கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...

 


விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...



சட்டவிரோதமாக பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு: ம.பி.யில் 11 வழக்குகள் பதிவு; 20 போ் கைது


ஜபல்பூா்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


இதுகுறித்து ஜபல்பூா் மாவட்ட ஆட்சியா் தீபக் சக்ஸேனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆதித்ய பிரதாப் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் சில பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தின. சில பள்ளிகள் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவை அணுகாமல் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை அதிகரித்தன.


மொத்தம் 11 பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ரூ.81.3 கோடி கட்டணம் வசூலித்தன. இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பாடநூல்களின் விலையும் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.



போபால்: மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.




இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார். கட்டண விதிகளை மீறி வசூலித்த தொகையை பெற்றோரிடம் 30நாட்களுக்குள் திருப்பி செலுத்தும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.


இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் என 51 நபர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில் இந்த 11 தனியார் பள்ளிகள் மீது 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இதுகுறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவேமுதல்முறையாகும். கல்விக்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி முறைகேடாக அதனை வசூலித்து இந்த பள்ளிகள் ரூ.100 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளன.


கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இதுதொடர்பான விசாரணை தொடங்கியது. முதல் கட்டமாக சோதனைநடத்தப்பட்ட 11 தனியார் பள்ளிகளும் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க நினைத்தால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். அதுவே 15 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முயன்றால் மாநில அளவிலான கமிட்டியின் ஒப்புதல் அவசியம். ஆனால் இதுபோன்ற எத்தகைய விதிகளையும் சம்மந்தப்பட்ட பள்ளிகள் பின்பற்றவில்லை. ரூ.81.3 கோடி முறைகேடாக இந்த பள்ளிகள் வசூலித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


பாடநூல் முறைகேடு: இதுபோக போலி மற்றும் நகல் எடுக்கப்பட்ட ஐஎஸ்பிஎன் எண் கொண்ட நூல்கள் பள்ளிபாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெற்றோருக்கு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக சந்தையில் புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட நூல்கள் கிடைக்காத சூழல் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய கடைகளில் மட்டும் குறிப்பிட்ட நூல்கள் அதிகபட்சசில்லறை விலையைக் காட்டிலும் 2மடங்கு விலையில் விற்கப்பட் டுள்ளன. இத்தகைய புத்தக ஊழல் திட்டத்தின் மூலம் இந்த 11 பள்ளிகள் பெற்றோரிடமிருந்து ரூ.4 கோடி கூடுதலாக வசூலித்துள்ளன. இதுதவிர பள்ளி நிர்வாக கணக்கு வழக்கிலும் பொய் கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



நன்றி : தினமணி & இந்து தமிழ் திசை 

பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் இருந்து 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - மயிலாடுதுறை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


 பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் இருந்து 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - மயிலாடுதுறை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025 பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான தென்காசி முதன்மை கல்வி அலுவலரின் அவசர சுற்றறிக்கை...

2024-2025 பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான தென்காசி முதன்மை கல்வி அலுவலரின் அவசர சுற்றறிக்கை...




கலந்தாய்வு அவசர சுற்றறிக்கை


அன்பார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ,


2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு EMIS இணைய தளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25.05.2024 அன்றுடன் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் , பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இதுவரை சமர்ப்பிக்காத ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 27.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


அதன்பின்னர் விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் , அவற்றுக்கு EMIS இணைய தளத்தில் ஒப்புதல் அளித்திட இயலாது என்கிற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் கலந்தாய்வுக்கான Seniority Panel வெளியாகும்போது , அதில் தங்களுடைய விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னுரிமை விவரங்கள் இடம்பெறாத பட்சத்தில் , அதன் விவரத்தினை EMIS இணைய தளத்தில் தத்தமது User & Password- ஐ பயன்படுத்தி Challenge Option மூலம் உள்ளீடு செய்திடவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்குரிய நலத்திட்டங்கள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 023203/ வி2/ இ1/ 2024, நாள்: 23-05-2024...


 மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்குரிய நலத்திட்டங்கள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 023203/ வி2/ இ1/ 2024, நாள்: 23-05-2024...





உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் - இணையதளம் முழுக்க தமிழில் புதுப்பிப்பு...



உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் - இணையதளம் முழுக்க தமிழில் புதுப்பிப்பு...


🔹🔸மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தமிழில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.


🔸🔹தமிழகத்தில், 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் என மொத்தம் 12,949 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.


🔹🔸இவற்றில், 1.19 லட்சம் பதவிகள் உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது.


🔸🔹இதைத் தொடர்ந்து, 2021 செப்டம்பரில் எஞ்சிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 


🔹🔸ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்காக, ஆணையத்தின் இணையதளம் முழுமையாக தமிழில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


🔸🔹இதில், முன்பு பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன. இதனால், தேர்தல் குறித்த பல விபரங்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.


🔹🔸மாநில தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோதிநிர்மலா சாமி உத்தரவின்படி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், முழுமையாக தமிழுக்கு இணையதளம் மாற்றப்பட்டு உள்ளது.


🔸🔹இணையதள முகப்பு பக்கத்தில், *'உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, அமைதியாக நடத்துவோம்; மக்களாட்சிக்கு பெருமை சேர்ப்போம்; வாருங்கள் வாக்களிப்போம்'* என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



>>> மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் - இங்கே சொடுக்கவும்...



தீர்மானிப்பது நாமாக இருக்கவேண்டும் - இன்று ஒரு சிறு கதை...



தீர்மானிப்பது நாமாக இருக்கவேண்டும் - இன்று ஒரு சிறு கதை...


We must be decide


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.


ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான்.


”பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.


"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!


வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.


அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை...

 


அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை...


தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் பெற்று வருகிறது.



தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்கால சூழலில், கட்டிட வசதி ஏற்படுத்த போதிய நிதியாதாரம் இல்லாத நிலையில், அந்தந்த பகுதி முக்கிய நபர்களின் பங்களிப்போடு பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டன. அந்தப் பள்ளிகள் பிற்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாறின. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனமும் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளும் அனுமதி அரசால் வழங்கப்பட்டது. அந்த அனுமதி இதுநாள் வரையில் தொடர்கிறது.



அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிக்கு நிகராகவே இருந்து வந்தது. காலப் போக்கில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தததால் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், அவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு அளவு குறையவில்லை.



இதனால் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மாறுபட்டு, 90 மாணவர்கள் பயிலும் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலை உள்ளது. இதை சரி செய்யும் நோக்கில், எந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுகிறாரோ அதுகுறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், இது நாள் வரை ஓய்வுபெறும் தகவல் குறித்து தெரிவிக்காமல், தொடர்ந்து ஆசிரியர் நியமனத்தை செய்து வருவதாக தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் அவர்கள் கூறும் போது, “ஒரு பள்ளியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.



உதாரணத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 72 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,223 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த 72 பள்ளிகளில் 279 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதன்படி சராசரியாக 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அரசு பள்ளி விகிதாச்சாரத்தை விட இது குறைவு இந்தச் சூழலில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.


 

இதற்காக ஒவ்வொரு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள், உபரி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து கேட்டு தொடக்கக் கல்வி அலுவலர்களால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேற்று முன்தினம் முதல் அழைக்கப்பட்டு, அவர்களிடம் ஆசிரியர்கள் பணியிடம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை கருதுகிறது.


நன்றி : இந்து தமிழ் திசை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...