கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் பள்ளிகளில் 6-10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகங்கள்



அரசுப் பள்ளிகளில் 6-10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக உடற்கல்வி பாடப் புத்தகங்கள் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் PDF கோப்பாக வெளியிடப்பட்டன. தற்போது மாணவர்களுக்கு வழங்க உடற்கல்வி பாடப்புத்தகங்களாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. 


இந்த முயற்சியின் கீழ், விளையாட்டு சாதனங்களின் பயன்பாடு, உடற்தகுதி, யோகா, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தனித்தனி கையேடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


புத்தகங்களின் சிறப்பம்சங்கள்:

வகுப்பு வாரியான பக்கங்கள்: 6 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு தலா 33 பக்கங்களும், 7-ஆம் வகுப்புக்கு 60 பக்கங்களும், 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளுக்கு தலா 50 பக்கங்களும் கொண்ட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


நோக்கம்: 

மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்துவதோடு, விளையாட்டுத் திறன், நன்னடத்தை மற்றும் மனநலனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.செயல்படுத்தும் முறை: பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பொழுது இந்தப் புத்தகங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிப் பாடவேளைகளில் விளையாட்டுக் கல்வியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றல் மிக்க உடற்கல்வித் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. 


இந்த முன்முயற்சி மாணவர்களின் உடல் தகுதியை அதிகரிப்பது நற்பண்புகளை உருவாக்குவது, சமூகத் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுத்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட் தொற்று நோய் காலத்திலும் அதைத தொடர்ந்தும் நிலவிய கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


அப்போது உடற்பயிற்சி திடல்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாணவ, மாணவியரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. இந்த நிலையை மாற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் வளமான மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகவும் இந்த திட்டம் அமைந்துள்ளது. 


தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் கலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டத்தின் கீழ், மாணவர்கள் வளமான பண்பாடு, மரபு, வரலாறு , கலை , அறிவியல், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை புரிந்துகொண்டு அவற்றின் பெருமைகளை போற்ற வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒட்டுமொத்த வளச்சியில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. நமது பண்பாடு மற்றும் மரபு குறித்த அவர்களின் மதிப்பு மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு உதவும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


உயர்நிலை வகுப்பு மாணவர்களிடையே நுண்தசை இயக்கத் திறனும் ஹார்மோன்கள் மாற்றமும் ஏற்படும் நிலையில் இந்த பருவத்தில் நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை திறன்களை மாணவர்களிடம் மேம்பாடு அடையச் செய்யவும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தவும், உடற்கல்வி அறிவு, உடல் வளர்ச்சி, விளையாட்டு கல்வி, தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள், மனமகிழ் விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள், திட்டங்கள், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், விளையாட்டு காயங்கள், பாதுகாப்பு கல்வி மற்றும் விளையாட்டுகளில் தொழில் வாய்ப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றன. 


இதுதவிர மாணவர்கள் மாநில மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும் தங்களின் உடன் வலிமையை எண்ணி பெருமை கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும்.


மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி பாடங்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக, பாடப்புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் பாடங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகம் ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் 33 பக்கங்கள் 6ம் வகுப்புக்கும், 60 பக்கங்கள் 7ம் வகுப்புகளுக்கும், 50 பக்கங்கள் 8ம் வகுப்புக்கும், 50 பக்கங்கள் 9ம் வகுப்புக்கும், 33 பக்கங்கள் 10ம் வகுப்புக்கும் பாடங்களாக இடம்பெற்றுள்ளன. இவை தவிர மதிப்பீட்டு கூறுகள், கற்றல் விளைவுகள், உள்ளிட்டவையும் இந்த பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.



180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்



சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை


க.து.ந.க.எண்.D1/ சிறப்பு/2025


பெருநகர சென்னை மாநகராட்சி,

கல்வித்துறை.

நாள். 14.05.2026


சுற்றறிக்கை


பொருள்:


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சென்னை தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக SMC உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கோருதல் -தொடர்பாக.


பார்வை:


மாண்புமிகு மேயர் அவர்களின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எண். 2


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


வ.எண்     பள்ளிகள்     பணியிடங்கள்  கல்வித்தகுதி   சம்பளம்


1   சென்னை தொடக்கப்பள்ளிகள்     101   C.P.Ed/B.P.Ed    ரூ. 18,000


2     சென்னை நடுநிலைப்பள்ளிகள்      29     B.P.Ed/M.P.Ed    ரூ. 20,000


3 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்    50    B.P.Ed/M.P.Ed   ரூ. 25,000


மொத்தம்    180


எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்வி அலுவலர்


பெறுநர்:


1 இணை ஆணையர்(கல்வி) அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.


2 அனைத்து உதவி கல்வி அலுவலர்கள்


3. அனைத்து சென்னை தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்



PET Textbook : 11 & 12th Standard

 


PHYSICAL EDUCATION : TEACHER’S RESOURCE BOOK FOR CLASSES : 11 & 12 : UDARKALVI - UYIRKKALVI


11 & 12ஆம் வகுப்புகள் : உடற்கல்வி பாடப்புத்தகம்


Physical Education Textbook for Classes 11 & 12 


முதன்முறையாக 11 & 12  வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் - தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


PET Textbook : 11 & 12th Standard 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


PET Textbook for 6-10th Standard



6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம்


Physical Education Textbook for Classes 6-10


முதன்முறையாக 6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் - தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


PET Textbook : 6-10th Standard 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


6, 7, 8ஆம் வகுப்புகள் - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 

 6, 7, 8ஆம் வகுப்புகள் - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள் (6, 7 & 8th Standard - Physical Education - Half Yearly Examination 2023 - Answers)...



>>> Click Here to Download...


8ஆம் வகுப்பு - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 8ஆம் வகுப்பு - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள் (8th Standard - Physical Education - Half Yearly Examination 2023 - Answers)...



>>> Click Here to Download...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023...



கோ-கோ, வளையப் பந்தாட்டம், கபடி - ஆண்கள் & பெண்கள், கைப்பந்து, வளைகோல் பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து & கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் - அளவுகள் விவரம் (Kho-Kho, Ring Ball, Kabaddi - Men & Women, Volleyball, Hockey, Badminton, Basketball, Shuttle Cock & Cricket Playgrounds - Sizes & Measurements Details)...



 கோ-கோ, வளையப் பந்தாட்டம், கபடி - ஆண்கள் & பெண்கள், கைப்பந்து, வளைகோல் பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து & கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் - அளவுகள் விவரம் (Kho-Kho, Ring Ball, Kabaddi - Men & Women, Volleyball, Hockey, Badminton, Basketball, Shuttle Cock & Cricket Playgrounds - Sizes Details)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உடற்கல்வி இயக்குநர் நிலை-I/ உடற்கல்வி இயக்குநர் நிலை-II மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் (The transfer Counseling for Physical Education Director Grade-I/ Physical Education Director Grade-II and Physical Education Teachers will be announced after the General Transfer announced at present)...

 உடற்கல்வி இயக்குநர் நிலை-I/ உடற்கல்வி இயக்குநர் நிலை-II மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் (The transfer Counselling for Physical Education Director Grade-I/ Physical Education Director Grade-II and Physical Education Teachers will be announced after the General Transfer announced at present)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு (தொடக்க / நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு) விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education Regarding Providing sports and physical education equipment to all Government schools (primary / middle / high / higher secondary schools) through Samagra Shiksha) ந.க.எண்: 010311/ எம்/ இ4/ 2022, நாள்: 02-12-2022...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு (தொடக்க / நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு) விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education Regarding Providing sports and physical education equipment to all Government schools (primary / middle / high / higher secondary schools) through Samagra Shiksha) ந.க.எண்: 010311/ எம்/ இ4/ 2022, நாள்: 02-12-2022...



>>> தொடக்கப்பள்ளிகள் பட்டியல்...



>>> மேல்நிலைப்பள்ளிகள் பட்டியல்...


01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு (PET to Physical Director Grade 2 Promotion ) –திருத்திய தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் (Revised Panel ) வெளியீடு - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69913 / சி4/ இ2/ 2021, நாள்: 07-02-2022...



>>> 01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு –திருத்திய தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்...


>>> பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69913 / சி4/ இ2/ 2021, நாள்: 07-02-2022...


🍁🍁🍁 PET - TURN WISE CUT OFF RELEASED BY TRB...

 உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு.

காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு.

நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை -  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் .




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்