கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Ennum Ezhuthum Workbooks & Handbooks Updation Procedure in EMIS Website - School Login...

  

 

எண்ணும் எழுத்தும்  பணிப்புத்தகங்கள் & ஆசிரியர் கையேடுகள் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வழிமுறை...


Ennum Ezhuthum Workbooks & Handbooks Updation Procedure in EMIS Website - School Login...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Magizh Mutram - Proceedings of Director of School Education...

 

மகிழ் முற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Magizh Mutram - Proceedings of Director of School Education...


ஆளுமைத் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் - அனைத்துப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் - மாணவர் குழுக்கள் கட்டமைப்பு - பதவி ஏற்பு விழா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 32841/ எம்1/ இ1/ 2024, நாள்: 01-10-2024...


Personality development activities - Formation of "Magizh Mutram" Happy Yard - student groups in all schools - Induction ceremony - Proceedings of Director of School Education...





Hon'ble Chief Minister of Tamil Nadu M.K.Stalin met and congratulated the teachers from Tamil Nadu who received the "National Best Teacher Award" for the year 2024...

  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான "தேசிய நல்லாசிரியர் விருது" பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்களைச் சந்தித்து வாழ்த்தினார்.

தேசிய ஆசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியப் பெருமக்கள் திரு.கோபிநாத் அவர்கள் மற்றும் திரு.முரளிதரன் ரம்யா சேதுராமன் அவர்கள் ஆகியோரின் கற்பித்தல் பணி உலகம் வியக்கும் ஆளுமைகளை உருவாக்கும்...


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...




Deputy Tahsildar arrested for taking bribe...



 லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது...


திருச்சியில் பட்டா பெயர் திருத்தத்திற்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி துணை வட்டாட்சியர் ரவிக்குமார் கைது.


பிழையாக இருந்த பெயரை சரிசெய்ய மோகன் என்பவரிடம் ₹50,000 லஞ்சம் கேட்டு, பின் பேரம் பேசி ₹20,000 பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டாவில் பெயர் திருத்தம் மேற்கொள்ள லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது...


லால்குடியில் பட்டாவில் பெயர்திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம்லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.


திருச்சி மாவட்டம் லால்குடிவட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன்.இவர் 2002-ல் ரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து, லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை, தனது தந்தை கணேசன் பெயரில் வாங்கியுள்ளார்.


இந்நிலையில், அந்த பட்டாவில் நிலத்தை விற்றவர் பெயர் கிருஷ்ணசாமி என்பதற்குப் பதிலாக, கிருஷ்ணமூர்த்தி என தவறுதலாக இடம் பெற்றிருந்தது. இந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டி, கடந்த மார்ச் 5-ம் தேதி லால்குடி கோட்டாட்சியருக்கு மோகன் விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து, தொடர் நடவடிக்கைக்காக லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார்.




பட்டாவில் பெயர் திருத்தம் மேற்கொள்ள லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது


திருச்சி, லால்குடியில் பட்டாவில் பெயர்திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம்லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.



திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் 2002-ல் ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து, லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை, தனது தந்தை கணேசன் பெயரில் வாங்கியுள்ளார்.


இந்நிலையில், அந்த பட்டாவில் நிலத்தை விற்றவர் பெயர் கிருஷ்ணசாமி என்பதற்குப் பதிலாக, கிருஷ்ணமூர்த்தி என தவறுதலாக இடம் பெற்றிருந்தது. இந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டி, கடந்த மார்ச் 5-ம் தேதி லால்குடி கோட்டாட்சியருக்கு மோகன் விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து, தொடர் நடவடிக்கைக்காக லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார்.



விண்ணப்பம் செய்து 4 மாதங்களாகியும் பெயர் திருத்தம் செய்யப்படாததால், லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மோகன், துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து, தனது மனு தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு ரவிக்குமார், மனுவைப் பரிந்துரை செய்து அனுப்ப ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர இயலாது என தெரிவித்த மோகனிடம், குறைந்தது ரூ.20 ஆயிரம் தந்தால்தான் மனுவை பரிந்துரை செய்வேன் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அறிவுரைப்படி லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்றமோகன், ரூ.20 ஆயிரத்தை ரவிக்குமாரிடம் அளித்துள்ளார்.


அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Information about Festival Advance for pensioners...

 

 


ஓய்வூதியர்களுக்கான பண்டிகை முன்பணம் குறித்த தகவல்கள்...


Information about Festival Advance for pensioners...



India's first vertical lifting Span at Pamban successfully raised - Southern Railway...

 



பாம்பனில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் கட்டமைப்பு - தெற்கு இரயில்வே பகிர்ந்துள்ள காணொளி...


Historic milestone - A Glimpse Video of India's first vertical lifting Span at Pamban successfully raised - Southern Railway...


வரலாற்று மைல்கல் - பாம்பனில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் கட்டமைப்பு - தெற்கு இரயில்வே பகிர்ந்துள்ள காணொளி...



ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ₹550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலத்தில், இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.


கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேல் சுமார் 700 டன் எடையில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தில் லிப்டிங் சோதனை நேற்று மாலை நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 15 மீட்டர் உயரம் வரை தூக்கி சோதனை செய்தனர்.


இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த லிப்டிங் பணி முதல்கட்டமாக வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து சில தினங்களில் ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை செய்யப்படும்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


11.71 lakh railway employees will be given 78 days salary as bonus - Central Government announced...



 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அரசு ஒப்புதல்...


11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு...


11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகை ரெயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தகுதியுடைய ஒவ்வொரு பணியாளரும் 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 பெறுவார்கள் என்றார்.


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தசரா மற்றும் தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படும். அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பிறகு, சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

  உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold உலக கேரம் ச...