நெல்லை சிந்துபூந்துறை சாந்திஸ்வீட்ஸ் அல்வா குடோன் பின்புறம் காமராஜர் நகரில் முதல் மாடி வரை வெள்ளம்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்ட காட்சி..
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்ட காட்சி..
ரயில் பயணிகள் மீட்பு பணி...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பயணி பத்திரமாக மீட்பு
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேரும் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்...
கழுகுப் பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தின் மழை வெள்ளக் காட்சிகள்...
கழுகுப் பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தின் மழை வெள்ளக் காட்சிகள்...
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான வினாக்களும் விடைகளும்...
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான வினாக்களும் விடைகளும் - FAQs - Questions and Answers on Michaung Cyclone Relief Fund...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2023...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
விளக்கம்:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
பழமொழி :
Jack of all trade is master of none
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.
பொன்மொழி :
நாம் எதை தொடர்ந்து
செய்கிறமோ அதுவாகவே
மாறுகின்றோம்.. எனவே
திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்.
பொது அறிவு :
1. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
விடை: சவுதி அரேபியா
2. செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு எது?
விடை: பிரான்ஸ்
English words & meanings :
fair - just, impartial, adjective and adverb, நியாயமான, பெயரடை, வினையுறிச் சொல்.
fair - money for journey. noun. பயணக் கட்டணம். பெயர்ச் சொல்.
ஆரோக்ய வாழ்வு :
இலுப்பை பூ : எண்ணெய் வலி நிவாரண மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்கவும், கோவில்களில் விளக்கு எரிக்கவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
துரோகியின் நட்பு வேண்டாம்.
காட்டு ராஜா சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. சிங்கம் நல்ல பசியுடன் இருந்தது. அவ்வழியே வந்த ஓநாய் ஒன்று சிங்கத்தின் கண்களில் பட்டுவிட்டது.
ஓநாயைப் பார்த்ததும் சிங்கம் கர்ஜித்தது. "ஏய் நில் அப்படியே” என மிரட்டியது. ஓநாய் பயந்து நடுங்கி நின்றபடி "மகாராஜா வணக்கம்" என்றது.
"உன்னிடம் நான் வணக்கத்தைக் கேட்கவில்லை என்றது சிங்கம். மீண்டும் கர்ஜித்தது.
"வேறு என்ன ராஜா வேண்டும்" என்றது ஓநாய்.
"எனக்குப் பசியாக இருக்கிறது. அதனால் உன்னைக் கொன்று சாப்பிடப் போகிறேன்" என்றதும், ஓநாய் அலறியது.
"அய்யோ, மகாராஜா, நான் மிகவும் சிறியவன். உங்கள் பசிக்குப் போதாது. நான் வரும் வழியில் முரட்டுக்குதிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது. அதை எப்படியாவது அழைத்து வருகிறேன். அதைக் கொன்று சாப்பிடுங்கள். தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்" எனக் கெஞ்சியது ஓநாய்.
"சரி அப்படியே செய். என்னை ஏமாற்றி விட்டு ஓட மட்டும் முயலாதே" என கர்ஜித்து. ஓநாயை விரட்டிவிட்டது சிங்கம்.
தப்பித்தோம் பிழைத்தோம் என தலை தெறிக்க ஓடியது ஓநாய். முரட்டுக் குதிரை இருந்த இடத்தை அடைந்தது. அதனிடம் ஓநாய், "குதிரையே ஒரு அழகான மேய்ச்சல் நிலம் பார்த்து வந்தேன். என்னுடன் வந்தால் உனக்குக் காட்டுகிறேன். பசும் புல்வெளி உள்ள இடம்" என ஆசை வார்த்தை காட்டியது.
ஓநாயின் பேச்சை உண்மை என நம்பிய குதிரை அதன் பின்னால் ஓடி வந்தது. ஓநாயின் திட்டப்படி, குதிரை
ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டது. குதிரையினால் மேலே வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. எனவே அதனால் தப்பித்துச் செல்லவும் முடியாது.
ஒநாய் நேரே சென்று சிங்கத்தை, குதிரை இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது. குதிரை எங்கும் இனி தப்பிச் செல்ல முடியாது, பிறகு பார்த்துக் கொள்வோம் என எண்ணிய சிங்கம், "ஓநாயே, நீ உயிர் பிழைக்க, மற்றொரு மிருகத்தைக் கொல்லச் சொல்லிக் காட்டிக் கொடுக்கிறாயே, நீ ஒரு நம்பிக்கைத் துரோகி. உனக்காக எதையும் நீ செய்வாய். உன்னைப் போன்றவர். உயிருடன் இருக்கக் கூடாது." என்றவாறே ஓநாய் மீது பாய்ந்து கொன்றது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
நீதி: நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீமையை நினைத்தால் தீமை தான் நடக்கும்.
இன்றைய செய்திகள்
20.12.2023
*தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்- கர்நாடகாவிற்கு பரிந்துரைத்த காவிரி ஒழுங்காற்று குழு.
*நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை - என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
*ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவிக்கும் 500 பயணிகளை சென்னைக்கு அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு.
*சீனாவில் கடும் நிலநடுக்கம் 111 பேர் பலி; 6.2
ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் இடிந்து சேதம்.
*ஐபிஎல் ஏலம் மிக்செல்
ஸ்டார்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
Today's Headlines
*Water should be released to Tamil from Karnataka recommended by the Cauvery Regulation Committee.
*Terrific fire accident at Neyveli NLC mine; No one is in danger - NLC management said.
*Special train is arranged to bring 500 stranded passengers to Chennai who are in Sentur Express train at Srivaikundam railway station.
* 111 dead in severe earthquake in China; 6.2
Buildings collapsed due to Richter magnitude earthquake.
*IPL Auction Mixel
Kolkata bought Star for Rs 24.75 crore.
கனமழை பாதிப்பு காரணமாக 20-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...
கனமழை பாதிப்பு காரணமாக 20-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 20-12-2023 due to heavy rain) விவரம்...
கனமழை பாதிப்பு காரணமாக நாளை (20.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕ *தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *தென்காசி* (பள்ளிகள் மட்டும்)
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்களில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தூத்துக்குடிக்கு செல்ல அறிவுறுத்தல்.
10 குழுக்கள் தூத்துக்குடியில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.
திருநெல்வேலி மாவட்டத்தில் (20.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024
கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...