கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"விழுதுகள்” - அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை...



>>> "விழுதுகள்” - அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை...



 "விழுதுகள்” அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.mkstalin அவர்களின் வாழ்த்துரையை, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.Anbil_Mahesh அவர்கள் வாசித்தார்...


அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்!" என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...