கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :288


அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.


விளக்கம்:


உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.


பழமொழி :

Example is better than precept


சொல்வதை விட செய்வதே மேல்



இரண்டொழுக்க பண்புகள் :


1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.


2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.


பொன்மொழி :


ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”


பொது அறிவு :


1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?


விடை: இராமநாதபுரம் 


2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்?


விடை: கவிமணி 


English words & meanings :


nominate (v)- elect


ஆரோக்ய வாழ்வு : 


மாம் பூ: தொண்டையில் புண் ஏற்பட்டு  எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க  தொண்டை வலி குணமடையும்.


நீதிக்கதை


 ஒரு பள்ளி மாணவன் இருந்தான். நல்ல சுட்டி.. கொஞ்சம் மொரடு. அவனுக்கு எப்படியாச்சும் வகுப்பறையில் லீடராகனும்னு ஆசை. ஆனா ஸ்கூல்ல அவனை யாருக்குமே பிடிக்காது. பட்டு பட்டுனு கை நீட்டிருவான். சொல்லறத கேட்டு நடக்க மாட்டான். தனக்கு எல்லாமே தெரியும்னு இருப்பான். ஆனா வாத்தியார்களை கவர்வதுல கெட்டிக்காரன். அவன் நினைச்ச மாதிரியே வகுப்பறையில் லீடரும் ஆயிட்டான். இவன் சொல்றததான் யாருமே கேக்க மாட்டாங்களே. அதனால இவன யாருமே லீடரா ஏத்துக்கல. இவன் என்ன சொன்னாலும் பேசிகிட்டே இருந்தாங்க. ரொம்ப மனவேதனையோட அப்பாகிட்ட நடக்குறத சொல்லி அழுதான். அப்பாவோ, 'சரி சரி இதுக்கெல்லாம் அழலாமாடா?'னு சொன்னார். பிறகு, 'உனக்கு ஒன்னு சொல்றேன். மனசுல வெச்சு நடந்துக்கோ. எல்லாம் சரியா போயிரும்'னு ஒரு குறள் சொன்னாரு. 'கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவிணையும் மாண்ட தமைச்சு' நாம எவ்ளோ பெரிய தலைவரா இருந்தாலும எந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடியும் சுத்தி இருக்க எல்லாரையும் அவங்க சூழ்நிலையும் புரிஞ்சு எடுக்கணும். நாம மத்தவங்க நலனை மதிச்சு அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தா தான் மத்தவங்க நம்ம கருத்துக்கு மரியாதை கொடுத்து நம்மள தலைவரா ஏத்துப்பாங்க. மத்தவங்க நம்மள மதிச்சா தான் நாம தலைவர். இல்லாட்டி நாம ஒண்ணுமில்லன்னு சொன்னாரு. அடுத்த நாள்ல இருந்து எல்லார்கிட்டயும் அன்பா அவங்களை புரிஞ்சு மதிச்சு நடந்தான்.


இப்ப எல்லாரும் அவன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கேட்கிறாங்க.


இன்றைய செய்திகள்


01.11.2023


*மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் மர்ம நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதை பார்த்து பதட்டப்பட வேண்டாம். 1930 எண்ணில் புகார் அளிக்க மின்வாரியம் வேண்டுகோள்.


*இந்தியாவில் முதல் நவீன ரயில்; சென்னையில் தயாரிக்கப்படுகிறது. 


*தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு - சென்னை மாநகராட்சி


*தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


* உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலோன் டி' ஓர் விருது. 8வது முறை வென்று சாதனை படைத்த மெஸ்சி.


Today's Headlines


* Some  mysterious people sending SMS like the electricity board.  No need to panic. Complain to   1930 EB requested the public .


 *First modern train in India;  Made in Chennai.


 *Monitoring by drone to prevent flooding in  low-lying areas.


 * Chance of rain in Tamil Nadu for the next 3 days: Meteorological Department of TN announced.


 * Ballon d'Or Award for the best football player in the world.  Messi won the record for the 8th time.

 

TNSED Schools App New Version: 0.0.89 - Updated on 30-10-2023 - Staff Grievance Module Added & Bug Fixes & Performance Improvements...

 

 

TNSED schools App


What's is new..?


*🎯  Staff Grievance Module Added.


*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  30 OCTOBER - 2023


*_Version: Now 0.0.89


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு வெளியீடு...



அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு வெளியீடு...


ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ஆம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது


இதன்படி


01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்


02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்


03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்


04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்


05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்


06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி


07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி


08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்


09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்


10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்


11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு


12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு


13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்


14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்


15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்


16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்


17. கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்


18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி


19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்


20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்


21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி


22. விஜயதசமி( அக்.,12) - சனி


23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்


24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்


24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.


இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.


அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் - October Month School Children's Movie - The Jungle Gang - Download link...



அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் - October Month School Children's Movie - The Jungle Gang - Download link...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023)...



நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023)...


01-11-2023 -புதன் - உள்ளாட்சி தினம் / கிராம சபைக் கூட்டம்..


03-11-2023 -வெள்ளி - SEAS தேர்வு.


04-11-2023 - சனி - குறைதீர் நாள்



12-11-2023 -ஞாயிறு - தீபாவளி - அரசு விடுமுறை.*


14-11-2023 - செவ்வாய் - குழந்தைகள் தினம்.


📒CRC (CPD)


18-11-2023 - சனி - CRC ( 1-3 வகுப்பு ஆசிரியர்கள் )


25-11-2023 -சனி - CRC (4,5 வகுப்பு ஆசிரியர்கள்)...


27-11-2023 to 29-11-2023 --  9,10  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC


2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட RH விடுமுறை நாட்கள்:


*02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள்.*


*13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு.*


*27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி*



>>> நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 9 - Model Question Paper)...

 

 

 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 9 - Model Question Paper)...


>>> Click Here to Download...



>>> SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி...



>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...



>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...



>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...