கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு ஆசிரியர் - நவம்பர் 2023 - மாத இதழ் (Kanavu Aasiriyar - November 2023 Monthly Magazine)...



கனவு ஆசிரியர் - நவம்பர் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் -  பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - November 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> கனவு ஆசிரியர் - நவம்பர் 2023 இதழை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனவு ஆசிரியர் - அக்டோபர் 2023 - மாத இதழ் (Kanavu Aasiriyar - October 2023 Monthly Magazine)...

 


கனவு ஆசிரியர் - அக்டோபர் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் -  பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - October 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> கனவு ஆசிரியர் - அக்டோபர் 2023 இதழை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வினாத்தாள் பதிவிறக்கம் - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பின்னூட்டம் சமர்ப்பித்தல் தொடர்பான தகவல் (Question Paper Download - Primary & Middle School Feedback Submission - Regarding)...



வினாத்தாள் பதிவிறக்கம் - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பின்னூட்டம் சமர்ப்பித்தல் தொடர்பான தகவல் (Question Paper Download - Primary & Middle School Feedback Submission - Regarding)...


SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING...


▪️ *தொடக்கப் பள்ளிகள்
அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால்

▪️22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.


▪️ *நடுநிலைப் பள்ளிகள்
6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே

▪️அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.



 // *மிக முக்கியம்* //  *//தனிக்கவனம்*//


*6 முதல் 8 வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள் தொடர்பாக...


அனைத்து நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.


6 முதல் 8 வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்கள் SCERT மூலம் தயாரிக்கப்பட்டு இணையத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வினாத்தாட்களைப் பதிவிறக்கம்  செய்து முதல் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும்  25.08.2023 நாளிட்ட மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்து முதல் பருவத் தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ( குறிப்பு:  *ஏற்கனவே தெரிவித்தவாறு அலுவலகத்தில் வினாத்தாட்கள் வழங்கப்படமாட்டாது*)



*வழிகாட்டு நெறிமுறைகள்- வினாத்தாள் பதிவிறக்கம்...


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு

 https://exam.tnschools.gov.in 


என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.


2. இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தலைமையாசிரியரின் EM1S கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்னைப் பயன்படுத்தலாம். வருப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் U-DISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம்.


3. Sign in செய்து 

உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive. பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.



4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


5. தேர்வு முடிந்த பின்பு Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு 'நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் பின்னூட்டம் வழங்குவதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS/ பள்ளியின் UDISE பதிவெண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ( *குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான வினாத்தாளைக் குறித்த காலத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்*)


6. பதிவிறக்கம் செய்த PDF வினாத்தாள்களில் பள்ளியின் UDISE எண் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


7. சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபடம் பதிவிறக்க வேண்டிய வினாத்தாளுடன் இணைக்கப் பெற்றிருக்கும். அவற்றை அச்சடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிதப் பாடத்துக்குத் தேவைப்படும் வரைதாள்களை (Graph sheet) பள்ளிகளே மாணவர்களுக்கு, வழங்கலாம்.


8 வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் உடனடியாக "14417" எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு தொடர்பில்லாத வேறொரு பள்ளியின் கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாளைப் பயன்படுத்தக் கூடாது


9. வினாத்தாள்களை அச்சிடுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்புடைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் (District Coordinators - Samagra Shiksha) வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும்.


10. தேர்வுகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும்.


மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காமல் மந்தனம் காத்து தேர்வினை நடத்துமாறு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்யும் முறை - காணொளி (Second Term / Half Yearly Exam  - Question paper download method - Video) School Education department... Madurai District...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

Google-click

⬇️

Tn school exam- click

⬇️

School

user name,pass word பதிவு செய்யுங்கள்.

⬇️

ஒரு page open ஆகும்.

அதில் 

Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

⬇️

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

⬇️

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

⬇️

இப்போது question paper download என்று கீழே வரும்.

⬇️

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.

⬇️

ஒவ்வொரு தேர்வுக்கும்

முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.



🔖அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்  https://exam.tnschools.gov.in என்ற portal-லில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..


🔖ஏற்கனவே LO CBT NAS Question / Quarterly Exam Question Paper download செய்தது போலவே பதிவிறக்கம் செய்து Print எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.


🔖 தேர்வு நாளன்று தினந்தோறும் பிற்பகல் 1.00 மணிக்கு Feedback submit செய்ய வேண்டும்.


▪️Feedback submit செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.


🔖வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் இடர்பாடுகள் இருந்தால் BRTE/BEO அல்லது 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.




நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் - ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல் - நாளிதழ் செய்தி (One day's salary for relief - Teacher's letter goes viral - daily news)...

நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் - ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல் - நாளிதழ் செய்தி (One day's salary for relief - Teacher's letter goes viral - daily news)...





தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சங்கத் தலைமைகளின் கவனத்திற்கு...


எனக்கு வரவேண்டிய 

1.EL

2.Incentive

3.CPS--->GPF

4.ஊதிய முரண் தீர்வு

5.DA arrear

6.21 மாத நிலுவைத் தொகை......

இன்னும் நிறைய இருக்கு. இதையெல்லாம் பெற்று தராத நீங்கள் என்னுடைய சம்மதம் இல்லாமல் என்னுடைய ஊதியத்தை பிடித்துக் கொள்ள அரசுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசிடம் நெருக்கம் காட்ட எங்களை பலி கொடுத்து விடாதீர்கள்.


போதும் கொடுத்ததெல்லாம் போதும். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து ஒரு வழி பாதையாகவே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். திமுக அரசிடமிருந்து இதுவரை எதையும் பெற்றது கிடையாது.


எதிரியாக நின்று அடித்தால் வலிக்கும் ஆனால் நண்பனாக இருந்து அடித்தால் வலிக்காது அல்லது வலிக்காதது போல் நடித்தாக வேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலைமை.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:319


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.


விளக்கம்:


 அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.


பழமொழி :

Humility often gains more than pride


அடக்கம் ஆயிரம் பொன் தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :1


.1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .



பொன்மொழி :


மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் அமர்ந்திரு; இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட – இங்கிலாந்து



பொது அறிவு :


1. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை


விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்


2. இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல் யார்?


விடை: சாம் மானேக்சா (Jamshedji Manekshaw)



English words & meanings :


 modesty (n)- state of being modest நிதானம். 

moisture (n)- dampness ஈரம்


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ : உலர் ஆவாரம்பூவை பொடித்து செய்யப்படும் பானம் மிகவும் சிறந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் இந்த பானத்தை  தயாரித்து கொடுக்கலாம்



டிசம்பர் 13


நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.



நீதிக்கதை


 The Flies & the Honey – ஈக்களும் தேனும்


  ஒரு வீட்டுல ஒரு பெரிய தேன் பாட்டில் இருந்துச்சு. அதுல இருந்து கொஞ்சம் தேன் கீழ சிந்திடுச்சு. பக்கத்துல இருந்த ஈக்கள் எல்லாம் அதுல போயி மொச்சிச்சுங்க.


தேன் மேல அமர்ந்ததும் அதுங்களோட இறக்கை எல்லாம் தேனுல ஒட்டிகிடுச்சு. அதுங்களால தேன்ல இருந்து விடுபட முடியல. எவ்வளவு முயற்சி செஞ்சும் தேன்ல இருந்து வெளியவர முடியாத ஈக்கள் அதுலேயே கிடந்து செத்துப்போச்சுங்க. இனிப்பான தேனிற்கு ஆசைப்பட்ட ஈக்கள் வீனா செத்துப்போச்சுங்க.


நீதி : சிற்றின்பத்தில் கவனம் வைக்க கூடாது.



இன்றைய செய்திகள்


13.12.2023


*3449 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


*குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்.


*வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு.


*தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு.


*சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இம்மாதம் 15 - 21 ஆம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


Today's Headlines


* Incentives for 3449 sanitation workers;  given by Chief Minister M. K. Stalin.


 Donald Trump is leading the race for the Republican presidential nomination.


 *In person inspection by Central Committee in flood affected areas.


 *  Electric train traffic in Tambaram-Chennai beach route is affected.


 *Chennai Grand Master Chess Championship: The Tamil Nadu government has announced that it will be held from 15th to 21st of this month at Chennai Leela Palace.

 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...

 


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...


10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



>>> Click Here to Download CBSE Secondary School (10th) Examination Date Sheet 2024...



>>> Click Here to Download CBSE Senior Secondary School Certificate (12th) Examination Date Sheet 2024...



உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் (Assessment Test for Career Guidance Counsellor Teachers - SPD Proceedings)...


 உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் (Assessment Test for Career Guidance Counsellor Teachers - SPD Proceedings)...



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> பதிவு செய்யும் முறை - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...