கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுழற்சி முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுழற்சி முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021...

 



03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021...


>>> முதல்வர் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1336 , நாள்: 13-12-2021...




தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு:


சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.


கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 


ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 


அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.


அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.


தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.


அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும். 


அனைத்து கடைகளும் , குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு . கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. 


கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது , ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் .

செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்...

 *செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


*பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


*முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.






பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்...



 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்ற ஜாக்டோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் வருகை

கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பீடுகள் உள்ளிட்ட சில நிர்வாகப் பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.


இதை தொடர்ந்து அடுத்த 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி, 100% ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


 கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.


சுற்றறிக்கை

தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.



சி.இ.ஓ.,க்கள் மீது புகார்

 'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதை தொடர்ந்து இந்த உத்தரவை ஆணையர் அவர்களின் உத்தரவின் கீழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜாக்டோ நிர்வாக அதிகாரிகள், அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு செல்லலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.



இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.



இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : 

கொரோனா பரவலால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது . எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன் விவரங்களை வாங்கி வைத்து , பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர்கள் கூறினர் .




9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக் கல்வித்துறை முடிவு...

 


9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாகவும், கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவற்றைப் பள்ளியில் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 25 பேர் மட்டுமே உட்கார வைக்கப்படுகின்றனர். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும். அனைவரும் வீட்டில் இருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு எடுத்துவர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரைத் தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் இட நெருக்கடியைத் தவிர்க்க காலை, பிற்பகல் என ஷிஃப்ட் முறையில் வகுப்புகளைப் பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சுழற்சி முறையில் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...