கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"விழுதுகள்” - அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை...



>>> "விழுதுகள்” - அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை...



 "விழுதுகள்” அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.mkstalin அவர்களின் வாழ்த்துரையை, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.Anbil_Mahesh அவர்கள் வாசித்தார்...


அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்!" என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்குதல் - நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்...


1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு Ennum Ezhuthum Students Report Card வழங்க உத்தரவு - SPD Proceedings...


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்குதல் - நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளுக்கு மாற்றாக 4 ஆண்டுகள் பி.எட்., - ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (ITEP) அறிமுகம்...



2 ஆண்டுகள் பி.எட்., (B.Ed.,) படிப்புகளுக்கு மாற்றாக 4 ஆண்டுகள் பி.எட்., - ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (ITEP) அறிமுகம் - Integrated Teacher Education Programme (ITEP)...



>>> Click Here to Download Circular of REHABILITATION COUNCIL OF INDIA...



 REHABILITATION COUNCIL OF INDIA 

F.No. 8-A/Policy(Recog)/2009/RCI 

CIRCULAR 

11. January, 2024 

In order to upgrade the competency of teachers, the National Council for Teacher Education (NCTE) has launched the Integrated Teacher Education Programme (ITEP) under the New Education Policy (NEP) 2020 in which the duration of B.Ed. programme has been increased from two years to four years and discontinued giving approval of two years B.Ed. programme from the academic session 2023-24. 


This Council has decided not to grant new approvals to any institutions for running two year B.Ed. (Special Education) programme(s) from the academic session 2024-25. The Council is in the process of developing a new training programme on the pattern of NCTE soon, as per NEP 2020. 


All the institutions/ colleges/ universities who desire to run the Integrated B.Ed. Special Education of 4 year duration (in line of the Integrated Teacher Education Programme - ITEP of NCTE) may apply afresh for the next academic session once the online portal is opened. 


(Vikas Trivedi) 

Member Secretary 

E-mail: rci-depwd@gov.in 

Website : www.rehabcouncil.nic.in



TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) X தளத்தில் (ட்விட்டரில்) @TNPSC_Office எனும் முகவரியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளது...

 TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) X தளத்தில் (ட்விட்டரில்) @TNPSC_Office எனும் முகவரியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளது...






போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிக வாபஸ்...



போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிக வாபஸ்...


தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.


வேலை நிறுத்தத்தைத் கைவிட்டு, உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பண்டிகைக் காலத்தில் போராட்டம் நடத்துவது, மக்களை பிணைக் கைதிகளாக வைத்து போராடுவது போல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் இதில் கருத்துத் தெரிவித்துள்ளது.




முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைப்பு...

 மார்ச் 3ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு...







முதுகலைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (நீட் பிஜி 2024) 2024 தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 15 அல்லது அதற்கு முன்பு தங்கள் கட்டாய இன்டர்ன்ஷிப்பை முடிக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி நடத்தப்படும் என்று வாரியம் தனது நவம்பர் 9 அறிவிப்பை இடைநிறுத்தியுள்ளது.

"2024 மார்ச் 3 ஆம் தேதி தற்காலிகமாக நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நீட்-பிஜி 2024 தேர்வை நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட்-பிஜி 2024 இப்போது ஜூலை 7, 2024 அன்று நடத்தப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மேற்கண்ட தேதிகள் முற்றிலும் தற்காலிகமானவை மற்றும் ஒப்புதல்கள் மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு உட்பட்டவை என்பதால் வேட்பாளர்கள் தேர்வுகளின் சரியான தேதிகளை தகவல் புல்லட்டின்கள்/என்பிஇஎம்எஸ் வலைத்தளத்திலிருந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள், தகவல் தொகுப்பு மற்றும் தேர்வு தொடர்பான பிற விவரங்கள் natboard.edu.in ஆம் தேதி வழங்கப்படும்.

நீட்-பிஜி என்பது நாட்டில் எம்.டி /எம்.எஸ் மற்றும் பி.ஜி டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான தேர்வாகும்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட "முதுகலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறைகள், 2023" படி இந்த ஆண்டு தேசிய எக்ஸிட் தேர்வு (என்எக்ஸ்டி) இருக்காது. முதுநிலை மாணவர் சேர்க்கை நோக்கத்திற்காக முன்மொழியப்பட்ட தேசிய எக்ஸிட் டெஸ்ட் (என்எக்ஸ்டி) நடைமுறைக்கு வரும் வரை தற்போதுள்ள நீட்-பிஜி தேர்வு தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட என்எக்ஸ்டி தேர்வு நீட் பி.ஜி, எஃப்.எம்.ஜி.இ தேர்வுகளுக்கு மாற்றாக ஒரு பொதுவான தகுதி இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வாகவும், நாட்டில் நவீன மருத்துவம் பயில ஒரு நுழைவுத் தேர்வாகவும், முதுகலை படிப்புகளுக்கு தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்காகவும், இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்பும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் செயல்படும்.


ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்...



மகளின் நினைவாக ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த தானமாக வழங்கிய வங்கி ஊழியர்...


💥மதுரை: இறந்த மகளின் நினைவாக பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மதுரை வங்கி ஊழியர்.                 


💥மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரைஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் வங்கி ஊழியரான பூரணம்.          


💥கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் உள்ளனர். 



💥இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதை கேள்விப்பட்ட வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தார்.      


💥அதனையொட்டி அதற்கான பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமையாசிரியர் சம்பூர்ணம் முன்னிலையில் ஒப்படைத்தார்.     



💥இதுகுறித்து வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் கூறியது: “நான் பிறந்தது கொடிக்குளம். அப்பா எனக்கு வழங்கியது ஒன்றரை ஏக்கர் நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கி ஊழியர்.           


💥எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் 31 ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார். எனது மகளை பி.காம் வரை படிக்க வைத்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன்.       



💥குடும்பப் பிரச்சினையால் எனது மகள் இறந்தபோது நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்யுமாறு கூறினார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன்.      



💥எனது மகள் இறந்தபோது யாருக்காக வாழ்வது என நினைத்தேன். 



💥அவர் சொன்னதுபோல் தான, தர்மங்கள் செய்யவே வாழ்ந்து வருகிறேன். கடந்த 1998-ல் எனது சகோதரருக்காக ஒரு கிட்னியும் வழங்கி ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவருகிறேன்.            



💥எனது மகள் சொன்னபடி கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளேன். 



💥இதன் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன். வெளியில் தெரியாமல் பல தர்ம காரியங்கள் செய்துவருகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...