கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.10.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.10.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :271


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.


விளக்கம்:


ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.



பழமொழி :

Diamond cuts diamond


முள்ளை முள்ளால் எடு.


இரண்டொழுக்க பண்புகள் :



1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக்கொள்வது. மகாத்மா காந்தி 


பொது அறிவு :


1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  


விடை: வேளாண்மை     


2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்


English words & meanings :


 agronomics - கிராமப் பொருளாதார நூல்; 

database - கணினியில் சேமிக்கப்படும் தகவல்


ஆரோக்ய வாழ்வு : 


ரோஜா: ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.


அக்டோபர் 05


உலக ஆசிரியர் தினம் 


நீதிக்கதை


 ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.



நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.


ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.


சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது...


"இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்" என்றது.


இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.


இந்த காட்டு நாய்


சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல்தப்பி சென்றுவிட வேண்டும் நினைத்து ஓசைப்படாமல்


பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.


அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு


சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.


எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.


குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய்,


சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்ததுஅதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.


"இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு, ''குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்காரு இரண்டு பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.


இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.


அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.


"அந்த போக்கிரி குரங்கு


எங்கேபோய் தொலைந்தது. அதனை


நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?" என்றது.


காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.


நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்.


இன்றைய செய்திகள்


05.10.2023


*வேதியியல் நோபல் பரிசு: 3 நேனோ தொழில்நுட்ப சாதனையாளர்கள் வென்றனர்.


*அட்டகாச வடிவமைப்பில் அமர்க்களப்படுத்தும் இரவு நேர வந்தே பாரத் ரயில்களின் மாதிரி வடிவங்களின் படங்களை வெளியிட்டார்- இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.


*கேரளாவில் தொடர் மழை பெய்வதால் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.


*உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் 200 ரூபாயிலிருந்து 

ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


* ஆசிய விளையாட்டுப் போட்டி : குத்துச்சண்டையில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.


Today's Headlines


*Chemistry Nobel Prize: 3 nanotechnology achievers won.


 *Indian Railways Minister Ashwini Vaishnav released pictures of prototypes of Vanthe Bharat trains for night time with spectacular designs.


 *University exams postponed due to continuous rains in Kerala.


 *Subsidy under Ujjwala Scheme raised from Rs.200rs to 300rs - Union Minister Anurag Thakur.


 *Asian Games: Tamil Nadu player Ramkumar Ramanathan won silver medal in Tennis doubles category.


 * Asian Games: India won silver medal in boxing.

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.10.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.10.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : தவம்


குறள் :270


இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.


விளக்கம்:


ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.



பழமொழி :

Desire is the root of all evil


ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.


இரண்டொழுக்க பண்புகள் :



1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி , நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம் மகாத்மா காந்தி 


பொது அறிவு :


1. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?


விடை: சார்ஸ் டார்வின் 


2. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?


விடை: நண்டு 


English words & meanings :


 dias (டயஸ்) - a raised platform பேச்சு மேடை: 

sewers (சிவெர்ஸ்- a channel for carrying waste water சாக்கடைக் குழாய்.


ஆரோக்ய வாழ்வு :


ரோஜா: ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.


அக்டோபர் 04


சுப்ரமணிய சிவா அவர்களின் பிறந்தநாள்


அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.


திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்


திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்


உலக விலங்கு நாள்


உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை


 செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது.


ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். 


மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.வரும் வழியில் மரத்தில் பழங்கள் 


இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?


அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.


மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர். 


காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். 


நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.  நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்


04.10.2023


*19 அடி உயரம் அம்பேத்கர் சிலை: அமெரிக்காவில் அக்டோபர் 14 திறப்பு.


* சென்னை ஐ.சி.எப் சார்பில் புதிய 10 வந்தே பாரத் ரயில்கள் : பெங்களூருவில் மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகின்றது.


*அடுத்தடுத்து மூன்று முறை 4.1 ரிக்டர் அளவு தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்.


* இந்தியாவின் அண்டை நாடான  வங்காள தேசத்தில் டெங்கு உயிரிழப்பு 1006 : நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி: பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


* ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார்.


Today's Headlines


*19 feet tall Ambedkar statue: October 14 unveiling in USA.


 * New 10 Vande Bharat trains by Chennai ICF: Prototype for it is being prepared in Bengaluru.


 *Nepal has been hit by three successive 4.1 magnitude earthquakes. It shook Nepal 


 * Dengue death toll 1006 in India's neighboring country Bengal: Wards are overflowing with patients.


 *Asian Games: India won the women's hockey with a score of 13-0.


 * Asian Games: Indian athlete Preeti Pawar wins bronze in boxing.

 

மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் - தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 வெளியீடு (G.O. (3D) No: 15, Dated: 22-09-2023 Issued by setting up a committee to examine the conversion of each panchayat union is an Unit in the Department of Elementary Education regarding Senior Junior Pay Fixation)...

 

மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் - தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 வெளியீடு (G.O. (3D) No: 15, Dated: 22-09-2023 Issued by setting up a committee to examine the conversion of each panchayat union is an Unit in the Department of Elementary Education regarding Senior Junior Pay Fixation)...


>>> அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா (2023-2024) போட்டிகள் - நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) - கலைத்திருவிழா சேர்க்கை விண்ணப்பம் - மேல்முறையீட்டு விண்ணப்பம் - போட்டிகளின் விவரம் - உறுதிமொழி படிவம் - வட்டார & மாவட்ட & மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3856/ ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 03-10-2023 (Department of School Education - Kalai Thiruvizha - Arts Festival (2023-2024) Competitions - Guidelines for Conducting - (6th to 12th Class) - Kalai Thiruvizha Admission Application - Appeal Application - Details of Competitions - Undertaking Form - Regulations to be followed while conducting Regional & District & State Level Competitions - State Project Director, Director of School Education & Director of Elementary Education Proceedings Rc.No: 3856/ A3/ Art/ SS/ 2023, Dated: 03-10-2023)...



பள்ளிக்கல்வித்துறை -  கலைத்திருவிழா (2023-2024) போட்டிகள் - நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) - கலைத்திருவிழா சேர்க்கை விண்ணப்பம் - மேல்முறையீட்டு விண்ணப்பம் - போட்டிகளின் விவரம் - உறுதிமொழி படிவம் - வட்டார & மாவட்ட & மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் பொழுது கடைபிடிக்க வேண்டிய  விதிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3856/ ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 03-10-2023  (Department of School Education - Kalai Thiruvizha - Arts Festival (2023-2024) Competitions - Guidelines for Conducting - (6th to 12th Class) - Kalai Thiruvizha  Admission Application - Appeal Application - Details of Competitions - Undertaking Form - Regulations to be followed while conducting Regional & District & State Level Competitions - State Project Director, Director of School Education & Director of Elementary Education Proceedings Rc.No: 3856/ A3/ Art/ SS/ 2023, Dated: 03-10-2023)...


பள்ளிக்கல்வித்துறை *கலைத்திருவிழா* (2023-2024) போட்டிகள் (Kalai Thiruvizha - Arts Festival (2023-2024) Competitions) - நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - 


(6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )


🪢கலைத்திருவிழா சேர்க்கை விண்ணப்பம் 


🪢மேல்முறையீட்டு விண்ணப்பம் 


🪢போட்டிகளின் விவரம்


🪢உறுதிமொழி படிவம்


🪢வட்டார & மாவட்ட & மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் பொழுது கடைபிடிக்க வேண்டிய  விதிமுறைகள்...


ஒரே தொகுப்பில் - PDF - 49 pages...

👇👇👇👇👇


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசாணை (வாலாயம்) எண்: 320, நாள்: 03-10-2023 - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு (G.O. (Provincial) No: 320, Dated: 03-10-2023 - Transfer of Joint Directors and issuance of Ordinance)...

 

அரசாணை (வாலாயம்) எண்: 320, நாள்: 03-10-2023 - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு (G.O. (Provincial) No: 320, Dated: 03-10-2023 - Transfer of Joint Directors and issuance of Ordinance)...




எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) - அனைத்துப் பாடங்களின் வினாத்தாள்கள் வெளியீடு (8th Standard Public Examination (Year 2023) for Individual Candidates - Release of Question Papers of All Subjects)...

 

எட்டாம் வகுப்பு (Class VIII) தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) - அனைத்துப் பாடங்களின் வினாத்தாள்கள் வெளியீடு (8th Standard Public Examination (Year 2023) for Individual Candidates - Release of Question Papers of All Subjects)...



>>> வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - கணக்கு - வகுப்புகள் 1, 2, 3 - ஆசிரியர் கையேடு - தமிழ் & ஆங்கில வழி (Ennum Ezhuthum - Term 2 - Mathematics - Classes 1, 2, 3 - Teacher's Handbook - Tamil & English Medium)...

 


>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - கணக்கு - வகுப்புகள் 1, 2, 3 - ஆசிரியர் கையேடு - தமிழ் வழி (Ennum Ezhuthum - Term 2 - Mathematics - Classes 1, 2, 3 - Teacher's Handbook - Tamil Medium)...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...