கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதி மாற்றம் - தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவிப்பு...


முதல் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதியாக அறிவிக்கப்பட்ட 24-03-2024 அன்று கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு காரணமாக 23-03-2024 சனிக்கிழமைக்கு மாற்றம்...


- தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவிப்பு...



>>> நாடாளுமன்றத் தேர்தல் - 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் - தேதிகள் - முன்னதாக வெளியிடப்பட்ட தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...

நாடாளுமன்றத் தேர்தல் - 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் - தேதிகள் - முழு விவரம் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம் வெளியீடு...



 நாடாளுமன்றத் தேர்தல் - 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் - தேதிகள் - முழு விவரம் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம் வெளியீடு...


Parliamentary Elections - 4 Phase Election Training Classes - Dates - Full Details Chief Electoral Officer's Letter Released...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*24.03.2024* ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு

 

*7.04.2024* ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு 


*16.04.2024* செவ்வாய் 

பயிற்சி வகுப்பு 


*18.04.2024* வியாழன் 

பயிற்சி வகுப்பு 


*19.04.2024* வெள்ளி

*தேர்தல்*

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

 மக்களவைத் தேர்தலுக்கான 16 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...


 

16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...


👉 வடசென்னை - ராயபுரம் மனோகரன்

👉தென் சென்னை - ஜெயவர்தன்

👉காஞ்சிபுரம் - ராஜசேகர்

👉அரக்கோணம் - விஜயன்

👉ஆரணி - கஜேந்திரன்

👉கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

👉விழுப்புரம் - பாக்கியராஜ்

👉சேலம் - விக்னேஷ்

👉நாமக்கல் - தமிழ்மணி

👉ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

👉கரூர் - தங்கவேல்

👉சிதம்பரம் - சந்திரஹாசன்

👉மதுரை - சரவணன்

👉தேனி - நாராயணசாமி

👉நாகை - சுர்ஜித் சங்கர்

👉இராமநாதபுரம் - ஜெயபெருமாள்


👉தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

👉புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு






மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...


மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..


1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி


2) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்


3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்


4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்


5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்


6) வேலூர் - கதிர் ஆனந்த்


7 ) தருமபுரி - அ.மணி


8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை 


9 ) சேலம் - செல்வ கணபதி


10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்


11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா


12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி


13 ) கோவை - கணபதி ராஜ்குமார்


14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி


15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி


16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்


17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு


18 ) பெரம்பலூர் - அருண் நேரு


19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்


20 ) ஈரோடு - பிரகாஷ் 


21 ) ஆரணி - தரணி வேந்தன்



2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

 


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :-


2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது...


Release of DMK manifesto for Parliament Lok Sabha elections 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்


✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்


✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்


✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்


✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்


✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்


✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்


✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்


✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்


✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும்


✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்


✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது


✨மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்


✨100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்


✨தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்


✨பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்


✨நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்


- திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு...


2024 மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை...


குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூட மாட்டோம் - தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்...

 

குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூட மாட்டோம் - தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்...

 


மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டம் இல்லை' என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுதும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.


மாவட்ட வாரியாக இதற்கான பட்டியல் சேகரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 32 பள்ளிகளை மூடி விட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவானது.


இதுகுறித்து  நேற்று விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை மூடும் முடிவை பள்ளிக்கல்வித்துறை கைவிட்டு உள்ளது.



இதுதொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று வரை, 2.19 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1.88 லட்சம் பேர் சேர்ந்து உள்ளனர்.


இதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், 20,000 தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும், 8,000 அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்களும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், 80,000 ஆசிரியர்களுக்கு நவீன வழியில் பாடம் நடத்த, 'டேப்' என்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.


மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.


இந்நிலையில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவான, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துஉள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.


தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


1 முதல் 9 வகுப்புகளுக்கு தேர்வு தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்ப்பு...


1 முதல் 9 வகுப்புகளுக்கு தேர்வு தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு...



   +2 , + 1 மற்றும்  SSLC வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியுடன் பொது தேர்வுகள் நிறைவு பெறுவதுடன் தொடர்ந்து விடுமுறை என்பதால், மீதியுள்ள 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 க்குள் தேர்வுகள் நடத்தி விடுமுறை விட ஏதுவாக அதற்கான அறிவிப்பு முறையாக பள்ளிக்கல்வித்துறையால் இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...