கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பயிற்சி வகுப்பு - 126 வினாக்கள் & அவற்றிற்கான விடைகள் தொகுப்பு...

 

தேர்தல் பயிற்சி வகுப்பு - 126 வினாக்கள் & அவற்றிற்கான விடைகள் தொகுப்பு...


Election Training Class - 126 Questions & Answers...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பயிற்சி வகுப்பு - மதிப்பீடு வினாக்கள்...

 

தேர்தல் பயிற்சி வகுப்பு - மதிப்பீடு வினாக்கள்...

Election Questions - Training

1. வாக்குச் சாவடியில் , வாக்குப் பதிவு துவங்கும் சமயத்திலும், முடிவுறும் சமயத்திலும் உள்ள முகவர்களின் விபரம், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பில் குறிப்பிடப்பட வேண்டுமா?.

ஆம்

இல்லை

2. வாக்குச்சாவடிக்குள், ஒரு வேட்பாளருக்கு, ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படும் முகவர்கள் எண்ணிக்கை.

ஒன்று

இரண்டு

மூன்று

Other:

3. முகவர்களை வாக்குச்சாவடிக்குள் அமர வைக்கப்படும் வரிசை

முகவர்களின் பெயரில் உள்ள அகரவரிசைப்படி

வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள வேட்பாளர்களின் வரிசைப்படி

4. வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு எத்தனை மணிநேரத்திற்கு முன்பிருந்து முகவர்களை வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்லவோ, மீண்டும் உள்ளே வரவோ அனுமதிக்கக் கூடாது.

ஒரு மணி நேரம்

இரண்டு மணிநேரம்

½ மணி நேரம்

5. VVPAT-ல் வாக்காளர் வாக்களித்தவுடன் வ.எண், வேட்பாளரின் பெயர் சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டு வாக்காளரின் பார்வைக்கு எத்தனை விநாடிகள் காணக்கிடைக்கும்.

7

10

5


6. VVPAT என்பதன் விரிவாக்கம்

Verifiable Voter Paper Audit Trail

Voter Verifiable Paper And Trail

Voter Verifiable Paper Audit Trail

7. Electronic Voting Machine –ல் உள்ள மூன்று Unitகளை இணைக்கும் முறை

BU -> VVPAT -> CU (BVC)

CU -> BU -> VVPAT (CBV)

VVPAT -> CU -> BU (VCB)

8. EVM ன் மூன்று Unit களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்த பின்னர் VVPAT இயந்திரத்தின் பின்பகுதியில் உள்ள Control Switch பயன்பாட்டு நிலைக்கு (Working) மாற்றியபின்னர் , எத்தனை துண்டுசீட்டுகள் சுய பாிசோதனைக்கு அச்சிடப்பட்டு சேகரமாகும்?

5

7

8

9. வாக்குப்பதிவு நேரத்திற்கு எத்தனை மணிநேரத்திற்கு முன்னதாக , மாதிரி வாக்குப் பதிவு (Mock Poll) துவங்க வேண்டும்?

ஒரு மணி நேரம்

1 ½ மணி நேரம்

½ மணி நேரம்

10. மாதிரி வாக்குப் பதிவின் போது வாக்குச்சாவடி முகவர்கள் வருகை தாரத பொழுது முகவர்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கலாம்

½ மணி நேரம்

15 நிமிடங்கள்

1 மணி நேரம்

11. மாதிரி வாக்குப்பதிவின் போது குறைந்தபட்சம் எத்தனை வாக்குப்பதிவுகள் செய்ய வேண்டும்

50

100

20

12. மாதிரி வாக்குப் பதிவில் Ballot Unit -ல் எந்தெந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட வேண்டும்?

அனைத்து வேட்பாளர்கள்

NOTA மட்டும்

10 வேட்பாளர்கள் மட்டும்

NOTA உட்பட அனைத்து வேட்பாளர்களுக்கும்

13. மாதிரி வாக்குப் பதிவு முடிவடைந்ததும், பதிவான மாதிரி வாக்குகளை எண்ணிக்கை சாிபார்க்க CU-ல் அழுத்த வேண்டிய Button. .

Close

Clear

Total

14. மாதிரி வாக்குப் பதிவு முடிந்து, Total சாிபார்த்த பின் Control Unit -ல் எந்த Button அழுத்தப்பட வேண்டும்.

Total

Close

Clear

15. மாதிரி வாக்குப் பதிவு ( MOCK POLL) முடிந்து, Total சாிபார்த்த பின்னர் வாக்குப் பதிவிற்கு control Unit -ஐ தயார் படுத்த அழுத்தப்பட வேண்டிய Button முறை.

Close - Result - Clear

Clear - Result - Close

Result - Clear - Close

16. மாதிரி வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு சாவடி தலைமை அலுவலர் அளிக்க வேண்டிய சான்று(Mock Poll Certificate).

Annexure -5 Part-I

Annexure -5 Part-II

Annexure -5 Part-III

17. Actual வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன், Control Unit-ல், Total எவ்வளவு இருக்க வேண்டும்

50

0

7

18. மாதிரி வாக்குப் பதிவின் போது (அ) வாக்குப் பதிவின் போது (அ) வாக்குப் பதிவு முடிவுற்றப்பின் Control Unit Power Pack மாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பின், அதற்கான பதிவுகள் மேற்கொள்ள வேண்டிய படிவம்

Annexure -5 Part-I

Annexure -5 Part-II

Annexure -6

19. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் Control Unit -ல் Close Button அழுத்தியமைக்கான சான்று, அளிக்கப்பட வேண்டிய படிவம்

Annexure -6 Part-III

Annexure -5 Part-III

Annexure -5 II

20. மாதிரி வாக்குப் பதிவின் போது EVM அல்லது VVPAT மாற்றப்பட்டால் அதற்கான விபரம் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம்.

Annexure -5 Part-IV

Annexure -6 Part-IV

Annexure -5 II

21. வாக்கு சாவடி தலைமை அலுவலர், வாக்குப் பதிவு துவங்கும் முன்னர் அளிக்க வேண்டிய சான்று (Before Commencement of Poll)

Annexure -6 Part-I

Annexure -6 Part-II

Annexure -5 I

22. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்,வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் (At the end of the poll) அளிக்க வேண்டிய சான்று

Annexure - 6 Part III

Annexure -6

Annexure – Part 5

23. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிட்ட பிறகு அளிக்க வேண்டிய சான்று

Annexure - 6 Part IV

Annexure - 5 Part IV

Annexure - 5 Part III

24. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு(presiding officer diary)

Annexure -6

Annexure -17

Annexure -7

25. பதிவான வாக்குகளின் கணக்கு குறித்த படிவம் (Account of votes recorded)

Form 17C Part 1

Form 17A

Form 17D

26. வாக்கு எண்ணிக்கை விபரம் (result of counting) பதிவு செய்வது குறித்தபடிவம்

Form 17A

Form 17C part 2

27. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்படும் Tendered ballot paper எண்ணிக்கை

10

20

30

28. வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பதிவான வாக்குகள் குறித்து வழங்க வேண்டிய அறிக்கை

Form 17A

Form 17C

Form 17B

29. வாக்குப்பதிவு முடிந்த உடன் எந்தெந்த ஆவணங்கள் / இயந்திரங்களில் உள்ள மொத்த எண்ணிக்கை சாியாக இருக்க வேண்டும்

CU -17A

CU -17B

CU-17C

VVPAT-control unit-17C

30. Tendered ballot paper -ல் எதைப் பயன்படுத்தி வாக்களிப்பது?

Arrow cross

Mark metal seal

VVPAT-control unit-17C

31. Postal Ballot வழங்க வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம்

Form 12A

Form 12

Form 12C

32. EDC வழங்க வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம்

Form 12A

Form 12

Form 12C

33. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய முதல் பாக்கெட்டில் இருக்க வேண்டியவை எவை?

Statutory paper

EVM papers

Non statutory pape

34. Mock Poll Slip-கள் VVPAT லிருந்து சேகரம் செய்து வைக்கும் உறையின் நிறம்.

கருப்பு

பச்சை

வெள்ளை

35. தான் வாக்களித்த வேட்பாளர் அன்றி வேறொருவருக்கு வாக்களித்ததாக VVPATகருவியில் தோன்றுவதாக தொிவித்தால் விதி எண் 49MA ன் படிஅனுமதிக்கப்படும் வாக்கு

Proxy vote

Test vote

Challenge vote

36. Polling officer II பதிவான வாக்குகளை பதிவு செய்யும் பதிவேடு

17C

17B

17A

37. Classified Service Voters க்குபதிலாக அவரால் அங்கீகாிக்கப்பட்ட நபர் வாக்களிக்க அனுமதிக்கப்படும் வாக்கு

Test vote

Proxy vote

Service vote

38. Proxy Vote அளிக்கப்படும் பட்சத்தில் படிவம் 17A ல் கலம் 2ல் பதிவுசெய்யப்படும் விபரம்

CSV

PV

TV

39. நுண்பார்வையாளர் (micro observer) அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்படுவர்

ஆம்

இல்லை

40. படிவம் 17A (Register of Votes) ல் மேற்கொள்ளப்படும் பதிவிற்கு பொறுப்பான அலுவலர் / அலுவலர்கள்

P.O.1

P.O 2.

P.O 2 and Presiding officer

41. கீழ்கண்டவற்றில், படிவம் 17A ல் பதியப்படும் ஆவணங்களில் குறிப்பிடப்படும் சுருக்கம் எது தவறானது?

PAN Card-PA

Aadhar Card-AC

Indian passport-IP


42. விதி எண் :49 (0)வின் படி ஒருவர் கைவிரலில் மையிட்டு வாக்குச்சீட்டு வழங்கிய பின்னர் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதனை

அனுமதிக்கலாம்

கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைக்கவேண்டும்


43. ADS Voters என்றால்

Alternate ,Shifted ,Dead Voters

Absentee, Shifted, Dead Voters

Arranged , Shifted, Dead Voters


44. Visit Sheet -ன் பொறுப்பு அதிகாரி யார்?

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்

வாக்குப்பதிவு அலுவலர்1

வாக்குப்பதிவு அலுவலர் 2


45. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்கவேண்டிய முதல் பாக்கெட்டின் (1st Packet) (வெள்ளை நிறம்) சட்டப்பூர்வ உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?.

Form 17c

Sealed Envelope Containing the Register of voters(17A)

MockPollCertificate Report I, II, III

Printed VVPAT slips of MockPoll in black colored sealed envelope


46. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்கவேண்டிய இரண்டாம் பாக்கெட்டின் (2nd Packet) (வெள்ளை நிறம்) உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?

Sealed envelope containing the used tendered ballot papers and the list in Form -17B.

Unsealed envelope containing the Presiding Officer’s Diary

Unsealed envelope containing the list of blind and infirm electors in Form 14-A and the declaration

Unsealed envelope containing visit Sheet.


47. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்கவேண்டிய மூன்றாம் பாக்கெட்டின் (3rd Packet) (வெள்ளை நிறம்) சட்டப்பூர்வ உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?

Sealed envelope containing the marked copy of the electoral roll.

Sealed envelope containing voter’s slips

Sealed envelope containing the Register of Voters (17A)

Sealed envelope containing unused tendered ballot papers.

Sealed envelope containing the used tendered ballot papers and the list in Form -17B.

Sealed envelope containing the list of challenged votes in Form-14A.


48. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்கவேண்டிய நான்காம் பாக்கெட்டின் (4th Packet) (மஞ்சள் நிறம்) சட்டப்பூர்வ அல்லாத உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?

Unsealed envelope containing the copy or copies of electoral roll (other than the marked copy)

Unsealed envelope containing the appointment letters of polling agents in Form 10 and accounts of a Unsealed envelope containing the election duty certificate in Form-12B.

Unsealed envelope containing the declaration by the presiding Officer.

Unsealed envelope containing the receipt book and cash, if any, in respect of challenged votes.

Unsealed envelope containing visit Sheet.


49. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்க வேண்டிய ஐந்தாம் பாக்கெட்டின் (பழுப்பு நிறம்) (5th Packet) உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?

Hand Book for presiding Officer, Instructions of Electronic voting Machine & VVPAT

Sealed envelope containing ( a.Indelible ink set with stopper having been secured on each phial effe

Other unused forms. Metal seal of the presiding officer


50. வாக்குப்பதிவு முடிந்து ஒப்படைக்கவேண்டிய ஆறாம் பாக்கெட்டின் (6thPacket) (நீலம் நிறம்) உள்ளடக்கத்தில் பின்வருவனவற்றில் எது தவறானது?

Used list of contesting candidates Form 7A

Used Photocopy of signature of candidates and.

Other unused forms . Metal seal of the Presiding Officer.

Unsealed envelope containing the copy or copies of electoral roll (other than the marked copy)

Arrow cross - mark rubber stamp for marking tendered ballot papers.

Cup for setting the indelible ink.


51. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது BU - ல் குறைபாடு இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU

CU

VVPAT

ALL


52. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது CU Battery - ல் குறைபாடு இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU

CU

BU BATTERY

CU BATTERY


53. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது VVPAT - ல் குறைபாடு இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU

CU

VVPAT

ALL


54. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது Control Unit - ல் குறைபாடு இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU

CU

VVPAT

ALL


55. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது VVPAT Battery - ல் குறைபாடு இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU BATTERY

CU BATTERY

VVPAT BATTERY

ALL


56. வாக்குப்பதிவு நடைபெறும் முன்னர் இயந்திரங்களில் ஏதேனும் குறைபாடு (Defective ) இருந்தால் பின்வருபனவற்றில் எது மாற்றப்படும்?

BU

CU

VVPAT

Defective Unit Only

ALL


57. வாக்குப்பதிவு நடைபெறும்பொழுது பழுடைந்த VVPAT மாற்றப்படும் போது MockPoll நடத்தப்பட வேண்டுமா?

ஆம்

இல்லை


58. வாக்குப்பதிவு முடிந்தவுடன் எத்தனை Packets மண்டல அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்?

5

6

7

8


59. வாக்குச்சாவடி முகவர் எவரேனும் இவர் வாக்காளர் இல்லையென மறுப்பு தொிவித்தால் அதனை விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அனுமதிக்கப்படும் வாக்கு.

Challenged Vote

Test Vote

Proxy Vote


60. வாக்காளரின் அடையாளம் குறித்து எதிர்ப்பு தொிவிக்கும் முகவர் செலுத்த வேண்டிய தொகை.

ரூ 10 /-

ரூ 2/-

ரூ 5/-


61. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய இரண்டாம் ww பாக்கெட்டில (White Color) இருக்க வேண்டியவை எவை?

Statutory paper

Scrutiny Cover

Non statutory paper


62. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டிய மூன்றாம் பாக்கெட்டில் (White Color) இருக்கவேண்டியவை எவை?

Statutory paper

Scrutiny Cover

Non statutory paper


63. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டிய மூன்றாம் பாக்கெட்டில் (White Color) இருக்கவேண்டியவை எவை?வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய நான்காம் பாக்கெட்டில் இருக்க வேண்டியவை எவை?

Statutory paper

Scrutiny Cover

Non statutory paper


64. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய ஐந்தாம் பாக்கெட்டி-ன் நிறம் என்ன?

பழுப்பு

மஞ்சள்

நீலம்


65. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய ஆறாம் பாக்கெட்டி-ன் நிறம் என்ன?

பழுப்பு

மஞ்சள்

நீலம்


தேர்தல் வகுப்பு - கால அட்டவணை...

 

Election Class - Agenda...



தேர்தல் வகுப்பு - நிகழ்ச்சி நிரல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்...



ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.


2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இரவு பகல் பாராமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து சென்னை வில்லிவாக்கத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் வந்தால் தான் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி ஞாபகம் வரும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை.


சென்னையில் மின்கட்டண உயர்வு கடுமையாக உள்ளது. எந்த சாலையும் சரியாக இல்லை. ஆயிரம் ரூபாய் எத்தனை பெண்களுக்கு சமமாக கொடுத்தார்கள். படித்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை.


எனவே, தேர்தலில் திமுக, பாஜவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சனம்...



பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சித்துள்ளார்.


திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மடிக்கணினி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டினார். 


அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை திறந்து பார்த்தால் அதிமுக ஆட்சிக்காலம் வெளிச்சமான ஆட்சிக்காலம் என்பது தெரியும் என்று கூறினார். 


நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை நிறைவேற்றாமல் மக்களுக்கு நாமத்தை போட்டு விட்டு 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக பொய் கூறி வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை அளித்து அரசு ஊழியர்களை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...


 “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...

 

“இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!.


கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு உயர்த்துகிற அகவிலைப்படி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது திமுக அரசு. அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.


கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித் துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம்.


பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு  வந்திருக்கிறோம்.


ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது திராவிட மாடல் அரசு.


ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் திராவிட மாடல் அரசு.


ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும், அதிமுகவின் வரலாறும் எப்படிப்பட்டது? ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, அசிங்கப்படுத்தி, எள்ளி நகையாடி, அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?


தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!


அதிமுக என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அதிமுகவால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும், துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே!. அரசு ஊழியர்களுக்குத் திமுக ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அதிமுக. எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும்தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!


இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும், துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை.


பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து, கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து, நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.


மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும், ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும், தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.


அதனால்தான், இன்றைக்கு

திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.


அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கிவிட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான். “உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்” என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.


எனவே, திமுகவின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம், பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்… நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.


எனவே, “

திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி ஆதரவு கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...


2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...



>>> வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் ஆரம்பம். ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நன்று...



இந்திய அரசின் நிதி அமைச்சகம் 

வருவாய் துறை 

மத்திய நேரடி வரிகள் வாரியம் 

புது தில்லி, ஏப்ரல் 4, 2024 

பத்திரிக்கை செய்தி 

ஏப்ரல் 1, 2024 அன்று CBDT ஆல் இயக்கப்பட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் ITRகளை தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள் 

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி செலுத்துவோர் 2024-25 ஆம் ஆண்டிற்கான (நிதியாண்டு 2023-24 க்கு தொடர்புடையது) 1 ஏப்ரல், 2024 முதல் வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. பொதுவாக வரி செலுத்துவோர் பயன்படுத்தும் ஐடிஆர்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4 ஆகியவை வரி செலுத்துவோர் தங்கள் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 1, 2024 முதல் இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கும். நிறுவனங்கள் தங்கள் ஐடிஆர்களை ஐடிஆர்-6 மூலம் ஏப்ரல் 1 முதல் தாக்கல் செய்ய முடியும். 

இதற்கு முன்னோடியாக, CBDT ITR படிவங்களை முன்கூட்டியே அறிவித்தது, ITR கள் 1 மற்றும் 4 இல் தொடங்கி டிசம்பர் 22, 2023 அன்று அறிவிக்கப்பட்டது, ITR-6 ஜனவரி 24, 2024 அன்று அறிவிக்கப்பட்டது மற்றும் ITR-2 ஜனவரி 31, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. 

e-Return Intermediaries (ERI) வசதிக்காக, ITR-1,ITR-2, ITR-4 மற்றும் ITR-6க்கான JSON ஸ்கீமா மற்றும் வரித் தணிக்கை அறிக்கைகளின் திட்டமும் A.Y.க்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024-25. இ-ஃபைலிங் போர்ட்டலின் பதிவிறக்கங்கள் பிரிவின் கீழ் இதை அணுகலாம். 

இதனால், வரி செலுத்துவோர் ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-4 மற்றும் ஐடிஆர்-6 ஐ ஏ.ஒய். 2024-2025 இ-ஃபைலிங் போர்ட்டலில் 01.04.2024 முதல். உண்மையில், ஏ.ஒய்க்கு சுமார் 23,000 ஐ.டி.ஆர். 2024-25 ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடிஆர் 3, 5 மற்றும் 7ஐ தாக்கல் செய்வதற்கான வசதி விரைவில் கிடைக்கும். 

புதிய நிதியாண்டின் முதல் நாளில் வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். இது இணக்கம் மற்றும் தடையற்ற வரி செலுத்துவோர் சேவைகளை எளிதாக்குவதற்கான மற்றொரு மாபெரும் படியாகும். 

(சுரபி அலுவாலியா)

Pr. வருமான வரி ஆணையர் 

(ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை) & 

அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், CBDT



Government of India Ministry of Finance Department of Revenue

Central Board of Direct Taxes

New Delhi, 4th April, 2024

Press Release

Functionalities to file commonly used ITRs enabled by CBDT on 1t April, 2024


Central Board of Direct Taxes (CBDT) has facilitated taxpayers to file their Income Tax Returns (ITRs) for the Assessment Year 2024-25 (relevant to Financial Year 2023-24) from 1st April, 2024 onwards. The ITRs i.e. ITR-1, ITR-2 and ITR-4,commonly used by taxpayers are available on the e-filing portal from 1st April, 2024 onwards for taxpayers to file their Returns. Companies will also be able to file their ITRs through ITR-6 from April 1 onwards.


As a precursor to this, CBDT had notified the ITR forms early, beginning with ITRs 1 and 4 which were notified on December 22nd, 2023, ITR-6 was notified on 24th January, 2024 and ITR-2 was notified on January 31st, 2024.


To facilitate the e-Return Intermediaries (ERI), the JSON Schema for ITR-1,ITR-2, ITR-4 and ITR-6 and Schema of Tax Audit Reports have also been made available for A.Y. 2024-25. The same can be accessed under downloads section of the e-filing portal.


Thus, taxpayers have been enabled to file ITR-1, ITR-2, ITR-4 and ITR-6 for A.Y. 2024-2025 on the e-filing portal from 01.04.2024. In fact, about 23,000 ITRs for A.Y. 2024-25 have already been filed till date. Facility to file ITRs 3, 5 and 7 will be made available shortly.


This is for the first time in recent times, that the Income Tax department has enabled taxpayers to file their Returns on the first day of the new financial year. This is another giant step towards ease of compliance and seamless taxpayer services.


(Surabhi Ahluwalia)

Pr. Commissioner of Income Tax

(Media & Technical Policy) &

Official Spokesperson, CBDT



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...