கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:303


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.



விளக்கம்:


யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.



பழமொழி :

Good and Bad are not due others


நன்றும் தீதும் பிறர் தர வாரா.



இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


முடியாது என்ற வார்த்தை

முட்டாள்களினால் மட்டுமே

பயன்படுத்தப்படும் வார்த்தை..

அந்த வார்த்தையை நீ

பயன்படுத்தாதே.



பொது அறிவு :


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு . 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.




English words & meanings :


 zany (adj)- uncommon behaviour. சம்பந்தமற்ற , வித்தியாசமான 

zestful (adj) - having a lot of energy, ஆர்வம் , உந்துதல்



ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.



நவம்பர் 22


நீதிக்கதை


 ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலிடம் ஒரு புதிர் போட்டார்.


“மேலே மூடி கீழே மூடி


நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது


இது என்ன?”


என்று பீர்பாலைப் பார்த்துக் கேட்டார். பீர்பாலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பால்.


மறுநாள் பீர்பால் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று  கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அங்குச் சிறுமி ஒருத்தி சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.


“குழந்தாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று  அந்தச் சிறுமியைப் பார்த்துக் கேட்டார் பீ்ர்பால்.


“குழந்தையைச் சமைத்துக் கொண்டிருக்கிறேன்; தாயாரை எரிய விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தச் சிறுமி கூறினாள்.


“அப்படியா? உன் தகப்பனார் எங்கே” என்று அந்தச் சிறுமியிடம் கேட்டார் பீர்பால்.


“என் தகப்பனார் மண்ணுடன் மண்ணைச் சேர்ப்பதற்குச் சென்றுள்ளார்” என்றாள் அந்தச் சிறுமி.உன் தாயார் எங்கே?” என்று பீர்பால் கேட்டபொழுது, “ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள்” என்றாள்.


இந்த பதில்களைக் கேட்டப் பீர்பால் திகைத்துப் போய் விட்டார். இந்தச் சமயத்தில் அந்தச் சிறுமியினுடைய தாய் தந்தையர் அங்கு வந்தனர். அவர்களிடம் பீர்பால் எல்லா விவரத்தையும் கூறினார்.


இதைக் கேட்டுச் சிரித்த அந்தச் சிறுமியின் தந்தை ‘ அவள் சரியாகத்தான் கூறியிருக்கிறாள்” என்றார்.


“எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றார் பீர்பால்.


“துவரம் பருப்பை வேகவைத்துக் கொண்டு, அதற்காக அடுப்பை எரிப்பதற்குத் துவரஞ் செடியின் காய்ந்த தண்டுகளை விறகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதனைத்தான் குழந்தையைச் சமைத்துக்கொண்டு தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்” என்றார் சிறுமியின் தந்தை.


“நீங்கள் மண்ணுடன் மண்ணைச் சேர்க்கச் சென்றதாகக் கூறினாளே” என்றார் பீர்பால்.


“என்னுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரைச் சுடுகாட்டில் தகனம் செய்வதற்காகப் போயிருந்தேன். உயிர் போன பிறகு இந்த உடம்பு மண்ணோடுதானே சேர்ந்து விடுகிறது! அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றார்.


“உங்கள் மனைவி ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள் என்றாளே” என்றார் பீர்பால்.


“பக்கத்து வீட்டில் உளுந்து உடைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அங்குச் சென்று உளுந்து உடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்” என்றார்  அந்தச் சிறுமியின் தகப்பனார்.


இந்தப் பதில்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீர்பால் “அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள் இவர்களே’ என்று கருதினார். அக்பர் சக்கரவர்த்தி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு.


“மேல மூடி கீழே மூடி


 நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது.


இது என்ன?என்று கேட்டார் பீர்பால்.


இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் தந்தை, “ இரண்டு மூடிகள் என்றால் ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி. மெழுகுத் திரி என்பது மனிதன். பூமியில் மனிதன் வாழ்ந்து  இறந்து விடுகிறான். இதுதான், இந்தப் புதிருக்கு விடை” என்று கூறினான்.


இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பீர்பால் தம்மால் இயன்ற பொருள்களைச் சன்மானமாக அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்தார்.


மறுநாள் அரச சபைக்குச் சென்ற பீர்பால், அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்கான விடையைக் கூறினார்.


அதைக் கேட்ட சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.


பீர்பாலின் அறிவுத் திறனைப் பாராட்டி அக்பர் சக்கரவர்த்தி, பொன்னையும் மணியையும் பரிசாக வழங்கினார். பீர்பால் தாம் அதைப் பெற்றுக் கொள்ளாமல், தமக்கு அந்தப் புதிருக்கு உரிய விளக்கத்தைக் கூறிய குடும்பத்தவரை வரவழைத்தார். “இவர்களே அந்தப் பரிசுக்கு உரியவர்கள்” என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறினார். அக்பர் சக்கரவர்த்தி வழங்கிய பரிசை அந்தக் குடும்பத்தவர் பெற வழிசெய்தார். பீர்பாலின் நேர்மையை வியந்து பாராட்டிய அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார்.



இன்றைய செய்திகள்


22.11.2023


*போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு லண்டனில் விருது.


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள்; அமைச்சர் தகவல்.


* நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது மதுரை ஐகோர்ட் அதிரடி.


*ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.


* பின்னணி பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


* ஐசிசி- இன் புதிய விதிமுறை: முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் வந்து வீச்சு அணி அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். அப்படி தயாராகாமல் இருப்பது மூன்றாவது முறையாக நிகழும் போது, 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.


Today's Headlines


* Chennai Metro Rail was  Awarded in London for its continuous involvement in activities beneficial to the environment, not only just transportation.


 * 2,700 special buses for Tiruvannamalai Karthikai Deepa festival;  Minister Information.


 * Madurai High Court –cannot order to give Patta to those who are encroaching on water bodies a striking action.


 *Minister Anbil Mahesh Poiyamozhi surprise visit to  Erode district government schools.


 * Playback singer P Susila was awarded an honorary doctorate degree by Chief Minister M K Stalin.


 * ICC's new rule: The batting team must be ready to bowl the next over within 60 seconds of the previous over.  The third occurrence of such unpreparedness will result in a penalty of 5 runs to the bowling team.


தேன்சிட்டு - 16-31 நவம்பர் 2023 இதழ் (Then Chittu - 16-31 November 2023 Magazine)...

  


தேன்சிட்டு - 16-30 நவம்பர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-30 November 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 16-30 நவம்பர் 2023 இதழ்  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2023 இதழ் (ThenChittu - 01-15 November 2023 Magazine)...

 


தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 November 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2023 இதழ்  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை - கற்றல் விளைவுகள் / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 20-11-2023 (School Education - State Assessment Field - 6th to 9th Class - Conduct of Learning Outcomes Skill Based Assessment Test District wise - Guidelines - State Project Director Integrated School Education and State Council of Education Research and Training Director's Proceedings Rc.No: 6519/ G3/ 2023 , Dated: 20-11-2023)...

 

 பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை - கற்றல் விளைவுகள் / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 20-11-2023 (School Education - State Assessment Field - 6th to 9th Class - Conduct of Learning Outcomes Skill Based Assessment Test District wise - Guidelines - State Project Director Integrated School Education and State Council of Education Research and Training Director's Proceedings Rc.No: 6519/ G3/ 2023 , Dated: 20-11-2023)...



>>> மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 20-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு (Minister Anbil Mahesh Poyyamozhi's sudden inspection of government schools)...



 அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு (Minister Anbil Mahesh Poyyamozhi's sudden inspection of government schools)...


பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென அரசு பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அதன்படி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.


அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது:-


நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும்.


ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.


பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...



 பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...


இன்று 21/11/23 காலை 8:15 மணியளவில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் உயர்திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை கிழக்கு பள்ளிக்கு முன்னறிவிப்பின்றி பார்வையிட்டார்.


பள்ளி வளாகம் மற்றும் கழிவறை மற்றும் காலை உணவு திட்டம் மிகச் சிறப்பாக உள்ளது என்றும் 


பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளது என்றும் 


காலை உணவுத் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும் பொதுவில் பள்ளிப் பார்வையில் திருப்தியாக உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்து வாழ்த்திச் சென்றார்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2023 - School Morning Prayer Activities...

    


திருக்குறள் : 



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:304


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.


விளக்கம்:


முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.



பழமொழி :

Good beginning makes a good ending


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


வாழ்வில் நீ

வெற்றி பெறும் போதெல்லாம்

உன் முதல் தோல்வி

நினைவுக்கு வந்தால்

உன்னை யாராலும்

வெல்ல முடியாது.


பொது அறிவு :


1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?


விடை: சென்னை


2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?


விடை:  மும்பை


English words & meanings :


 vehement –showing strong feeling.உணர்ச்சி வேகமுள்ள

versatile –Able to do different functions or activities, பல துறைகளிலும் திறமையுடைய


ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.


நவம்பர் 21


சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்



சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


உலகத் தொலைக்காட்சி நாள் 


உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.



நீதிக்கதை


 ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.


அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.


இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை களைப்படைந்துவிட்டது. பின் கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது. பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.


அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.


மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுங்குவதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.


சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.


கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது.  அந்த குரல் அது கழுதையினுடையது என்று நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதையை நரி மதிக்கவே இல்லை.


அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.


அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.


கழுத்தையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில் இருந்தது


இந்த கதையின் நீதி:


நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம்.



இன்றைய செய்திகள்


21.11.2023


*9 மாவட்டங்களில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


* தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.


* தமிழக முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 25ஆம் தேதி முதல் நிறுத்தம்.


* உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து 41 தொழிலாளர்களை மீட்பதற்கு மலையில் மூன்று இடங்களில் துளையிட முடிவு.


*முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி ரோஸ்லின் கார்ட்டர் காலமானார்.


Today's Headlines


* CM Stalin inaugurated 4272 flats in 9 districts.


 * Chance of very heavy rain in Tamil Nadu for the next three days.


 * Aavin's green milk packet will be stopped from 25th onwards all across Tamil Nadu.


 * Uttarakhand tunnel accident decided to drill three places in hill to rescue 41 workers.


 *Former US, First Lady Roslyn Carter has passed away.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken

  தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி "உடனடிய...