கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை...


 நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை - நாளிதழ் செய்தி...




கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

 தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுவே வேலை - கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்...


கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...


கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்


அரசு, தனியார் துறைகளில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு 100% கன்னடர்களை நியமிக்கும் வகையில் மசோதா நாளை தாக்கல்...






கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு... முக்கிய அம்சங்கள் என்ன?


இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


கர்நாடகாவில் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில், பிற மாநிலத்தவர் அதிக வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக அம்மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டியலிட உள்ளது.


இடஒதுக்கீடு எவ்வளவு?



கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை பதவிகளில் 75 சதவீதம், அதற்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடஒதுக்கீடு ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது வேலைக்கு பயன்படுத்தும் குரூப் ‘சி’, குரூப் ‘டி’ தொழிலாளர்கள் கன்னடர்களாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



யார் கன்னடர்கள்?

இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீறினால் என்னவாகும்?

இந்த சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு வரும்வரை அந்த தனியார் நிறுவனம் தினமும் ரூ.100 அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக சி, டி கிரேடு பணிகளில் அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட தேசத்தில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, தாயகத்தில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை.




முதல்வர் சித்தராமையாவின் ட்வீட் (அது இப்போது நீக்கப்பட்டதாகத் தெரிகிறது) குறித்து கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார், "நிர்வாகத்தில் (நிலை) 50% பேருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலாண்மை அல்லாத நிலையில், 70% பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது... அத்தகைய திறன்கள் இல்லை என்றால் , ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து அவர்களுக்கு இங்கு வேலை கொடுக்கலாம் ஆனால், உள்ளூரில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது"



“தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.


இது குறித்து வரும் நாட்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்”


- கர்நாடக முதல்வர் சித்தராமையா X தளத்தில் பதிவு



பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 15 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024 வெளியீடு...

 

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 15 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024...




உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ்  வருவாய் துறை செயலாளராக நியமனம்.


புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம்.


சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம்.


சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம்.


தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பாலச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம்.


10 மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No.3472, Dated: 16-07-2024 வெளியீடு...

 

 10 மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No.3472, Dated: 16-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.3472, Dated: 16-07-2024...


அரியலுார் கலெக்டராக ரத்தினசாமி, கடலுார் கலெக்டராக சிபி ஆதித்ய செந்தில்குமார், கன்னியாகுமரி கலெக்டராக அழகு மீனா நியமனம்.



நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறை - பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள்...

 

நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறை - பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி...


பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தினமும் ஒரு பாடத்துக்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பதற்றமின்றி கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சீனியாரிட்டி அடிப்படையில் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை சில பாடங்களுக்கு மாநில அளவில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொந்த ஊர்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில் தொலை தூர மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் விடிய விடிய கலந்தாய்வு நடைபெற்றதால் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பை தவிர்ப்பதற்காக நடப்பு ஆண்டில் ஒரு பாடத்திற்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் என 5 பாடத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த பாடத்தின் ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு கலந்தாய்வில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள் கூட்ட நெரிசல் இன்றி நிதானமாக பங்கேற்கின்றனர். நெல்லையில் நேற்று சாராள் தக்கர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதேபோல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்து 6 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.


நன்றி : தினகரன் 

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (நிலை) எண்: 173, நாள்: 15-07-2024 வெளியீடு...

 

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (நிலை) எண்: 173, நாள்: 15-07-2024 வெளியீடு...


School Education Director's Transfer - G.O.Ms.No.173, Dated: 15-07-2024...


>>> அரசாணை (நிலை) எண்: 173, நாள்: 15-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமனம்...


 அரசு தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ்  பதவி உயர்வு பெற்று தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம்...


மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் லதா அரசு தேர்வு துறை இயக்குனராக நியமனம்...


ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம்...

கனமழை காரணமாக 16-07-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 

 

கனமழை காரணமாக 16-07-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-06-2024 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...