01.01.2024 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்களின் சுழற்சி பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 26054/W1/S1/2024-1, நாள்: 19-07-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
01.01.2024 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்களின் சுழற்சி பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 26054/W1/S1/2024-1, நாள்: 19-07-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள்...
அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் Vaasippu Iyakkam செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை 2024 - 2025 ஆம் ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து
*பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டிய புத்தக தொகுப்பு விவரம்*
*👉👉 நுழை நீல நிறம்*
வகுப்பு 1 முதல் 10 வரை
*👉👉 நட மஞ்சள் நிறம்*
வகுப்பு 3 முதல் 10 வரை
*👉👉 ஓடு சிவப்பு நிறம்*
வகுப்பு 5 முதல் 12 வரை
*👉👉 பற பச்சை நிறம்*
வகுப்பு 6 முதல் 12 வரை
*👉👉 பாடல்கள்*
வகுப்பு 1 முதல் 10 வரை
>>> வாசிப்பு இயக்கக் கையேடு 2024 - 2025...
பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு 2024 - 2025 Module...
Vasippu Iyakkam Handbook...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால் :பொருட்பால்
அதிகாரம்: அறிவு உடைமை
குறள் எண்:422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கி்க் காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவாகும்.
பழமொழி :
A contended mind is a continual feet.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
இரண்டொழுக்க பண்புகள் :
1.என்னை விட வயதில் மூத்தோரை மரியாதையுடன் நடத்துவேன். என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வேன்.
2.என்னை விட இளையோரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.
பொன்மொழி :
தொட்டுத் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்--- புத்தகம்.
பொது அறிவு :
1.இராஜ திராவகத்தின் கரைப்பானாகப் பயன்படுத்தபடும் உலோகம்?
விடை: தங்கம்
2. “ CALCULATOR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
விடை: எண்சுவடி
English words & meanings :
Fabricate- உருவாக்கு
Materialize-செயல்படுத்து
வேளாண்மையும் வாழ்வும் :
கருப்பு கவுனி அரிசி
பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை “அரச உணவு” என்றும் “பேரரசர் உணவு” என்றும் கூறுவதுண்டு.
நீதிக்கதை
ஒற்றுமையே வலிமை
பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் தங்கி இருந்த வீட்டின் சமையலறைக்குள் நுழைந்தன. அங்கே பெரிய பானை நிறைய பால் இருந்தது. அது மிகவும் உயரமான பானை. அதனால் எலிகளால் பாலை குடிக்க முடியாமல் திண்டாடின.
இதை அடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன.ஓர் எலியின் மீது மற்றொரு எலி ஏறி பாலை குடிப்பது என முடிவு செய்துவிட்டு பாலை குடிக்க சென்றன.
அதன்படி ஓர் எலி கீழே நின்று கொண்டது. அதன் மேல் ஏறி இன்னொரு எலி பாலை குடித்துக்கொண்டிருந்தது. அப்போது கீழே உள்ள எலி திடீரென "சீக்கிரம் இறங்கு, நான் பாலை குடிக்க வேண்டும்" என்று சத்தம் போட்டது.
கீழே உள்ளே எலி சத்தம் போட்டதை கேட்டு மேலே உள்ள எலி பயந்து பால் பானைக்குள் விழுந்து விட்டது. இதைக் கண்ட கீழே இருந்த எலி 'இனி மீதமுள்ள பால் முழுவதும் நமக்குத்தான்' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே பாத்திரத்தை சுற்றி சுற்றி வந்தது ஆனால் மேல் ஏறி குடிக்க இயலவில்லை.
நீதி: ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் அடையலாம். ஒற்றுமை நீங்கினால் நமக்கு தீமையை ஏற்படும்.
இன்றைய செய்திகள்
19.07.2024
* புதிய மாநகராட்சிகள் உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
* ஒகேனக்கல்லில் நீர்வரத்து நாளை அதிகாலை 50,000 கன அடியாக உயர வாய்ப்பு. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பரிக்கும் காவிரி.
* உத்தரப் பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.
* ஈ, கொசு மூலமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! சாதாரண காய்ச்சல்னு நினைக்க வேண்டாம்! சண்டிபுரா வைரஸ் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை பதிவு.
* பூமிக்கு மிக நெருக்கமாக 28,000 கி.மீ வேகத்தில் 290 அடி அளவுள்ள விண்கல் ஒன்று செல்ல உள்ளதாக நாசா கூறியுள்ளது. இது பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
* பூபதி குமார் அரைசதம் விளாச திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றி பெற்றது.தமிழகத்தில் டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது.
* இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Today's Headlines
* Tamil Nadu Governor RN Ravi has approved 4 amendment bills including reducing revenue and population limits for creation of new Municipal Corporations, making sewage connection mandatory in Chennai, and extending the Chennai Police Act to other cities.
* The water flow in Okanakkal is likely to rise to 50,000 cubic feet by tomorrow morning. Cauvery flowing with roar as the water released from Karnataka dams.
* Passenger train derailed in Konda area of Uttar Pradesh.
* A deadly disease spread by mosquitoes! Don't think it's just a flu! Experts warn about Chandipura virus.
* A 290-foot-sized meteorite is about to pass very close to Earth at 28,000 km speed NASA says. NASA has also warned that it will be catastrophic if it hits the Earth.
* Bhupathi Kumar's half-century Dindigul team bagged the 2nd winning by 8 wickets. The eighth season of TNPL is going on in Tamil Nadu.
* India will tour Sri Lanka in a series consisting of three T20Is and three ODIs. The Indian team for this has been announced.
Prepared by
Covai women ICT_போதிமரம்
வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Holiday / Restricted Leave பற்றி தெரிந்துகொள்வோம்...
*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH & RL)...
அ ) தமிழ்நாடு அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )
ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் .
இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 )
ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக புலனக் குழுக்களில் பகிரப்படும் செய்தி...
BT / BRTE provisional selection list for subject Botany and zoology has been published in TRB's official website
>>> Botany - Provisional Selection List...
>>> Zoology - Provisional Selection List...
>>> Botany - Ineligible List...
>>> Zoology - Ineligible List...
தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியர் BT / ஆசிரியர் பயிற்றுனர்கள் BRTE தற்காலிக தேர்வு பட்டியல் TRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது...
https://trb.tn.gov.in/index.php?language=LG-1&status=Active
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...