அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாக விழுதுகள் என்ற புதிய முன்னெடுப்பு - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் - A new initiative of the Tamil Nadu Government to unite former students who studied in government schools is a new initiative called Vuzhuthukal - Hon'ble Minister of Youth Welfare and Sports Development Mr. Udhayanidhi Stalin will inaugurate...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...
இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898 மாணவர்களை கண்டறிந்து, இவர்களில் 600 மாணவர்களை மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 993 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் இவர்களில் 1,898 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் இடை நின்றது கல்வித்துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து, இடைநின்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அணுகி, அவர்கள் இடைநின்றதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்து, இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளின் வழியே உத்தரவிட்டிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
ஏழை மாணவியின் வீடு தேடி வந்து கதவை தட்டிய கலெக்டர்..!
வெறும் உத்தரவோடு நில்லாமல், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் , வருவாய் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய அந்தந்த ஏரியாவின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான ஆசிரியர்கள், சம்பந்தபட்ட மாணவர்களின் வீடு தேடி சென்று பேசியிருக்கின்றனர். இதன் நேரடி பலனாக முதற்கட்டமாக 176 பெண் பிள்ளைகளும்; 226 ஆண் பிள்ளைகளுமாக ஆக மொத்தம் 402 மாணவர்களை ஒரே நாளில் மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்தியுள்ளனர்.
இதோடு நில்லாமல், நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதனூர் ஒன்றியம் , ஆம்பூர் கன்கார்டியா அரசு நிதியுதவி பெரும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இடைநின்ற மாணவர்களின் பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு அவர்களது வீடு தேடி கதவை தட்டியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். இதன்படி, 53 மாணவ – மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பித்திருக்கிறார், அவர்.
மாணவி ஒருவரின் மருத்துவ செலவை ஏற்றதோடு, மாணவர்கள் சிலரை தனது காரிலேயே பள்ளிவரை கூட்டிச்சென்று இறக்கிவிட்டிருக்கிறார். அம்மாணவர்களுக்குத் தேவையான கற்றல்சார்ந்த உபகரணங்களையும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார்.
“கல்வி ஒன்று தான் உங்களை கரை சேர்க்கும். கல்வி ஒன்று மட்டுமே தங்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும். கல்வி கற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். கல்வியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தினந்தோறும் பள்ளிக்கு சென்று நீங்கள் சிறந்த எதிர்காலத்தை பெறுவதற்கு முனைய வேண்டும் என்று விழிப்புணர்வூட்டி முதல்வரின் முன்னெடுப்பினால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்” எனவும் அவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசியபோது, “பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக்கு கொண்டுவர பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 605 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்கிறார், பூரிப்போடு...
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு...
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு - 2024 ICC T20 World Cup Cricket Match Schedule Released...
ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 2024 டி20 (Twenty Twenty) உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும்.
பசுமை சாம்பியன் விருது - 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- பரிசு...
பசுமை சாம்பியன் விருது - 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- பரிசு - Pasumai Champion Award - Rs.1,00,000/- prize to 100 individuals...
மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் அவர்கள் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த, நிதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும். 2021-2022 முதல் ரூ.1/- கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனி நபர்கள் /உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
5. நிலைத்தகு வளர்ச்சி
6. திடக்கழிவு மேலாண்மை
7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு
8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
9. காற்று மாசு குறைத்தல்
10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை
11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு
12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை
13. பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - நிறுவனங்கள் & பணியிடங்கள் எண்ணிக்கை...
தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - நிறுவனங்கள் & பணியிடங்கள் எண்ணிக்கை - District Skill Training Office - Krishnagiri - PM National Apprenticeship Mela - January 2024 - Venue: Govt ITI Hosur, Date: 08.01.2024 - ESTABLISHMENTS VACANT AND STALL DETAIL...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் ஜனவரி 10 (புதன்) 2024 முதல் - PM National Apprenticeship Mela from 10th (wed) Jan 2024...
தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் ஜனவரி 10 (புதன்) 2024 முதல் - PM National Apprenticeship Mela from 10th (wed) Jan 2024...
Educational District wise Status of Hi-Tech lab DEE - As on 04.01.2024 - 11.00pm...
Middle Schools - Hi-Tech Lab - Site Preparation Status on 04-01-2024...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...