கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு...



தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு...


அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றம் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - முதலமைச்சர் அறிவிப்பு...


20% Diwali Bonus Announcement for Tamil Nadu Govt Employees... 


20 percent Diwali bonus for C and D category workers working in Govt Public Sector Undertakings - Chief Minister Announces...



>>> செய்தி வெளியீடு எண் 1639, நாள் : 10-10-2024...


Question Papers & Answer Keys of LOs & CBT Exam October 2024 for Class 6, 7, 8 & 9

 

  


 07.10.2024, 08.10.2024, 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான அக்டோபர் மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் (Question Papers & Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based  Assessment Exam October 2024 for Class 6, 7, 8 & 9 held on 07.10.2024, 08.10.2024, 09.10.2024 & 10.10.2024)...



>>> Click Here to Download 6th, 7th, 8th & 9th Std - Question Papers - October 2024 LOs & Competency Based  Assessment Exam...



>>> Click Here to Download 6th, 7th, 8th & 9th Std - Answer Key - October 2024 LOs & Competency Based  Assessment Exam...



TNPSC - Departmental Exams, May 2024 - 10-10-2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள துறைத்தேர்வுகளின் பட்டியல்...

 

 


 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2024

LIST OF TESTS FOR WHICH RESULTS HAVE BEEN PUBLISHED IN THE WEBSITE

(updated as on 10.10.2024)


TNPSC - Departmental Exams, May 2024 - 10-10-2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள துறைத் தேர்வுகளின் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - 2 நாட்கள் தவிர அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...

 


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் (21.12.2024 & 22.03.2025 தவிர) விடுமுறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Release of Revised Calendar for Academic Year 2024-2025 - All Saturdays (Except 21.12.2024 & 22.03.2025) Holiday - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:799

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.

பொருள்:கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.


பழமொழி :
A bad day never hath a good night.

முதல் கோணல் முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் : 

*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                              

*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :

பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது.


பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?

விடை: ரஷ்யா
2. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து


English words & meanings :

Daft – silly; foolish. குழந்தைத்தனமான,முட்டாள்தனமான.

Dairy - a place on a farm where milk is kept and butter, cheese, etc. are made..பால் பண்ணை


வேளாண்மையும் வாழ்வும் :

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். அந்த அளவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது.


அக்டோபர் 10

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

பேசும் குகை

வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.

உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது.

மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.

“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ..குகையே”

என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,

” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.

நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.

“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவாக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.

அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.

நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.


இன்றைய செய்திகள்

10.10.2024

* குரூப்-4 தேர்வில் புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு.

* சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் சட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டம் தொடக்கம்.

* ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

* வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு ‘புரத ஆராய்ச்சி’க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

* டி20 கிரிக்கெட் தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஏற்றம் கண்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 3வது இடத்திற்கு முன்னேற்றம்.

* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அல்காரஸ், சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* TNPSC notified that 2,208 new vacancies have been added in Group-IV examination.  Thus, the total number of posts has increased to 8,932.  Due to this, the cut off score is likely to decrease.

* In *Seermigu Sirappu* law college a new program is started to provide online legal education to the students  has been started.

* ISRO chief Somnath said that the 3rd launch pad will be set up at Sriharikota.

* The Nobel Prize in Chemistry has been announced to 3 scientists, David Baker of America, Demis Hassabis of England and John Jumper for their work on 'Protein Research'.

* T20 Cricket Rankings: India's Hardik Pandya climbs to 3rd spot in all-rounders list

* Shanghai Masters Tennis;  Algaras, Sinner advance to quarterfinals.


Prepared by

Covai women ICT_போதிமரம்


புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்...



புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்...


New Education Policy - Important Aspects 


மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளைத் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே கட்டுப்பாட்டாளரால் நிர்வகிக்கப்படும்.

எம்ஃபில் படிப்புகள் இப்போது நிறுத்தப்படும்.

வாரியத் தேர்வுகள் இப்போது அதிக பயன்பாடு மற்றும் அறிவு சார்ந்ததாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இரண்டும் ஒரே விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

பிராந்திய மொழி/தாய்மொழியை ஊக்குவிக்கவும், அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், 5 ஆம் வகுப்பு வரையிலான பயிற்றுமொழி உள்ளூர்/வீட்டு மொழிகளில் இருக்கும்.

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் பொதுவாக நடைபெறும்.

முக்கிய கருத்துகளில் அதிக கவனம் செலுத்த பள்ளி பாடத்திட்டம்.

6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியும் கற்பிக்கப்படும்.

3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுடையவர்களுக்கு உட்பட்டு, 10+2 படிப்பு கலாச்சாரம் நிறுத்தப்பட்டு, 5+3+3+4 என்ற புதிய அமைப்பு பின்பற்றப்படும்.



 தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


National Education Policy 


_34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:_


_5 வருட அடிப்படைக் கல்வி._


_*1. நர்சரி: 4 வயது.*_


_*2. ஜூனியர் கேஜி: @ 5 வயதில்.*_


_*3. மூத்த கேஜி:  @ 6 வயதில்.*_


_*4. முதல் வகுப்பு: @ 7 வயதில்.*_


_*5. 2 ஆம் வகுப்பு: @ 8 வயதில்.*_

_(3 வருட தயாரிப்பு)_


_*6. 3வது வகுப்பு: @ 9 வயதில்.*_


_*7. 4 ஆம் வகுப்பு: @ 10 வயதில்.*_


_*8. 5 ஆம் வகுப்பு: @ 11 வயதில்.*_

_(3 ஆண்டுகள் நடுத்தர.)_


_*9. 6 ஆம் வகுப்பு: @ 12 வயதில்.*_


_*10. 7 ஆம் வகுப்பு: @ 13 வயதில்.*_


_*11. 8 ஆம் வகுப்பு @ 14 வயதில்.*_

_(4 ஆண்டுகள் இரண்டாம் நிலை)_


_*12. வகுப்பு IX: @ 15 வயதில்.*_


_*13. எஸ்எஸ்எல்சி: @ 16 வயதில்.*_


_*14. வகுப்பு F.Y.J.C: @ 17 வயதில்.*_


_*15. வகுப்பு S.Y.J.C: @ 18 வயதில்.*_


_முக்கிய புள்ளிகள்:_


_*பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும்.*_


_*கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள்.*_


_*பத்தாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் கிடையாது.*_


_*எம்ஃபில் ஒழிக்கப்படும்.*_

_(JNU போன்ற கல்வி நிறுவனங்களில் 45 முதல் 50 வயது வரை உள்ள மாணவர்கள் எம்ஃபில் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் தங்கி கல்வி முறையையே நலிவடையச் செய்யும் அவலத்தை இது நீக்கும்.)_


_*இனிமேல் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, பிராந்திய மொழி மற்றும் தேசிய மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும்*._


_மீதமுள்ள பாடங்கள் ஆங்கிலமாக இருந்தாலும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும்._


_*இனி பன்னிரண்டாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதினால் போதும். முன்பெல்லாம் 10ம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதுவது கட்டாயம், இனி இல்லை.*_


_தேர்வு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான செமஸ்டர் முறையில் நடைபெறும்.


பள்ளிக் கல்வி _*5 + 3 + 3 + 4 என்ற சூத்திரத்தின்படி நடத்தப்படும்.*_ _(*


 _*கல்லூரி பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் இருக்கும்...அதாவது பட்டப்படிப்பில் 1ஆம் ஆண்டு சான்றிதழ், 2ஆம் ஆண்டில் டிப்ளமோ மற்றும் 3ஆம் ஆண்டில் பட்டம்.*_


உயர்கல்வியை நாடாத மாணவர்களுக்கு _3 ஆண்டு பட்டம். இதற்கிடையில், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். 4 வருட பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு வருடத்தில் முதுகலைப் பட்டம் பெறலாம்._


_*இனிமேல் மாணவர்கள் M.Phil செய்யத் தேவையில்லை. மாறாக மாணவர்கள் இப்போது நேரடியாக Ph.D.*_


_இதற்கிடையில் மாணவர்கள் மற்ற படிப்புகளை செய்யலாம். 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில், புதிய கல்விக் கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரு பாடத்தின் நடுவில் மற்றொரு பாடத்தை செய்ய விரும்பினால், அவர் முதல் படிப்பில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுத்துவிட்டு இரண்டாவது பாடத்தை எடுக்கலாம்._


_*உயர்கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்பாடுகளில் தரப்படுத்தப்பட்ட கல்வி, நிர்வாக மற்றும் நிதி சுயாட்சி ஆகியவை அடங்கும். இது தவிர, உள்ளூர் மொழிகளில் இ- படிப்புகள் தொடங்கப்படும். மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். தேசிய கல்வி அறிவியல் மன்றம் (NETF) தொடங்கப்படும். நாட்டில் நாற்பத்தைந்தாயிரம் கல்லூரிகள் உள்ளன.*_


_அனைத்து அரசு, தனியார் மற்றும் SIMD நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும்._

_இந்த விதியின்படி, புதிய கல்வி அமர்வை தொடங்கலாம்..._


_*அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் இந்த செய்தியை கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*_

KALANJIYAM செயலியில் 31-03-2024 அன்று CPS கணக்கிலுள்ள மொத்தத்தொகையை அறியலாம்...

 


தகவலுக்காக...


CPS Account Slip ல் உள்ள தொகை தற்போது Kalanjiyam App களஞ்சியம் செயலியில் 2024 மார்ச் 31 நிலவரப்படி CPS தொகை மொத்தமாக எவ்வளவு நமது கணக்கில் இருக்கிறது என்பதனை காண்பிக்கிறது...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...