கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வினாத்தாள் பதிவிறக்கம் - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பின்னூட்டம் சமர்ப்பித்தல் தொடர்பான தகவல் (Question Paper Download - Primary & Middle School Feedback Submission - Regarding)...



வினாத்தாள் பதிவிறக்கம் - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பின்னூட்டம் சமர்ப்பித்தல் தொடர்பான தகவல் (Question Paper Download - Primary & Middle School Feedback Submission - Regarding)...


SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING...


▪️ *தொடக்கப் பள்ளிகள்
அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால்

▪️22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.


▪️ *நடுநிலைப் பள்ளிகள்
6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே

▪️அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.



 // *மிக முக்கியம்* //  *//தனிக்கவனம்*//


*6 முதல் 8 வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள் தொடர்பாக...


அனைத்து நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.


6 முதல் 8 வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்கள் SCERT மூலம் தயாரிக்கப்பட்டு இணையத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வினாத்தாட்களைப் பதிவிறக்கம்  செய்து முதல் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும்  25.08.2023 நாளிட்ட மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்து முதல் பருவத் தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ( குறிப்பு:  *ஏற்கனவே தெரிவித்தவாறு அலுவலகத்தில் வினாத்தாட்கள் வழங்கப்படமாட்டாது*)



*வழிகாட்டு நெறிமுறைகள்- வினாத்தாள் பதிவிறக்கம்...


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு

 https://exam.tnschools.gov.in 


என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.


2. இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தலைமையாசிரியரின் EM1S கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்னைப் பயன்படுத்தலாம். வருப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் U-DISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம்.


3. Sign in செய்து 

உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive. பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.



4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


5. தேர்வு முடிந்த பின்பு Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு 'நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் பின்னூட்டம் வழங்குவதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS/ பள்ளியின் UDISE பதிவெண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ( *குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான வினாத்தாளைக் குறித்த காலத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்*)


6. பதிவிறக்கம் செய்த PDF வினாத்தாள்களில் பள்ளியின் UDISE எண் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


7. சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபடம் பதிவிறக்க வேண்டிய வினாத்தாளுடன் இணைக்கப் பெற்றிருக்கும். அவற்றை அச்சடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிதப் பாடத்துக்குத் தேவைப்படும் வரைதாள்களை (Graph sheet) பள்ளிகளே மாணவர்களுக்கு, வழங்கலாம்.


8 வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் உடனடியாக "14417" எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு தொடர்பில்லாத வேறொரு பள்ளியின் கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாளைப் பயன்படுத்தக் கூடாது


9. வினாத்தாள்களை அச்சிடுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்புடைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் (District Coordinators - Samagra Shiksha) வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும்.


10. தேர்வுகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும்.


மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காமல் மந்தனம் காத்து தேர்வினை நடத்துமாறு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்யும் முறை - காணொளி (Second Term / Half Yearly Exam  - Question paper download method - Video) School Education department... Madurai District...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

Google-click

⬇️

Tn school exam- click

⬇️

School

user name,pass word பதிவு செய்யுங்கள்.

⬇️

ஒரு page open ஆகும்.

அதில் 

Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

⬇️

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

⬇️

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

⬇️

இப்போது question paper download என்று கீழே வரும்.

⬇️

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.

⬇️

ஒவ்வொரு தேர்வுக்கும்

முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.



🔖அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்  https://exam.tnschools.gov.in என்ற portal-லில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..


🔖ஏற்கனவே LO CBT NAS Question / Quarterly Exam Question Paper download செய்தது போலவே பதிவிறக்கம் செய்து Print எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.


🔖 தேர்வு நாளன்று தினந்தோறும் பிற்பகல் 1.00 மணிக்கு Feedback submit செய்ய வேண்டும்.


▪️Feedback submit செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.


🔖வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் இடர்பாடுகள் இருந்தால் BRTE/BEO அல்லது 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...