கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Meeting to resolve audit objection, related to pay fixation / incentive pay hike will be held from April - 2025 to July 2025 - DSE Proceedings & Notification



ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் ஏப்ரல் - 2025 முதல் ஜூலை 2025 வரை நடைபெறும் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


Meeting to resolve audit impasse related to pay fixation / incentive pay hike will be held from April - 2025 to July 2025 - School Education Department Proceedings Notification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Internal Audit - District wise audit debarment meeting Dates - DSE Proceedings & Forms



பள்ளிக்கல்வி - அகத்தணிக்கை - பிப்ரவரி 2025 மாதத்தில் 14, 21 & 28 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக தணிக்கைத் தடை நீக்கம் செய்தல் கூட்டமர்வு - பள்ளிக் கல்வித் துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரது செயல்முறைகள், ந.க.எண் : 058863/ அகத - 2/ 2025 நாள். 02.2025 & படிவங்கள்


School Education - Internal Audit - District wise audit debarment meeting on 14th, 21st & 28th February 2025 - Proceedings of School Education Department Financial Adviser and Principal Accounts Officer, Rc. No : 058863/ IA - 2/ 2025, Dated. 02.2025 & Forms



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




 இயக்கப் பொறுப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு...


பள்ளி கல்வித் துறை *நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரது* செயல்முறைகள் *ந.க* . *எண் 058863/அகத/* 2-2025 நாள்.02.2025 இன் படி *மாவட்ட வாரியாக* தணிக்கை தடை நீக்கம் செய்ய *கூட்ட அமர்வுகள்* ஏற்படுத்தப்பட்டுள்ளது...


தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள தணிக்கைத் தடையினை நீக்க இது *நல்லதொரு* வாய்ப்பாக பார்க்கப்படுகிறது...


செயல்முறைகளில் *தணிக்கைத் தடை நீக்கம்* என்று *பொதுவாகத்* தான் குறிப்பிடப் பட்டுள்ளது...


ஆனால் கடந்த 14/02/25 *வெள்ளிக்கிழமை* நடைபெற்ற கூட்ட அமர்வில்... (அனைத்து இடங்களிலும்) 


SPL Fee/NSD / scholarship account *interest* payment *challan* ...

போன்ற ஆசிரியர்கள் பணப் பலன் சாராத தணிக்கை தடை மட்டுமே நீக்க ஆவணம் செய்யப்படும்...


 *ஆசிரியர்களின் பணப் பலன் சார்ந்த* , குறிப்பாக "*M.Phil*" audit போன்ற தணிக்கை தடை  *பார்க்கப்பட* *மாட்டாது* ..


அதை சென்னையில் *அந்த ஆசிரியர்கள்* தான் நேரடியாக " *தனிப்பட்ட முறையில்* " நீக்கம் செய்து கொள்ள வேண்டும் என *வாய்மொழியாக* அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது 😞..


இது *தணிக்கைத் தடை நீக்கம்* சார்ந்த பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...


தணிக்கைத் தடை நீக்க கூட்ட அமர்வின் *உண்மையான* நோக்கத்திற்கு *எதிராக* உள்ளது 🙏...


தாங்கள் சார்ந்துள்ள சங்க உறுப்பினர்கள்/ஆசிரியர்கள் பலன் பெறும் வகையில்


தற்போது மாவட்ட வாரியாக அடுத்து 21 & 28 பிப்ரவரி 2025 இல் நடைபெற உள்ள அடுத்த *அமர்வுகளில்* ...


ஆசிரியர்களின் " *தணிக்கைத் தடை* " நீக்கம் செய்ய உரிய *ஆவணங்கள்* *சமர்ப்பிக்கும்* நிகழ்வுகளில் *அவற்றை நீக்கம் செய்ய ஆவன* செய்யுமாறு....


பள்ளிக் கல்வித் துறை *இயக்குநர்* மற்றும்

பள்ளிக் கல்வித் துறை *நிதி ஆலோசகர்* மற்றும் *முதன்மைக் கணக்கு அலுவலரின் பார்வைக்கு* கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்....

☝️☝️☝️

*`Courtesy:`*

Mr.K.Selvakumar,

Head Master,

GHSS, M.Subbulapuram,

Madurai - Dt


Student injured after falling from 2nd floor of Karur private school



கரூர் தனியார் பள்ளியில் 2வது தளத்தில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்


Student injured after falling from 2nd floor of Karur private school




>>> செய்தி காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


New FASTag norms effective from 17-02-2024

 

புதிய FASTag விதிமுறைகள் 17-02-2024 முதல் நடைமுறை


New FASTag rules effective from 17-02-2024


போதிய பேலன்ஸ் இல்லாவிட்டால் 2 மடங்கு அபராதம் விதிக்க வாய்ப்பு


 ஃபாஸ்ட் டேக்கின் முக்கிய மாற்றங்கள்: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 28, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.


 ஸ்கேன் செய்வதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு: சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த பாலன்ஸ் கொண்டிருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.


ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு: ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலும் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்திருந்தால் "எர்ரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


 பொதுவாக ஃபாஸ்ட் டேக் ஒயிட் லிஸ்ட்டட் மற்றும் பிளாக் லிஸ்டட் செய்யப்படும். ஒயிட் லிஸ்டட் என்பது ஆக்டிவாக உள்ள ஃபாஸ்ட் டேக்குகளை குறிக்கிறது. போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, கேஒய்சி செயல்முறையை முடிக்காமல் இருப்பது, சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருப்பது, வாகனப்பதிவு விவரங்களில் இருக்கும் முரண்பாடுகள் போன்ற காரணங்களினால் ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்படலாம்.



18-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இனிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

பொருள்:
ஊக்கம் மிகுதியே ஒருவனுக்கு பெருமையாகும்: ஊக்கமின்றி உயிர் வாழ எண்ணுதல் சிறுமையேயாகும்.


பழமொழி :
சௌரியம் பேசேல். 

Boast not of your strength.



இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.



பொன்மொழி :

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

--அன்னை தெரசா



பொது அறிவு :

1. உங்கள் உள்ளங்கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது?

விடை: காலியம்

2. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை எவ்வளவு?

விடை: பூஜ்ஜியம்



English words & meanings :

Bookstore. -    புத்தகக் கடை

Bus stop.    -   பேருந்து நிறுத்தம்



பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.



மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.



நீதிக்கதை

கறையும்‌ இருளும்‌

இரவு நேரம்‌. நாரையொன்று காற்றில்‌ பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும்‌ பட்டப்‌ பகல்போல்‌ ஒளி பரவியிருந்தது.  அந்த ஒளியில்‌ வெப்பம் இல்லை.குளிர்ச்சி நிறைந்த  அந்த ஒளி எங்கிருந்து வருகிறது? என்று தேடித்தான்‌ அந்த நாரை பறந்து கொண்டிருந்தது. 

உலகமமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை  சென்ற இடமெல்லாம்‌  அந்த ஒளி நிறைந்‌திருந்தது, நாரை, சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது.

உயரத்தில்‌ ஒளித்தகடு போல்‌ வட்டநிலா அழகுடன்‌ விளங்கியது.  நாரை  அதன் அழகில்‌ மயங்கி நிலாவையே பார்த்துக்‌ கொண்டு நின்றது.

நிலா  அழகாகத்தான்‌ இருந்தது.  உலகம் முழுவதும்‌  ஒளி பரப்பும்‌ பேரொளியைப்‌ பெற்றுத்தான்‌ விளங்கியது. ஆனால்‌ அந்த ஒளிநிறைந்த நிலாவின்‌ இடையிலே ஓர்‌ இருட்டுப்‌ பகுதியும்‌ இருந்தது. அது நிலவின்‌ இடையில்‌ ஒரு கறை போல இருந்தது. இவ்வளவு  அழகான நிலவின்‌ இடையில்‌ இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது நாரை.

தன்னிடம்‌ உள்ள கறையை நீக்கிக்‌கொள்ளாமல்‌ உலகைச்‌ சூழ்ந்துள்ள இருளை   ஓட்டப்‌ புறப்பட்டு விட்டதே இந்த நிலவு! இதன்‌ கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப்‌பட்டது.

அது நிலாவை நோக்கிப்‌ பறந்தது.எவ்வளவு உயரம்‌ பறந்தும்‌ அதனால்‌ நிலாவை அடைய முடியவில்லை . போகப்‌ போக மேலும்‌ மேலும்‌  தொலைவில்தான்‌ இருந்து கொண்டிருந்தது.

நிலாவை  நெருங்க  முடியாது  என்று  கண்டு கொண்ட நாரை, அருகில்‌ காற்றில்‌ தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப்‌ பார்த்து “மேகமே, நிலா  தன்னிடமுள்ள கறையைப்‌ போக்கிக்‌ கொள்ளாமல்‌, உலகில்‌உள்ள இருளைப்‌ போக்குகிறதே இதன்‌ கருத்து என்ன ? என்று கேட்டது.

“நாரையே, உயர்ந்த பெரியோர்கள்‌  தங்கள்‌ துன்பத்தை விட பிறருடைய துன்பத்தை  நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள்‌. அது போன்றதுதான்‌ நிலாவின்‌ இயல்பு!” என்றது மேகம்.

நிலாவின்‌ உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக்‌ கொண்டே இறங்கி வந்தது நாரை.

கருத்துரை :-- தன்‌  துன்பத்தைக்‌ காட்டிலும்‌  பிறர்‌ துன்பத்தைப்‌ பெரிதாக நினைத்து அதைப்‌ போக்க உதவி செய்வதே நல்லோர்‌ இயல்பாகும்‌.


இன்றைய செய்திகள்

18.02.2025

* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

* சென்னையில்பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்​மை வழிகாட்டு​தல் வெளி​யீடு.

* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.

* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.


Today's Headlines

* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.

* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.

* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.

* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.

* In the 6th Pro Archery League, India won by defeating Spain.

* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC.


Covai women ICT_போதிமரம்


Hindi was not imposed in the trilingual policy. But we are committed to the new education policy - Union Education Minister Dharmendra Pradhan



 மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்


Hindi was not imposed in the trilingual policy. But we are committed to the new education policy - Union Education Minister Dharmendra Pradhan


மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை, ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில், ‘புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது?. இந்தியையோ, பிற மொழியையோ தமிழ்நாட்டின் மீது திணிக்கவில்லை; ஆனால் புதிய கல்வி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதில் சில நண்பர்கள் அரசியல் செய்கின்றனர்.


தமிழ், ஆங்கிலம் தவிர 3வதாக இந்திய மொழி ஒன்றை கற்க கூறுகிறோமே தவிர, இந்தியை அல்ல. தமிழ் மொழி பழமையான மொழிகளில் ஒன்றாகும். அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். தேசிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு. மாணவர்கள் மத்தியில் போட்டியை உருவாக்க தேசிய அளவில் பொதுவான தளத்திற்கு வர வேண்டும். மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமில்லை. பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். புதிய கல்வி கொள்கை, பிரதமரின் கனவுத் திட்டம். இதை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.


Will Tamilnadu not get funds if we do not accept trilingual policy? - Chief Minister and leaders condemn Union Education Minister

 மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் கண்டனம்


Will Tamilnadu not get funds if we do not accept trilingual policy? - Chief Minister and leaders condemn Union Education Minister


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்



மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின்: 

மும்மொழிக் கொள்கையை சட்ட விதிமுறைகள் என்கிறார் மத்திய அமைச்சர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது என்பதை கல்வி அமைச்சரால் கூற முடியுமா, மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச்சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: 

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்.


திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: 

மத்திய அமைச்சர் பேசுவது வெளிப்படையான மிரட்டல். தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது தான் பாஜகவின் அரசியலா, தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாஜக அரசு நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களின் போராட்ட குணத்துக்கு பதில் சொல்ல நேரிடும்‌.


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: 

தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. பாஜக அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழக மாணவர்கள்தான். மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதியை தடைபடுத்தக் கூடாது.


தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: 

புதிய கல்விக்கொள்கையை ஏற்காத ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


விசிக தலைவர் திருமாவளவன்: 

தேசியக் கல்விக் கொள்கையை காரணம் காட்டி தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது மிரட்டல் நடவடிக்கையாகும். இந்த போக்கை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.


பாமக தலைவர் அன்புமணி: 

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: 

தமிழகத்தில் மும்மொழி கல்வியை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் மாற்றான் போக்கு எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.


தவெக தலைவர் விஜய்: 

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன. மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அணுகுமுறையாகும்.


ஆதரவு நிலைப்பாடு


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 

முதல்வர் உட்பட தமிழக அமைச்சர்களின் மகன், மகள், பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாவது ஒரு மொழியை கற்பிக்கக் கூடாதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 1960-ல் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமல்ல.


முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை:

 புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை தான் ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் மும்மொழி கல்வியை பின்பற்றும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் ஏன் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக் கூடாதா. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...