கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் - அரசு உதவி பெறும் பள்ளியில் (Management Service) பணியாற்றிய பணிக் காலத்தையும் சேர்த்து ஒரே பதவியில் 30 வருடம் பணி நிறைவு - பெருஞ்சிறப்பு நிலை Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Elementary / Middle / High /Higher Secondary School Secondary Grade Teachers - Completion of 30 years in the same post including tenure in Government Aided School (Management Service) - Subject to award of Super Grade - Education Officer's Circular)...

 


தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் - அரசு உதவி பெறும் பள்ளியில் (Management Service) பணியாற்றிய பணிக் காலத்தையும் சேர்த்து ஒரே பதவியில் 30 வருடம் பணி நிறைவு - பெருஞ்சிறப்புநிலை (Super Grade) வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Elementary / Middle / High /Higher Secondary School Secondary Grade Teachers - Completion of 30 years in the same post including tenure in Government Aided School (Management Service) - Subject to award of Super Grade - Education Officer's Circular)...




அக்டோபர் மாத (06.10.2023) பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் (SMC Meeting) நடத்துதல் - 5 வகை துணைக் குழுக்கள் அமைத்தல் & அதன் பணிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 19-09-2023 (Conduct of School Management Committee Meeting (SMC Meeting) for the month of October (06.10.2023) - Formation of 5 types of sub-committees & its functions - Proceedings of State Project Director Rc.No: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 19-09 -2023)...

 

 

 அக்டோபர் மாத (06.10.2023) பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் (SMC Meeting) நடத்துதல் - 5 வகை துணைக் குழுக்கள் அமைத்தல் & அதன் பணிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 19-09-2023 (Conduct of School Management Committee Meeting (SMC Meeting) for the month of October (06.10.2023) - Formation of 5 types of sub-committees & its functions - Proceedings of State Project Director Rc.No: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 19-09 -2023)...



>>> Click Here to Download Proceedings of State Project Director Rc.No: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 19-09 -2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools App New Version: 0.0.86 - Updated on 21-09-2023 - Ennum Ezhuthum Module Changes & Bug Fixes & Performance Improvements...

 

TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum Module Changes....

*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  21 SEPTEMBER - 2023


*_Version: Now 0.0.86


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 678 பணிநாடுநர்கள் (இளநிலை உதவியாளர்) விவரம் (Details of 678 Job Seekers (Junior Assistant) selected by TNPSC and allotted to School Education Department)...


 TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 678 பணிநாடுநர்கள் (இளநிலை உதவியாளர்) விவரம் (Details of 678 Job Seekers (Junior Assistant) selected by TNPSC and allotted to School Education Department)...





TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 பணிநாடுநர்களுக்கு (இளநிலை உதவியாளர்) 25.09.2023 மற்றும் 26.09.2023 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - DSE செயல்முறைகள் (Recruitment Counselling for 673 Job Seekers (Junior Assistant) selected by TNPSC and allotted to School Education Department on 25.09.2023 and 26.09.2023 - DSE Proceedings)...

 

TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 பணிநாடுநர்களுக்கு (இளநிலை உதவியாளர்) 25.09.2023 மற்றும் 26.09.2023 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - DSE செயல்முறைகள் (Recruitment Counselling for 673 Job Seekers (Junior Assistant) selected by TNPSC and allotted to School Education Department on 25.09.2023 and 26.09.2023 - DSE Proceedings)...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 678 பணிநாடுநர்கள் (இளநிலை உதவியாளர்) விவரம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்


குறள் :265


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.


விளக்கம்:


விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.



பழமொழி :

Death keeps no calendar


ஆறிலும் சாவு நூறிலும் சாவு



இரண்டொழுக்க பண்புகள் :


1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.


2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :


ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். - தந்தை பெரியார் 


பொது அறிவு :


1.:உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?


விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 


2. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது?


விடை: கொங்கோ நதி


English words & meanings :


 underestimate - estimate as less than the actual குறைத்து மதிப்பிடல்: 

declarant- a person who declares உறுதி கூறுபவர்


ஆரோக்ய வாழ்வு : 


கொண்டைக்கடலை : கொண்டைக் கடலையில் உள்ள மற்றொரு நன்மை என்னவெனில் உங்கள் இதயத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை இதை உட்கொள்வதன் மூலம் பெற முடியும். இது செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளதால் அது இதயத்திற்கு நன்மை பயக்கிறது.


செப்டம்பர் 22


மைக்கேல் பாரடே அவர்களின் பிறந்த நாள்


மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.


மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.


நீதிக்கதை


 ஒரு சின்ன கிராமம், அங்க ஒரு அழகான குளம் இருந்தது. அந்த குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன. தவளைகள் அங்க இருக்க பூச்சி, கொசுக்கள் அப்படினு சாப்பிட்டு ஜாலியாக இருந்து வந்தன. அந்த கிராம மக்கள் குளத்திற்கு குளிக்க செல்வது வழக்கம்.அந்த குளத்தில் சிறுவர்கள் சென்றால் இந்த தவளை குட்டிகளை மீன் என நினைத்து விடுவார்கள். இதனால் தவளை கூட்டம் மனிதர்கள் நடமாடும் இடத்திற்கு அந்த பக்கமாகவே இருந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு இந்த தவளை குட்டிகளை பிடிக்க சில சிறுவர்கள் குளத்திற்கு வந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையன் மட்டும் தூரமாக இருந்த தவளை கூட்டத்தை பார்த்தான். ஏய் அங்க பாரு நிறைய தவளைகள் இருக்கு. இன்னொருவன் சொன்னான், அத வச்சி என்னடா பண்றது , நமக்கு மீன் குட்டி தான் வேண்டும் குளத்தில் கிடைக்குதான்னு பாரு என்றான். சிலர் குளத்தில் குளித்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.அந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் அந்த தவளை கூட்டம் கண்ணை உறுத்தியது.குளத்தின் அருகில் இருந்து சில கற்களை எடுத்து அந்த தவளைகள் மீது வீச தொடங்கினான். இதை பார்த்த தவளைகள் பயந்து தண்ணீருக்குள் குதித்தன. அந்த சிறுவனுக்கு அது ஒரு விளையாட்டாக தெரிந்தது.


இதையே வேலையாக அவர்கள் வரும்போதெல்லாம் செய்தார்கள். தவளைகள் மிகவும் கலங்கி இருந்தன. ஒரு தவளை மட்டும் சரி இந்த முறை அவர்கள் கல்லால் அடித்தால் நாம் ஏதாவது செய்யலாம் என தன் கூட்டத்திடம் கூறியது. சிறுவர்கள் குளத்திற்கு குளிக்க வந்ததும் , தவளைகளை நோக்கி கல் எறிய ஆரம்பித்தனர். அருகில் இதை பார்த்து கொண்டிருந்த தவளை அவன் மேல் ஏறி குதித்தது. அந்த சிறுவன் பயந்து தண்ணீருக்குள் குதித்தான்.அந்த தவளை சொல்லியது உங்களை போலத்தான் நாங்களும் , இதையே தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் பயப்பட வைக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் இந்த குளத்தில் பூச்சிகள், கொசுக்கள் என நிரம்பி வழியும். அதை நாங்கள் சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த உபாதையும் வராமல் தடுக்க படுகின்றன. இந்த உலகம் நாம் அனைவரும் வாழ்வதற்குத்தான். இயற்கை ஒன்றோடு ஒன்று பிணைக்க பட்டுள்ளது என்றது. மன்னிப்பு கேட்டுக்கொண்ட சிறுவர்கள் பிறகு அப்படி செய்வதை நிறுத்தி கொண்டார்கள்.எனவே  யாரையும் வதைக்காமல் , நாமும் நம்மை வதைக்காமல் இந்த வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றி அதன் அழகை ரசித்து கொண்டே வாழலாம். ஒரு செயலை செய்வதற்கு முன் பல முறை யோசித்து செயல் படுங்கள். அதனால் யாரெல்லாம் பாதிக்கபடுவார்கள் என்பதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.


இன்றைய செய்திகள்


22.09.2023


*நிலவின் தென் துருவத்தில் ஆய்வு: லேண்டர், ரோவரை விழிக்கச் செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது.


*13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம். சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை.


*நெல்லை- சென்னை: இடையே வந்தே பாரத் ரயில் சேவை- இன்று சோதனையோட்டம். விஜயவாடா - சென்னை: வரும் 24ம் தேதி முதல் புதிய வந்தே பாரத் ரயில்.


*மன அழுத்தத்தை போக்க குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை.


*ஆசிய கோப்பை: சுனில் சேத்ரி அதிரடியால் இந்தியாவிற்கு முதல் வெற்றி.


*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


*Exploration of Moon's South Pole: ISRO begins operations to wake up lander, rover.


  * Chance of heavy rain in 13 districts - Meteorological Department.  Rain lashed the suburbs of Chennai.


  * Nellie-Chennai: Vande Bharat train service between Nellie- Chennai - trial run today.  Vijayawada - Chennai: New Vande Bharat train from 24th.


  *Parents should spend more time with children to relieve stress - Governor Tamilisai.


  *Asia Cup: Sunil Chhetri strikes for India's first win.


  *Asian Games 2023: Indian women's cricket team advances to semi-finals


கோ-கோ, வளையப் பந்தாட்டம், கபடி - ஆண்கள் & பெண்கள், கைப்பந்து, வளைகோல் பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து & கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் - அளவுகள் விவரம் (Kho-Kho, Ring Ball, Kabaddi - Men & Women, Volleyball, Hockey, Badminton, Basketball, Shuttle Cock & Cricket Playgrounds - Sizes & Measurements Details)...



 கோ-கோ, வளையப் பந்தாட்டம், கபடி - ஆண்கள் & பெண்கள், கைப்பந்து, வளைகோல் பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து & கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் - அளவுகள் விவரம் (Kho-Kho, Ring Ball, Kabaddi - Men & Women, Volleyball, Hockey, Badminton, Basketball, Shuttle Cock & Cricket Playgrounds - Sizes Details)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...