கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

பொருள்:செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுக்குள் ஒன்றாக போற்றப்படும் செல்வமாகும்; அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.


பழமொழி :
Lamb at home and a lion at the chase.

பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

"மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை" ---ஸ்டீஃபன் ஹாக்கிங்


பொது அறிவு :

1.தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி

2. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை


English words & meanings :

genial- பழகுவதற்கு இனிய,

keenness-ஆர்வம்



வேளாண்மையும் வாழ்வும் :

இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம் செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.


நீதிக்கதை

பொறாமை வேண்டாம் 

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். .

பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும்.

அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு  உயர்ந்த ரக உணவுகளை கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.

பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது.

நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது.

கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.

கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.

அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது.

தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.

நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.



இன்றைய செய்திகள்

05.07.2024

∆ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

∆புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு.

∆தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

∆மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

∆எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

∆3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்.

∆பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 27 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

∆ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி கால்இறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

∆ The flow of water in Hogenakkal Cauvery river has increased to 3,000 cubic feet per second.

∆ Pay hike for Contract Drivers, Conductors working in Puducherry Road Transport Corporation.

∆ In Tamil Nadu, Puducherry has received 115 percent more rain than normal in June.

∆ With the increase in Zika virus cases in Maharashtra, the Union Health Ministry has advised the states to remain vigilant.

∆ Indian External Affairs Minister Jaishankar has said that China has agreed to redouble its efforts to resolve the border issue.

∆ 3,500 male and female athletes will participate in the state junior athletics tournament - starting today in Chennai.

∆ A team of  27 members of  Indian athletes, including five from Tamil Nadu, has been announced for the Olympics to be held in Paris.

∆ European Football Championship: Turkey advances to quarter-finals

Prepared by

Covai women ICT_போதிமரம்


Teachers Transfer Counseling 2024 - இன்று (05.07.2024 ) யாருக்கு?

 


Teachers Transfer Counseling 2024 - இன்று (05.07.2024 ) யாருக்கு?


DEE - தொடக்கக் கல்வித்துறை


*ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு:


நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் - 5.7.24- வெள்ளி #


தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம்  - 5.7.24 - வெள்ளி



EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பள்ளி / அலுவலக மாற்றம் கோரி விண்ணப்பிக்கும் முறை...

 

 

EMIS ஆப் மற்றும் இணையதளத்தில் புதிய பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆனால் பள்ளி மாற்றியமைக்கப்படாத ஆசிரியர்களுக்காக இந்த தொகுதி உள்ளது.


School / Office Change Request - Teachers (EMIS)

This Module is to enable teachers who got transferred But School Not Retagged to new school in EMIS App and Website.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: கல்லாமை

குறள் எண்:410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள் :அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.


பழமொழி :
Fair words butter no parsnips.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

" தோல்விகளுக்கு இடையில் தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன ; அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சாதே"----ஆல்பர்ட் ஐன்ஸ்டின்


பொது அறிவு :

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்


2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ்



English words & meanings :

amiable-நட்பு,

affable- நட்புணர்வுள்ள



வேளாண்மையும் வாழ்வும் :

ஆனால் இயற்கை வேளாண்மை மண்ணையும் மனிதர்களையும் பாதுகாக்கும் சிறந்த வேளாண்மை முறையாகும்.



ஜூலை 04

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்



நீதிக்கதை

ரகசியம் என்ன?

ஒரு நாட்டின் சிறந்த கோதுமையை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயி ஒருவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சென்றார்.

விவசாயிடம் பத்திரிக்கையாளர் "எப்படி உங்களால் மட்டும் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய முடிகிறது"? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, "என்னுடைய பக்கத்து வயலில் உள்ளவர்களுக்கும் என்னிடம் உள்ள தரமான,சிறந்த  கோதுமை விதைகளை கொடுத்து  பயிரிடச் சொன்னேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்று கூறினார்.

அதற்கு பேட்டி எடுப்பவர் ".அது எப்படி?,அவர்களுக்கும் தரமான விதைகளை  கொடுத்தால் அவர்களும் உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் அல்லவா?,  என்று கேட்டார்.

அதற்குஅவர்,"காற்று வீசும் போது ஒரு செடியில் உள்ள மகரந்தம் ஒரு வயலில் இருந்து பக்கத்து வயலில் உள்ள செடி வரைக்கும்  பரவும். அவர்கள் தரம் குறைந்த கோதுமைகளை பயிரிட்டால் அதிலிருந்து வரக்கூடிய மகரந்தம் என்னுடைய பயிரையும் பாதிக்கும். எனவே அவர்களுக்கும்  தரமான விதைகளை கொடுத்து பயிரிட செய்வேன்", என்றார்.

"அதனால்,நான் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய வேண்டுமானால் என்னை சுற்றி இருப்பவர்களும் தரமான கோதுமையே உற்பத்தி செய்ய வேண்டும்", என்றார்.

அதுபோல் நாமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ,நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இன்றைய செய்திகள்

04.07.2024

# குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு.

# தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

# சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

# மேகாலயாவில் தொடங்கியது இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி.

# அசாம் வெள்ளம்: 28 மாவட்டங்களில் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு.

# அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு.

# டி20 தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

# Cooking gas supply to homes through pipeline: 30 thousand registered across Tamil Nadu.

# Chief Minister Stalin released 100 legal books translated from English into Tamil by the Tamil Nadu State Legal Official Language Commission.

# The Tamil Nadu government has informed the High Court that CBSE and ICS curriculum schools do not fall under the compulsory education law reservation limits and cannot claim 25 per cent quota.

# India-Mongolia joint military exercise begins in Meghalaya

# Assam floods: 11.34 lakh people affected in 28 districts;  38 people lost their lives.

# US presidential election.. Kamala Harris has a better chance of winning than Biden: CNN  Survey.

# T20 rankings: Indian player Hardik Pandya tops the all-rounders list.

# European Football Championship: Netherlands advance to quarter-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


Teachers Transfer Counseling 2024 - இன்று ( 04.07.2024 ) யாருக்கு?


Teachers Transfer Counseling 2024 - இன்று ( 04.07.2024 ) யாருக்கு?


DEE - தொடக்கக் கல்வித்துறை


04.07.2024 வியாழன்கிழமை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  பணிமாறுதல் கலந்தாய்வு. ( வருவாய் மாவட்டத்திற்குள்) 



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு( வருவாய் மாவட்டத்திற்குள்) 


பள்ளிக்கல்வித்துறை (DSE)


 முன்னுரிமை  பட்டியலில் திருத்தம் (முறையீடுகள் ஏதும் இருப்பின் )



கரூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்தி வெளியீடு...

 கரூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்தி வெளியீடு...





அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...

 

அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...