கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS...

 


SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS...



SNA COMPONENTS CODE FOR GRANTS


தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT ELEMENTARY


COMPONENTS CODE-F. 01.18


YOUTH AND ECO CLUB ELEMENTARY


COMPONENTS CODE -F. 01.12.01



உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT SECONDARY


COMPONENTS CODE -F. 03.12


YOUTH AND ECO CLUB SECONDARY


COMPONENTS CODE-  F. 03.06






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா (Tamil Nadu Mercantile Bank CEO and Managing Director S Krishnan Resigns)...

 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா (Tamil Nadu Mercantile Bank CEO and Managing Director S Krishnan Resigns)...


தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிப்பு


சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது சர்சையான நிலையில் ராஜினாமா.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...




தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...


வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


 இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.


அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.



இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.



அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.


வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.


இவ்வாறு சத்யபிரதா சாகு  கூறினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கூட்டுறவு சங்கம், வங்கிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதார்எண், குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல் (Joint Registrar instructs all members of Co-operative Societies, Banks to submit Aadhaar Number, Family Card Number)...

 கூட்டுறவு சங்கம், வங்கிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதார்எண், குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல் (Joint Registrar instructs all members of Co-operative Societies, Banks to submit Aadhaar Number, Family Card Number)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அக்டோபர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு (SMC) கூட்டம் தேதி மாற்றம் (October 2023 School Management Committee (SMC) meeting date change)...

 


 அக்டோபர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு (SMC) கூட்டம் தேதி மாற்றம் (October 2023 School Management Committee (SMC) meeting date change)...


*SMC கூட்டம் தேதி மாற்றம்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அனைவருக்கும் வணக்கம். 


வருகிற 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் ப.மே.கு கூட்டம் தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து நிலைப் பள்ளிகளிலும் (MS/HS/HSS) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளபடி 6-10-2023 முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட வேண்டும் எனவும், 


*தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் (1-5 வகுப்புகள்) எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக ப.மே.கு SMC கூட்டமானது இரண்டாவது வெள்ளிக்கிழமை 13-10-2023 அன்று நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*


இத்தகவலை அனைத்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத் தேதி மாறுதலுக்கான செயல்முறைக் கடிதம் இயக்குநரின் ஒப்புதலோடு அனுப்பப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்


குறள் :268


தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.


விளக்கம்:


தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து தொழும்.


பழமொழி :

Delay of justice is injustice


தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :


சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...


-------மார்க் ட்வைன்


பொது அறிவு :


1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?


விடை: நாக்கு


 2. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?


விடை: கழுகு 


English words & meanings :


 mickle - a large amount மிகப்பெரிய அளவு 

grunting - make a short sound in pain or anger வலியால் உறுமுதல், முணுமுணுத்தல்.


ஆரோக்ய வாழ்வு : 


கொண்டைக்கடலை: இதில் உள்ள குறைந்த க்ளைசெமிக் மற்றும் ஸ்டார்ச் அமிலோஸின் இருப்பு காரணமாக உடல் கொண்டைக் கடலையில் உள்ள சத்தை உறிஞ்சிகிறது. இதனால் இரத்தத்தில் சமநிலை கட்டுப்படுத்தப்படுகிறது.


செப்டம்பர் 27


உலக சுற்றுலா நாள்


உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.


நீதிக்கதை


 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.


ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.மண்பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். அரசர் மிகப்பெரிய முட்டாளாவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.


இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. நம் தவறுகளை நாமே திருத்திக் கொள்வோம் என்றார்கள். இருவரும் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 




நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.


இன்றைய செய்திகள்


27.09.2023



*தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.


* தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 முதலமைச்சர் 

மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.


* தமிழகம் முழுவதும் வருகிற 1ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன்.


*37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1000 புதிய வகுப்பறைகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.


* ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 :

ஆண்கள் ஹாக்கியில் இந்தியா 16- 1 என்ற கோடு கணக்கில் அபார வெற்றி பெற்றது.


*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: படகு போட்டியில் இந்தியாவின் 

நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்றார்.


Today's Headlines


*Chance of thunder and lightning rains in Tamil Nadu- Chennai Meteorological Department warns.


 * Tamil Nadu Tourism Policy 2023 published by Chief Minister

 M. K. Stalin.


 * Special fever camp at 1000 places across Tamil Nadu on 1st October- Minister Ma Subramanian.


 * The Chief Minister inaugurated 1000 new classrooms in panchayat union schools in 37 districts.


 * Asian Games 2023 :

 In men's hockey, India won by a score of 16-1.


 *Asian Games 2023:  In rowing

 Neha Tagore of India won the silver medal.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலர் (CEO Promotion) மற்றும் அதற்கீடான பணி இடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி அரசாணை (நிலை) எண்: 236, நாள்: 26-09-2023 வெளியீடு (G.O. (Ms) No: 236, Dated: 26-09-2023 - Provisional promotion from the post of District Education Officer to Chief Education Officer and related posts)...

 

மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலர் (CEO Promotion) மற்றும் அதற்கீடான பணி இடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி அரசாணை (நிலை) எண்: 236, நாள்: 26-09-2023 வெளியீடு (G.O. (Ms) No: 236, Dated: 26-09-2023 - Provisional promotion from the post of District Education Officer to Chief Education Officer and related posts)...


>>> Click Here to Download G.O. (Ms) No: 236, Dated: 26-09-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...