கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.0 - Updated on 22-02-2025 - Bug Fixes & Performance Improvements

 


TNSED Schools App


What's is new..?


*🎯Bug Fixes and Performance Improvement...


*_UPDATED ON  22 February 2025


*_Version: Now 0.3.0


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu


The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


NMMS 2025 - SAT Question Paper

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள்


NMMS 2025 - SAT Question Paper


National Means cum Merit Scholarship Scheme 2025 - Scholastic Aptitude Test Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NMMS 2025 - MAT Question Paper

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - மனத்திறன் தேர்வு வினாத்தாள்


NMMS 2025 - MAT Question Paper


National Means cum Merit Scholarship Scheme 2025 - Mental Ability Test Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher



ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது


District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teacher


ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கைது


* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.


* இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை  ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.


* இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமா்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.


நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிகாலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்சங்கள் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளாா்.


* இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்ட நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியா் ஜான் சிபு மானிக்கை அழைத்த தொடக்கக் கல்வி அலுவலா் சந்தோஷ், முன்பணமாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளாா்.


 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.


* இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதனப் பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Upgradation of the post of Computer Instructor - DSE Proceedings, dated : 19-02-2025

 

 கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-02-2025


Upgradation of the post of Computer Instructor - Proceedings of the Director of School Education regarding the issuance of amendment to the Ordinance, dated : 19-02-2025





Kidnapping of private school teacher in Tirunelveli



 தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல் - நெல்லையில் பரபரப்பு


நெல்லை தச்சநல்லூரில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்


செல்போன் கடை நடத்தி வரும் ராஜூ என்பவரை கைது செய்தது காவல்துறை


காதலை ஏற்க மறுத்ததால் காரில் கடத்திச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தகவல்...


காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல் - நெல்லையில் பரபரப்பு


ஆசிரியையை காரில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைதுசெய்தனர்.


நெல்லை மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. 38 வயதான இவர், அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கும், ராஜூவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையும் ராஜூவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 


அந்த பெண், தச்சநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாறுதலாகி, அங்கு பணியாற்றி வருகிறார். இதையடுத்து அந்த பெண், ராஜூவுடன் பேசுவதை குறைத்துள்ளார். இந்த சூழலில் ராஜூ, அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்த பெண் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ராஜூ, தானும் வீட்டிற்கு செல்வதாகவும், தன்னுடன் காரில் வருமாறும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, கட்டாயப்படுத்தி அவரை தனது காரில் ராஜூ அழைத்துச் சென்றுள்ளார்.


அப்போது கார், வீட்டிற்கு செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கி சென்றது. இதனை அறிந்த அந்த பெண், வீட்டிற்கு செல்லாமல் என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய்? என ராஜூவிடம் கேள்வியெழுப்பினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண்ணிடம் ராஜூ பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.



ராஜூவின் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண், நடந்தவை குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை கடத்துதல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜூவை கைதுசெய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிரியையை ராஜூ ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவரை காரில் கடத்தியதும் தெரிய வந்தது. காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை கடத்தப்பட்ட சம்பவம் நெல்லை, தச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025

 

 

 நாளை 22-02-2025 NMMS தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்


Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025


🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்க்கலாம். காலை 8.30 - 9.00


🔸 9.15 தேர்வறைக்கு செல்லுதல்


🔹 9.30- 11.00 : MAT


🔹11.00 - 11. 30 இடைவேளை


🔹 11. 30 - 1.00 : SAT


🔸 தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின் - இரு வினாத்தாள்களையும் எடுத்து கொண்டு வெளியே வரலாம்.


🔹  OMR தாளில்  விடைக்கான பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். 


🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும். மதிப்பெண் கிடைக்காது.


🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. 

செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல் மற்றும் அறை கண்காணிப்பாளரிடம் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.


🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளைத் தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.


🔸 OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.


🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம். 


இது அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.


அதனை தவிர்க்க குறிக்கப்படாத வினாவிற்கான விடையின் மீது அளவுகோல் / ஹால் டிக்கெட் வைத்து மறைத்துவிடலாம்.


🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.


🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.


🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.


சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள்.


NMMS : தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...


வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை


🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்


ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...


🔸 8 திசைகள்


🔸 வர்க்க எண்கள் 20 வரை

1² = 1

2² = 4

3² = 9

4² = 16

5² = 25

6² = 36

7² = 49

8² = 64

9² = 81

10² = 100

11² = 121

12² = 144

13² = 169

14² = 196

15² = 225

16² = 256

17² = 289

18² = 324

19² = 361

20² = 400


🔸கன எண்கள் 10 வரை

1³ = 1

2³ = 8

3³ = 27

4³ = 64

5³ = 125

6³ = 216

7³ = 343

8³ = 512

9³ = 729

10³ = 1000


🔸பகா எண்கள் 100 வரை

2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97



நினைவில் கொள்க :


🔸 காலம் கணக்குகள் 


🔸BIDMAS


🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்


🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்


🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு


🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது


🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை


🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1


🔹 கனம் + 1 / கனம் - 1


🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்


🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4


🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...


🔹பகா எண்ணின் கூடுதல்


🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்


கவனம் தேவை


🔹 SAT கூற்று, காரணம் கேள்விகள்


🔸 பொருத்துக விடைகள் எ. கா 

i-a, ii -C , iii - d , iv_ b


🔹 தவறான கூற்று எது ? கேள்வியை சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது


🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்


🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் shade செய்யவும்.


🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.


🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம். 


எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.


அன்பும் வாழ்த்துகளும்💐💐💐💐


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...