கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்
குறள் :236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
விளக்கம்:
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
பழமொழி :
Bare words buy no bar ley
வெறுங்கை முழம் போடுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.
பொன்மொழி :
எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன். விவேகானந்தர்
பொது அறிவு :
1. இந்தியாவில் பத்திரிகை துறையில் மிக உயர்ந்த விருது எது?
விடை: ராம்நாத் கோயங்கா
2. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?
விடை: சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு
English words & meanings :
abhor- feel hatred,வெறுப்பு
appease- to make peace with சமாதானப்படுத்த.
ஆரோக்ய வாழ்வு :
வெந்தயம் : இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.
நீதிக்கதை
கோடீஸ்வரர் ரகுராமன் தனது மகனுடன் காரில் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று கடவுளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர்,அங்கிருக்கும் பிச்சைக்காரர்களைப் பார்த்தார்.
அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 கொடுத்தார். அப்பா எதற்குப் பணம் கொடுக்கிறீர்கள்? என மகன் கேட்டான்.காரில் சென்று கொண்டிருக்கும்போது அப்பா மகனிடம் 'நாம் இவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என மூன்று மாதம் கழித்து பார்க்கலாம்' என்றார்.
அப்பா சொன்னது புரியாவிட்டாலும் சரி என்றான். மூன்று மாதங்கள் கழித்து ரகுராமன் அதே கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் பணம் கொடுத்த மூன்று பேரில் ஒருவர் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார்.
அந்தப் பிச்சைக்காரன் அருகில் சென்ற ரகுராமன் 'ஏனப்பா நான்தான் உனக்குப் பணம் கொடுத்தேனே... நீ அதை என்ன செய்தாய்?' என்று கேட்டார்.
நீங்கள் கொடுத்த பணத்தை அப்படியே வைத்திருந்து தினமும் அதில் செலவு செய்து சாப்பிட்டேன். எல்லாம் தீர்ந்துவிட்டது. மறுபடியும் நான் இதே பிச்சை எடுக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். என்றான்.மற்றவர்கள் எங்கே? என்றார் ரகு ராமன்.
எதிரே உள்ள ஐஸ்கிரீம்கடையை பாருங்கள்....அங்கே ஐஸ்கிரீம் கடை வைத்து இன்று நல்ல வியாபாரம் செய்து நல்ல நிலைக்கு வந்து விட்டான்' என்று பதில் சொன்னான்.
ரகுராமன் தன் மகனுடன் அந்தக் கடைக்குள் நுழைந்தார். என்னை தெரிகிறதா? என்றார்.ஐயா பணம் கொடுத்த உங்களை எப்படி மறக்க முடியும்? என்று சொன்னான் அவன்.
'நீங்கள் கொடுத்த பணத்தில் நன்றாக வேலை செய்து வருகிறேன்.நான் நேர்மையாக உழைத்ததால் இன்று அதிகமான லாபம் கிடைத்தது. நல்ல நிலையில் இருக்கிறேன். இதற்கு நீங்கள்தான் காரணம் என்று அவரை வாழ்த்தி, பணிவுடன் பேசினான்.
சரி மற்ற ஒருவனுக்கும் பணம் கொடுத்தேனே, அவன் என்ன ஆனான்? என்று கேட்டார். நீங்கள் கொடுத்த பணத்தில் அவன் ரேஸ் குதிரை,வாங்கி தோற்றதனால் அவன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அதேபோல் மறுபடியும் பிச்சை எடுக்கிறான்,என்றான்.
தன் மகனிடம் பார்த்தாயா... நமக்கு வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால், நன்கு முன்னேறலாம் என்றார்.அப்பா சொன்ன அறிவுரை இப்போது மகனுக்குப் புரிந்தது. வாய்ப்பு கொடுத்தும் அதில் ஒருவர்தான் அந்தப் பணத்தை நல்ல வழியில் செலவு செய்து. இன்று நல்ல நிலையில் இருக்கிறார். எனவே கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும்.
இன்றைய செய்திகள்
11.08. 2023
*சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது.
*முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மஞ்சள் நிற பஸ்களை தொடங்கி வைக்கிறார்.
*தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணமும் இறக்கை கட்டி பறக்கிறது.
*இமாச்சலில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.
*உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25ம் தேதி முதல் தொடங்குகிறது.
*ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார் - சுப்மன் கில்.
Today's Headlines
* China's commercial rocket CERES-1 Y7 launched into space.
* Chief Minister
M. K. Stalin starts yellow-coloured buses today
*Due to continuous Vacation: Airfare also took a flight
* Moderate earthquake of 3.4 Richter in Himachal.
*World Cup Cricket: Online ticket sales will start from the 25th.
* Subman Gill Moved to fifth place in the ODI rankings
TNSED Administrators App New Version: 0.0.74 - Updated on 10-08-2023 - OOSC Module Changes, Bug Fixing and Performance Improvements...
* TNSED Administrators App
* What's is new..?
*🎯 OOSC Module Changes...
*🎯 Bug Fixing and Performance Improvements...
*_UPDATED ON 10 AUGUST - 2023
*_Version: Now 0.0.74
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TNSED Schools App New Version: 0.0.79 - Updated on 10-08-2023 - OOSC module changes, Bug Fixing and Performance Improvements...
* TNSED schools App
* What's is new..?
*🎯 OOSC module changes...
*🎯 Bug Fixing and Performance Improvements...
*_UPDATED ON 10 AUGUST - 2023
*_Version: Now 0.0.79
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி மன்ற செயல்பாடுகள் - 2023-2024 ஆகஸ்ட் மாதம் பள்ளிகளில் நிலா சிறார் திரைப்படம் திரையிடும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/ எம்/ இ1/ 2023, நாள்: 09-08-2023 - ஆகஸ்ட் 2023 மாதத்தில் நிலா திரைப்படம் திரையிடல் (School Forum Activities - Proceedings of Director of School Education regarding the guidelines to be followed while screening Nila Children's Movie in schools in August Rc.No: 34785/ M/ E1/ 2023, Date: 09-08-2023 - Screening of Nila Movie in August 2023)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Teachers suffer as online training links are not available - Daily News
இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி Teachers suffer as online training links are not available - Dail...