  இது தெரிந்தும் இரண்டு ஆடும் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது.


உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" .என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் சண்டையிட தொடங்கியது.


சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.


நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


17.07. 2023

*சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞான குழுவினருக்கும் பூட்டான் பிரதமர் வாழ்த்து.


*10 மற்றும் 12 வகுப்பில் இடைநின்ற மாணவர்களுக்கும்,தேர்ச்சி பெற்றும் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களுக்காகவும் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்க மேலாண்மை குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு. 


*மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.  2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 

40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர்.


*நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்புகளில் சேர நேற்று முதல் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.


*ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு- ருதுராஜ் கெய்க்வாட் சொல்கிறார்.


*முதல் ஒரு நாள் போட்டி இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி அபார வெற்றி.


Today's Headlines


* ISRO informs that Chandrayaan-3 spacecraft has been successfully boosted into orbit for the first time.

 Prime Minister of Bhutan congratulates PM Modi and ISRO science team on Chandrayaan-3 success.


 *Government has organized a management committee meeting to advise students who have dropped out of class 10 and 12 and who are not continuing their studies after they had got pass.


 *Publication of rank list for medical courses.  For medical and dental courses in the academic year 2023-2024

 40,200 applications received - Minister


 *You can apply online from yesterday to 26th 5 pm for admission in nursing diploma courses in the current academic year.


 *The goal is to win gold in the Asian Games - says Ruduraj Gaekwad.


 *Bangladesh women's team beat India in the first one-day match with a huge victory.

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2023 - School Morning Prayer Activities...

 

 திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :216


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.


விளக்கம்:


பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.


பழமொழி :

A tree is known by its fruit


நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 


2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :


உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே

காமராஜர்


பொது அறிவு :


1.காமராஜர் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார்? 


ஆறாம் வகுப்பு 


2. தமிழக முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற ஆண்டு? 


1954


English words & meanings :


 egoism - selfishness சுயநலம்; farrier - a veterinary doctor கால்நடை மருத்துவர்


ஆரோக்ய வாழ்வு :


வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


ஜூலை 15


காமராசர்  அவர்களின் பிறந்த நாள்




காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


நீதிக்கதை


நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.


அரசன் கோபமாக " நான் என்ன சின்னக் குழந்தையா?  இதை வைத்து விளையாடுவதற்கு" என்றுக் கேட்கிறார்.


சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார்.


"இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள்" என்கிறார்.


அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்கிறார்.


முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.


சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.


சிற்பி "மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்கிறார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.


இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.


இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.


பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.


இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.


அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார்.


என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.


அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.



சிற்பி "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் வாழ்வில் உயர முடியும். கேட்பவற்றில் நல்லவைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும். நல்லவைகளை மாத்திரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதனை இளவரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே இந்த பொம்மைகளை தருகிறேன்" என்றார். அரசனும் சிற்பிக்கு நன்றி கூறினார்.


இன்றைய செய்திகள்


15.07. 2023


*ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு. 7 ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய இந்த விண்கலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.


*ஏழை மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைக்க 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.


*மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு.


*பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைய இருப்பது இந்தியாவிற்கே பெருமை.  

பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.


*ஆசிய தடகளப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கம்.


*அமெரிக்க ஓபன் பேட்மிட்டன் பி.வி.சிந்து - லக்ஷயா சிங் கால் இறுதிக்கு தகுதி. தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இஸ்ரேலின் ஜில்பர் மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.


Today's Headlines


* Chandrayaan-3 is expected to land on August 23.  The spacecraft, which includes 7 probes, has been sent to explore the southern part of the Moon.


 * To halve the medical expenses of the poor people, 'Medicine in search of people' - Chief Minister Perumidham.


 * The artist's centenary library, which has been built on a grand scale in Madurai, will be inaugurated today.


 * It is India's pride to have a statue of Thiruvalluvar in France.

 Prime Minister Modi spoke with pride among Indians living in France.


 *Three gold medals for India in a single day at the Asian Athletics Championships.


 *US Open Badminton PV Sindhu - Lakshya Singh qualify for quarter-finals.  Tamil Nadu's Shankar Muthuswamy defeated Israel's Gilber Man to qualify for the quarter-finals.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...