கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 22 [December 22]....

நிகழ்வுகள்

  • 1790 - துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
  • 1807 - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
  • 1845 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
  • 1849 - ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
  • 1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
  • 1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
  • 1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
  • 1963 - லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • 1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
  • 1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

பிறப்புக்கள்

  • 1666 - குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)
  • 1853 - அன்னை சாரதா தேவி, (இ. 1920)
  • 1858 - ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
  • 1887 - இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

இறப்புகள்

  • 1995 - ஜேம்ஸ் மீட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...