கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - அக்டோபர் 4வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - October 4th Week - Tamil & English Medium Lesson Plan)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - அக்டோபர் 4வது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term October 4th Week - Tamil Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - அக்டோபர் 4வது வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term October 4th Week - English Medium Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - அக்டோபர் 4வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - October 4th Week - Tamil & English Medium Lesson Plan - Model 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - அலகு 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 4வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி (Term 2 - October 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)...

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர்  4வது வாரம் - தமிழ் வழி (Term 2 - October 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 4வது வாரம் - ஆங்கில வழி (Term 2 - October 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 4வது வாரம் - தமிழ் வழி - மாதிரி 2 (Term 2 - October 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium - Model 2)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 4வது வாரம் - ஆங்கில வழி - மாதிரி 2 (Term 2 - October 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard -  English Medium - Model 2)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.10.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.10.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள் : 



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :282


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.


விளக்கம்:


அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.



பழமொழி :

Empty vessels make the greatest noise


குறை குடம் கூத்தாடும்



இரண்டொழுக்க பண்புகள் :



1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 


2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். செல்வந்தர்கள் பசியைத் தேடுகிறார்கள்.-- கிரீஸ்


பொது அறிவு :


1. புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 


பல்லவர் கால கல்வெட்டுகள்


2. புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் –  


சுறாமீன் .


English words & meanings :


 illustrious (இல்லஸ்ட்ரஇயஸ்) - widely known or esteemed புகழ்பெற்ற.

imbibe(இம்பைப்)-take in liquids உள்வாங்குதல்


ஆரோக்ய வாழ்வு : 


சங்குப்பூ : சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். பேதியைத் தூண்டும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்


அக்டோபர் 20


ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்


ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார்.    கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.


நீதிக்கதை


 ஒரு பெரியவரிடம் ஐயா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். “ என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்" என்றார் பெரியவர், "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்," "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன், "இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது


இன்பமுமில்லை... துன்பமுமில்லை...' - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். "மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!!...


இன்றைய செய்திகள்


20.10.2023


*"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 பேர் இந்தியா வருகை- மத்திய அமைச்சகம் தகவல்.


*மகாத்மாவின் தொலைநோக்கு பார்வையே சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவம் முன்னோக்கி செல்வதற்கான வழி: ஜனாதிபதி முர்மு.


*ஆயுத பூஜை தொடர் விடுமுறை: பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை மற்றும் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல  1000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு.


*தென்மேற்கு பருவக்காற்று விலகி விட்டது.  இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை.


*உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா- வங்காளதேசம் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி.


Today's Headlines


* So far 1200 people from Israel have come to India through "Operation Ajay" - Union Ministry Information.


 * Mahatma's for seeing vision is for the forwardness of social unity and equality: President Murmu.


 *Ayudha Puja holiday: Metro train service and 1000 special buses from Chennai to outlying areas will be arranged for the convenience of passengers.


 * The southwest monsoon has departed.  The Northeast Monsoon starts within 3 days.


 *India won the  World Cup cricket  match between India-Bangladesh


நீலகிரி புத்தகத் திருவிழா 2023-2024 அழைப்பிதழ் - அக்டோபர் 20 முதல் 29 வரை - நாள்வாரியான நிகழ்ச்சி நிரல் (Nilgiri Book Festival 2023-2024 Invitation – October 20 to 29 – Day by Day Agenda)...



 நீலகிரி புத்தகத் திருவிழா 2023-2024 அழைப்பிதழ் - அக்டோபர் 20 முதல் 29 வரை - நாள்வாரியான நிகழ்ச்சி நிரல் (Nilgiri Book Festival 2023-2024 Invitation – October 20 to 29 – Day by Day Agenda)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை நாளை (20.10.2023) மேற்கொள்ளப்பட உள்ளது - பேரிடர் மேலாண்மை வாரியம் செய்தி வெளியீடு எண்: 2110, நாள்: 19-10-2023 ("Cell Broadcast Alert" trial to improve emergency communication during calamities to be conducted tomorrow - 20.10.2023 - Disaster Management Board Press Release No.: 2110, Dated: 19-10-2023)...


பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை நாளை (20.10.2023) மேற்கொள்ளப்பட உள்ளது - பேரிடர் மேலாண்மை வாரியம் செய்தி வெளியீடு எண்: 2110, நாள்: 19-10-2023 ("Cell Broadcast Alert" trial to improve emergency communication during calamities to be conducted tomorrow - 20.10.2023 - Disaster Management Board Press Release No.: 2110, Dated: 19-10-2023)...



>>> பேரிடர் மேலாண்மை வாரியம் செய்தி வெளியீடு எண்: 2110, நாள்: 19-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகள் : 

முக்கிய அறிவிப்பு: உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது.


Advisory: DoT, Govt of India would conduct Cell Broadcast testing with NDMA. You may receive test alerts on mobile with sound/vibration. These alerts are part of testing process, do not indicate an actual emergency and do not require any action at your end.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2023 - School Morning Prayer Activities...

      


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :281


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.


விளக்கம்:


அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.


பழமொழி :

Eat to live: do not live to eat


வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே



இரண்டொழுக்க பண்புகள் :



1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 


2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும். -- இத்தாலி


பொது அறிவு :


1. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்? 


7 நிமிடம் 58 வினாடிகள்.


2. வந்தே மாதரம் பாடலை எழுதியவார்? 

பங்கிம் சந்திர சட்டர்ஜி


English words & meanings :


 humus(ஹ்யூமஸ்)- the decay of vegetables in the soil making it rich. இலை, தழை மக்கிய மண். 

hunch (ஹன்ச்)- intuitive feeling உள்ளுணர்வு


ஆரோக்ய வாழ்வு : 


சங்குப்பூ: சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். 


நீதிக்கதை


 பலமே கருணை




குருகுலத்தில் குரு சீடர்களுக்கு பாடம் நடத்தி முடித்ததும், பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றார். ஒரு சீடன், நாம் காணும் இந்த உலகம் நல்லதா? இல்லை கெட்டதா? என்று கேட்டான். அவர் அந்த சீடனிடம் எதிர்க்கேள்வியாக, நீ பூனையை பார்த்திருப்பாய் அல்லவா? அதன் பல்லால் நன்மையா; தீமையா? என்று கேட்டார். தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி எதையோ கேட்கிறாரே? என்று குழப்பத்துடன் விழித்தான் சீடன். அவனது தவிப்பை புரிந்து கொண்ட குருவே இதற்கு பதிலளித்தார். தாய்ப்பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம். ஏனென்றால், குட்டி தாயைச் சார்ந்து இருக்கும்போது, தன் பல்லாலேயே மென்மையாகக் கவ்வி தூக்கிச் செல்லும். ஆனால், எலிக்கு அதன் பற்கள் விரோதி. இது தான் உன் கேள்விக்கும் பதில். எதுவுமே நல்லது தான். அதே நேரம் எதுவுமே கெட்டது தான். அவரவரைப் பொறுத்து, நன்மையும் தீமையும் மாறிக் கொண்டேயிருக்கும். அது போல, உலகம் என்பது, நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும், என்றார். சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது. உலக நடப்பும் புரிந்தது.


இன்றைய செய்திகள்


19.10.2023


*சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


* வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி.


* மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல். 


*பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டால் 48 விமானங்கள் ரத்து.


* இந்தியாவின் அதிரடி தொடருமா வங்காள தேசத்துடன் இன்று மோதல்.


* உலகக்கோப்பை கிரிக்கெட் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி.


Today's Headlines


*Action will be taken against unregistered women's hostels in Chennai - District Collector warns.


 * Russian Foreign Minister visits North Korea.


 * Increase in dearness allowance for central government employees;  Union Cabinet approved.


 *48 flights were canceled due to fuel shortage in Pakistan.


 * Will India's striking action continue? today India vs Bangladesh


 * Netherlands won today's match for "Cricket World Cup" by 38 runs.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் 2023 - 1 ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை- வளரறி மதிப்பீடு FA(b) & தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) கால அட்டவணை (Ennum Ezhuthum 2023 - Term 2 - Class 1 to Class 5 - Time Table for Formative Assessment FA(b) & Summative Assessment (S.A))...


எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் 2023 - 1 ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை- வளரறி மதிப்பீடு FA(b) & தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) கால அட்டவணை (Ennum Ezhuthum 2023 - Term 2 - Class 1 to Class 5 - Time Table for Formative Assessment FA(b) & Summative Assessment (S.A))...

 

>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...