கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நிலை) எண் : 235, நாள்:31-10-2026 வெளியீடு



Dearness Allowance (DA) increased to 63% – Government Order (Ms.) No. 235, dated 31-10-2026, issued.


அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நிலை) எண் : 235, நாள்:31-10-2026 வெளியீடு


G.O. (Ms.) No. 235, Dated 31-10-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



தமிழ்நாடு அரசு 2026


கையெழுத்துத் தொடர்


நிதி (படிகள்) துறை 


அரசாணை (நிலை) எண். 235, நாள்:31-10-2026.


(ஐப்பசி -14, திருவள்ளுவர் ஆண்டு 2057)


சுருக்கம்


படிகள் அகவிலைப்படி 01-07-2026 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


பின்வருவனவற்றைப் படிக்கவும்:-


ஆணை


அரசாணை (நிலை) எண்.97. நிதி (படிகள்) துறை, நாள்.14-05-2026


மேலே படிக்கப்பட்டுள்ள அரசாணையில் கீழே குறிப்பிட்டுள்ளபடி, மாநில அரசு அலுவலர்களுக்கு திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது..


எந்தாளிலிருந்து வழங்கப்படுகிறது

01-01-2026


திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம் (மாதம் ஒன்றுக்கு)

அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதம்


2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,மாநில அரசுப் பணியாளர்களுக்கு 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அகவிலைப்படியை 01-07-2026 முதல் உயர்த்தி வழங்கப்படும் அறிவித்ததன் அடிப்படையில் 3 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி, அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.


எந்நாளிலிருந்து வழங்கத்தக்கது

01-07-2026


திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம் (மாதம் ஒன்றுக்கு)

அடிப்படை ஊதியத்தில் 63 சதவீதம்


3. ஜுலை 2026 முதல் அக்டோபர் 2026 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லாப் பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருத்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.


4. மேலே அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப் பணியாளர்களுக்கும். சில்வறைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி. பகுதி நேரப் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.


5. இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும். ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் /உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும். ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் / எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருத்தும்.


6. இச்செலவு, சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்பின் பெருத்தலைப்பு, துணைப் பெருத்தலைப்பு, சிறு தலைப்பின் கீழ்வரும் 303. அகவிலைப்படி" என்ற நுணுக்கத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.


7. மேலே பத்தி 2-இல் ஒப்பளிக்கப்பட்ட திருத்திய அகவிலைப்படி அடிப்படையில், ஜூலை 2026 முதல் அக்டோபர் 2026 வரையிலான நிலுவைத் தொகைப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கவும். நிலுவைத் தொகையை தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட இயக்குநர். கருவூலக் கணக்குத் துறை, சென்னை கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


8. இதற்கான பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குமாறு கருவூல அலுவலர்கள் / சம்பளக் கணக்கு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


(ஆளுநரின் ஆணைப்படி)

மு.அ.சித்திக்

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்


பெறுநர்


அனைத்துத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதன்மைச் செயலாளர்/செயலாளர் சென்னை-9


செயலாளர் சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9.


காப்பாளர் ஆளுநர் மாளிகை சென்னை-22.


ஆளுநரின் முதன்மைச் செயலாளர் மக்கள் மாளிகை சென்னை-22 ஆளுநர் செயலகம், மக்கள் மாளிகை, சென்னை-22


தலைமை தணிக்கை இயக்குநர் (மு.கூ பொ). பேராசியர் க.அன்பழகன் மாளிகை. சென்னை-35


அனைத்து துறைத் தலைவர்கள். அனைத்துச் செயலகத் துறைகள் (அலுவலக நடைமுறை மற்றும் பட்டியங் பிரிவுகள்)


மாநிலத் தகவல் ஆணையம். தேனாம்பேட்டை சென்னை-18. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்


அனைத்து மாவட்ட மாஜிஸ்டிரேட்கள் நீதிபதிகள்/அனைத்து முதன்மை நீதித்துறை


முதன்மை மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (கணக்குகள் மற்றும் உரிமைத் தொகை) சென்னை-18.


மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை-1) சென்னை-18. சென்னை-18 மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை


மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (உதபி), சென்னை-மதுரை இயக்குநர்கருவூலக் கணக்குத் துறை, சென்னை-35


அனைத்து சம்பளக் கணக்கு அலுவலர்கள்.


அனைத்து கருவூல அலுவலர்கள்/அனைத்து சார் கருவூய அலுவலர்கள் தலைவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3


ஆணையாளர். ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயம். சென்னை-108 பதிவாளர்.உயர்நீதி மன்றம், சென்னை-104 அனைத்து அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பதிவாளர்கள்.


அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்கள் / சட்டப்படியான வாரியங்கள். ஆணையாளர். பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை-3.


அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள் மதுரை / கோயம்பத்தூர் / திருச்சிராப்பள்ளி சேலம் / திருநெல்வேலி / ஈரோடு / திருப்பூர் / தூத்துக்குடி / வேலூர்  / தஞ்சாவூர் / கும்பகோணம் / திண்டுக்க / நாகர்கோயில் / ஒசூர் /காஞ்சிபுரம் / கரூர் / கடலூர் / சிவகாசி / தாம்பரம்/ காரைக்குடி / நாமக்கல்


புதுக்கோட்டை / திருவண்ணாமலை மாநகராட்சி ஊரக வளர்ச்சித் துறை அனைத்து உதவி இயக்குநர்கள் / அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்


அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் / அனைத்து கோட்டாட்சியர்கள் / அனைத்து வட்டாட்சியர்கள்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், இயக்குநர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேல்பாட்டு சேவைகள், தரமணி, சென்னை-113


நகல்


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/செயலாளர்-சென்னை


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் சென்னை-9.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் சென்னை-9. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கூடுதல் செயலாளர் சென்னை-9.


அரசு தலைமைச் செயலாளரின் முதன்மை தனிச் செயலர் சென்னை-9. அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச் செய்வர்.


நிதித்துறை, சென்னை-9. இருப்புக்கோப்பு/ உபரி நகல்கள்


-/ஆணைப்படி அனுப்பப்படுகிறது /-


பிரிவு அலுவலர்



அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 955 , நாள்: 31.10.2026

 


செய்தி வெளியீடு எண்: 955 , நாள்: 31.10.2026



DIPR_PR_No.955_-_Hon_ble_CM_Press_Release_-Increase_of_3__DA_to_Govt_Staffs__Teachers_and_Pensioners__-Date_31.10.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



செய்தி வெளியீடு


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.


இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




3% D.A. hike for TN Govt Employees & Teachers

 


தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு


3% Dearness Allowance hike for Tamil Nadu Government Employees and Teachers


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவிப்பு.


தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



01-11-2026 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - செய்தி வெளியீடு

 

01-11-2026 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - செய்தி வெளியீடு


செய்தி வெளியீடு எண்: 952 , நாள்: 30.10.2026



தமிழ்நாடு நாள் விழா

*************************


தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-நாளினைப் பெருமைப்படுத்திடும்வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் "தமிழ்நாடு நாள்" என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, நவம்பர் 1-ஆம் நாள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகச் சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் காலை 10 மணி அளவில் கொண்டாடப்படவுள்ளது.


இவ்விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும். திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ்ச் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கும் வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.


மேலும், நவம்பர் 1-ஆம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும்.


தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



TNTET எழுத Service Certificate பெற இணைக்க வேண்டியவை | DEO Proceedings



TNTET எழுத பணிச் சான்று பெற இணைக்க வேண்டியவை தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


TNTET Service Certificate


கடந்த முறை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இந்த முறை மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் கடந்த முறை பெற்ற அனுமதி கடிதத்தை வைத்து மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பினால் போதும் என இன்றைய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூட்டத்தில் இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் 


TET Service Certificate Application Attachments | DEO Proceedings 


✍️✍️✍️✍️✍️✍️✍️

* ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வு எழுத அனுமதி கோரும் ஆசிரியர்கள் கடைசியாக நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்விற்கு அனுமதி பெற்று இருப்பின் அதன் நகல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலரின்  முகப்பு கடிதம் covering letter மட்டும் வைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் அனுப்பி பணி சான்று பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் கேட்டு ஆசிரியர்களுக்கு தேவையற்ற அலைச்சலை தரக்கூடாது. இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஆசிரியர்கள் விரைவாக பணி சான்று பெற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 



DEO Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



சொத்து விவரங்களை Kalanjiyam Appல் பதிவேற்றம் செய்யலாம்

 


சொத்து விவரங்களை Property Statement பதிவேற்றம் Upload செய்ய Kalanjiyam Appல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Kalanjiyam App > Login > Property Statement > Apply > Add > Review & Submit.


இதன் மூலம் எளிமையாக பதிவேற்றம் செய்யலாம்.


2025 ஆண்டிற்கு பதிவு செய்கிறோம். ஆதலால் 31.12.2025 வரை வாங்கிய சொத்து மற்றும் கடன் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


சொத்து மற்றும் கடன் இல்லாதவர்கள் Nil Select செய்து Submit கொடுக்கலாம்.


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



TNSED Schools App New Version: 0.4.8 - Updated on 30-10-2026



TNSED Schools App New Version: 0.4.8 - Updated on 30-10-2026


தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

TNSED Schools App New Version: 0.4.8 - Updated on 30-10-2026 - SCERT Quiz and feedback added

* TNSED Schools App


* What's is new..?



🎯 Improved app performance and overall stability for a faster, smoother experience


UPDATED ON  30 October 2026

Version: Now 0.4.8

Link:



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்

 


Letter from the Joint Registrar regarding the repayment of loans obtained from the Cooperative Thrift and Credit Society by teachers transferring from one block (union) to another


 பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



கூட்டுறவுத்துறை


அனுப்புநர்

க.பா.அருளரசு, B.Sc (Agri)., MBA., HDCM.,

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்,

நாமக்கல் மண்டலம்,

நாமக்கல்


பெறுநர் 

மாவட்ட கல்வி அலுவலர்

நாமக்கல்


கா.மு.அ. 58/2026/மவ , நாள்.15.10.2026


அய்யா/அம்மையீர்,


பொருள் : கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் தொடர்ந்து தவணைத் தொகை பிடித்தம் செய்ய கோரியது- தொடர்பாக.


பார்வை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானம் நாள்:05.09.2026 (இவ்வலுவலகத்திற்கு பெற்றப்பட்ட நாள்.19.09.2026)


பார்வையில் காணும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாக செலுத்திட நிர்பந்தித்திடாமல் பணிமாறுதல் பெற்றுச் செல்லும் ஒன்றியத்தில் நிலுவை தவணை தொகையை தொடர்ந்து பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நேர்வில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் செலுத்தி முடியும் வரை இயற்கை நியதியின் அடிப்படையில் அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திலேயே தொடர்ந்து தவணை தொகையை செலுத்தவோ அல்லது தனியரது விருப்பத்தின் அடிப்படையில் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டு பணிமாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் புதியதாக கடன் பெற்றுக்கொள்ளவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஒம்/-க.பா.அருளரசு

இணைப்பதிவாளர்.

நாமக்கல்.

15/10/26



இணைப்பதிவாளருக்காக.

15/10/26


மேஎ எண்.5761/ஆ1/2026 , நாள். .10.26


நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது 


மாகஅ

நாமக்கல்

26/10/2026


பெறுநர் 

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் 



TNTET December 2026 - SOP for Reinforcement Training

 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET December 2026) - வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்


Standard Operating Procedures for Reinforcement Training



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET DEC 2026)


வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP)


1. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிசம்பர் 2026) வலுவூட்டுதல் பயிற்சியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), சென்னை-6 ஏற்பாடு செய்துள்ளது.


2. இப்பயிற்சியானது இடைநிலை ஆசிரியர்கள் (SGT) தாள்-1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (BT) தாள்-2 ஆகிய தேர்வினை எதிர்கொள்ளத் தயார்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறையினால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே இந்த வழிகாட்டுதல் திட்டமாகும்.


4. இப்பயிற்சியானது வருகின்ற அக்டோபர் 2026 முதல் டிசம்பர் 2026 வரை நடைபெறும்.


5. இந்த வலுவூட்டுதல் பயிற்சித் திட்டம் முழுவதுமாக நேரடி வகுப்புகள் (offline) முறையில் மட்டுமே நடத்தப்படும். நேரடி வகுப்பிற்கு பிறகு சில குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டும் ஆசிரியர்களின் மீளாய்வு மற்றும் வலுவூட்டுதல் பணிகளுக்காக காணொலி வடிவில் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


6. இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் DIET அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் மட்டுமே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.


7. இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்த ஆசிரியர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.


8. பதிவு செய்த ஆசிரியர்கள், அட்டவணையின்படி பயிற்சி மையத்திற்கு உரிய நேரத்தில் வருகை தந்து, பயிற்சியில் பங்கேற்க வேண்டும்..


9. ஆசிரியர்கள் தங்கள் பெயர், வயது, பதவி. EMIS எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற துல்லியமான விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும்.


 10. மின்னஞ்சல் முகவரியுடன் வெற்றிகரமாக முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கான கால அட்டவணை, SRC Telegram குழுவின் மூலமாக பகிரப்படும்.


11. ஒரு மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர்கள், பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி வகுப்புகளுக்கான இடவசதி இருப்பின். அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம்.


12. SCERT / DIET மூலம் நடத்தப்படும் இந்த நேரடி வகுப்புகள் ஒரு வலுவூட்டுதல் மட்டுமே. இவை TET பாடத்திட்டத்தின் முக்கிய தலைப்புகள் குறித்த தெளிவான கருத்தியல் கண்ணோட்டத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


13. இந்த வலுவூட்டுதல் வகுப்புகள் SCERT / DIET ஆல் பரிந்துரைக்கப்பட்ட அந்தந்த பாட வல்லுநர்களால் கையாளப்படும்.


14.வலுவூட்டுதல் அமர்வுகளின்போது, பாட வல்லுநர்களால் எந்தவிதமான குறிப்புப் பொருட்களோ (Reference materials). குறிப்புகளோ கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது.


15. பங்கேற்பாளர்கள் பயிற்சி அமர்வுகளின்போது, தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொள்ளவும், அதன் மூலம் சுயப்பயிற்சியைத் தொடரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


16. இப்பயிற்சியில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் தலைப்புகள் பங்கேற்கும் ஆசிரியர்களின் TET தயாரிப்பிற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


17. இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என்று கருதக்கூடாது.


18.ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை கொண்டு தயாரிப்பை மேலும் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.


19.ஆசிரியர்கள் இப்பயிற்சி அட்டவணையின்படி சரியான நேரத்திற்கு பயிற்சி மையத்திற்கு வருகைபுரிய வேண்டும்.


20. ஆசிரியர்கள் தங்களது வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026*






*திருக்குறள்:*


 பால் : பொருட்பால்


இயல் : அரசியல்


அதிகாரம்:52. தெரிந்து வினையாடல்


குறள் எண்:520


குறள்:


நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.  


பொருள்:


மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

*பழமொழி :*

Tit for tat.


பழிக்கு பழி.



*இரண்டொழுக்க பண்புகள் :.*


1. தோல்வியைக் கண்டு துவள மாட்டோம்; வெற்றிக்காக முயல்வோம்.


2. மரங்களை வளர்ப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்.


*பொன்மொழி :* 


“சரியான தருணத்திற்காகக் காத்திருப்பதில் வெற்றி இல்லை; ஒவ்வொரு தருணத்தையும் உழைப்பாலும் உறுதியாலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதில்தான் வெற்றி உள்ளது!” 🌷


*Thought for the Day :*


“Success is not achieved by waiting for the perfect moment, but by making every moment meaningful through hard work and determination.”


*பொது அறிவு :*


1. தினமும் எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது? 


5 கிராம். 


 2. சிதம்பரத்தில் எந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது?


 கருப்பு உளுந்து.  


*English words :*


1. Frantic – Panicked – பதற்றமான


2. Humble – Unassuming – எளிமையான


*புவியியலும் சுற்றுசூழலும் :*


நகராட்சியின் முக்கியப் பணிகள் குறித்து காண்போம்


முதலாவது தூய்மைப் பணி


நகரத் தெருக்களைச் சுத்தம் செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், கழிவுகளை அகற்றுதல் ஆகும். கழிவுகளை அகற்ற

நகராட்சிப் பணியாளர்கள் வீடுகள், கடைகள் போன்ற இடங்களிலிருந்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர்.


NMMS :


MAT 


எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் _______________________ 


 (1) பிரதீபா பாட்டில் 


 (2) பச்சேந்திரி பால் 


 (3) அருந்ததி ராய்


 (4) மீரா குமார் 


 விடை: (2) பச்சேந்திரி பால்


*அக்டோபர் 30*


*மாரடோனா அவர்களின் பிறந்தநாள்*


1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 


நீதிக்கதை


 தீமை செய்பவருக்கும் நன்மை செய்ய வேண்டும்


ஒரு கிராமத்தில் ராஜேஷ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் அனைவரிடமும் அன்பாகவும், உதவும் மனப்பான்மையுடனும் பழகி வந்தான்.


அதே கிராமத்தில் கதிரேஷ் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ராஜேஷை அடிக்கடி கேலி செய்வதும், அவனைப் பற்றிப் பிறரிடம் தவறாகப் பேசுவதுமாக இருந்தான்.


ஒருநாள் ராஜேஷ் தனது வயலில் காய்கறிகளைப் பயிரிட்டிருந்தான். அவற்றைச் சந்தையில் விற்பனை செய்வதற்காகத் தயாராக வைத்திருந்தான். அப்போது கதிரேஷ் பொறாமையால் ராஜேஷின் வயலுக்குள் புகுந்து சில காய்கறிச் செடிகளைச் சேதப்படுத்தினான். இதைக் கண்ட ராஜேஷ் மிகவும் வருத்தப்பட்டான். இருப்பினும், கதிரேஷிடம்ளசண்டையிடாமல் அமைதியாக இருந்தான்.


சில நாட்களுக்குப் பிறகு, கதிரேஷ் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்தான். அப்போது அந்த வழியாக வந்த ராஜேஷ், கதிரேஷின் நிலையைப் பார்த்தான்.


தனக்குத் தீமை செய்தவனுக்கு உதவ வேண்டுமா என்று ராஜேஷ் தயங்கவில்லை . உடனே அவனுக்குத் தண்ணீர் கொடுத்து, அவனுடைய குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தான். பின்னர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் உதவினான். கதிரேஷ் உடல்நலம் தேறிய பிறகு, ராஜேஷை ச் சந்தித்தான்.


“நான் உனக்குத் தீமை செய்தேன். ஆனால் நீ எனக்கு நன்மை செய்தாய். நான் செய்த தவறை நினைத்து வெட்கப்படுகிறேன். என்னை மன்னித்துவிடு,” என்று வருத்தத்துடன் கூறினான்.


ராஜேஷ் அன்புடன், “நாம் பிறர் செய்யும் தீமையைப் போலவே அவர்களுக்குத் தீமை செய்தால், இந்த உலகத்தில் நன்மை எப்படி வளரும்? தீமைக்குத் தீமையால் பதிலளிப்பதை விட நன்மையால் பதிலளிப்பதே சிறந்தது,” என்று கூறினான்.


ராஜேஷின் நல்ல மனதை ப் புரிந்து கொண்ட கதிரேஷ், அதன்பிறகு யாருக்கும் தீமை செய்யாமல், அனைவரிடமும் அன்பாகப் பழகத் தொடங்கினான்.


### நீதிக்கருத்து


“தீமை செய்பவருக்கும் நன்மை செய்ய வேண்டும். தீமையை நன்மையால் வெல்வதே உயர்ந்த பண்பு!”


*இன்றைய செய்திகள்*


30.10.2026


🗒️தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.


🗒️நவம்பர் 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.


🗒️ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்.


🗒️சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்.


விளையாட்டுச் செய்திகள்


🏀அகில இந்திய ஆக்கி: தமிழக அணி வெற்றி மலேசியா ஜூனியர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.


🏀கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 134-4.


*Today's Headlines*


🗒️ The Mullaperiyar Dam agreement, which is very important for five districts of Tamil Nadu, has completed 140 years since it was signed.


🗒️ The Lorry Owners’ Association has announced an indefinite strike from November 1.


🗒️ A low-pressure area is moving towards Andhra Pradesh, according to the India Meteorological Department.


🗒️ NASA scientists performed a spacewalk outside the International Space Station and installed solar panels.


🏀 Sports News

🏑 All India Hockey: Tamil Nadu team wins. The Tamil Nadu team recorded its first victory by defeating the Malaysia junior team.


🏏 Cricket:


In the Test match against Bangladesh, West Indies scored 134 runs for 4 wickets at the end of Day 2.



NMMS Examination (2026-2027) Applying Procedure

 


NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை


NMMS Examination (2026-2027) Applying Procedure 


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு 2026-2027 விண்ணப்பிக்கும் வழிமுறை



கணினி வழியாக விண்ணப்பிக்கும் வழிமுறை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



அலைபேசி வழியாக விண்ணப்பிக்கும் வழிமுறை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

NMMS Exam (2026-2027) Application Form

 


NMMS Examination (2026-2027) Application Form


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு 2026-2027 விண்ணப்ப படிவம்


National Means-cum-Merit Scholarship Scheme Examination (2026-2027)

EXAM DATE : 12.12.2026 (SATURDAY) FEES : Rs.50 /- (Rupees Fifty only)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census) - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்



சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census) - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி சர்வே எடுக்க ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புதிய அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சனை, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, சமூகநீதி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்தல் போன்ற சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.


கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது, ‘‘அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்புக்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்கப்படும். அதன்மூலம் சாதிவாரி, சமூகப் பொருளாதார நிலை குறித்து அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.


முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.


TNPSC Group 4 தேர்வு - சான்றிதழ்களை ஒருமுறைப் பதிவு (OTR) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு


TNPSC Group 4 தேர்வு  சான்றிதழ்களை ஒருமுறைப் பதிவு (OTR) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு


TNPSC குரூப்–4 தேர்வு (அறிவிக்கை எண்: 07/2025) – வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கணினிவழிச் சான்றிதழ் சரிபார்ப்புத் தற்காலிகப் பட்டியல் 28.10.2026 அன்று வெளியீடு – தேர்வர்கள் சான்றிதழ்களை 30.10.2026 முதல் 11.11.2026 வரை TNPSC ஒருமுறைப் பதிவு (OTR) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



SSLC & HSE பெயர்ப்பட்டியல் தயாரிக்க கூடுதலாக கால அவகாசம்

 



SSLC HSE NR - 2027  Date Extension


SSLC & HSE பெயர்ப்பட்டியல் தயாரிக்க 14.11.2026 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



இந்த ஆண்டு NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய Portal மாற்றம்

 


2026-2027ஆம் ஆண்டு NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய Portal மாற்றப்பட்டுள்ளது. 




வலைதள முகவரி :

https://dgeapp.tnschools.gov.in/login


இந்த இணைப்பில் EMIS இணையதளத்தின் USER ID மற்றும் Password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.


Exam List

---> Scholarship

----> NMMS

----> pull students 

----> apply 

----> submit

---> payment

---> report


என்ற வழக்கமான நடைமுறையை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு

 

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க G.O. No. 240 , Dated : 23.10.2026 வெளியீடு

 


ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க அரசாணை எண்.240 , நாள் : 23.10.2026 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந 4-2) துறை


அரசாணை (ப) எண்.240 , நாள் : 23.10.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஐப்பசி 6


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.41, நிதித் (மை.ம.ஆ.பி) துறை, நாள் 13.02.2026.


2. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.14090/சஉதி-1(2)/2025, நாள் 09.06.2026 & 09.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ரூ.20,000/- வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.


2. இதனைத் தொடர்ந்து, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க ஏதுவாக இந்திய நாட்டின் இறப்பு விகிதம் 6.5% என்ற அடிப்படையில் ஆண்டு ஒன்றிற்கு 4,456 பயனாளிகள் என்ற கணக்கீட்டில் நபர் ஒருவருக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.8.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


3. சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது அவர்களது ஈமச்சடங்கிற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20,000/- வழங்குவதற்காக, இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 1500 ஆக கணக்கில் கொண்டு ரூ.3,00,00,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.


4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.


"2235 – சமூக பாதுகாப்பும் நலனும் 60 ஏனைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் 200 ஏனைய திட்டப் பணிகள் மாநில செலவினங்கள் DU சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்களுக்கு இறுதி சடங்கிற்கு நிதியுதவி அளித்தல் 310 பங்குத் தொகைகள் 01 குறிப்பிட்ட நிதிக்கு தொகை கொடுத்தல்"


(IFHRMS DPC 2235 60 200 DU 310 01)


5. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப்பணி" (New Service) குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித்(வ.செ.பொ.-1)துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்ட மன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963 இல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித்(வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2026-2027 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(வ.செ.பொ-1/ச.ந) துறைக்கு அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


6. இவ்வாணை நிதித் துறையின் அ.சா.எண். 14352368/ ச.ந4-2/2026, நாள் 22.10.2026-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண். 2026100718


(ஆளுநரின் ஆணைப்படி)


ம.பல்லவி பல்தேவ்

அரசு செயலாளர்


பெறுநர்.


சமூக நல இயக்குநர், சென்னை-5.


சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர், சென்னை-35.


முதன்மை மாநிலக் கணக்காயர், சென்னை-18.


முதன்மை மாநிலக் கணக்காயர், (தணிக்கை-I/II), சென்னை-18.


சம்மந்தப்பட்ட மாவட்டக் கருவூல அலுவலர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


இருப்பிட தணிக்கை அலுவலர், சென்னை-9.



 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஒய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக.20,000 வழங்க அரசு ஒப்புதல்.


அரசாணையின் முக்கிய அம்சங்கள்


தகுதி: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்.


நிதியுதவி: இறந்த பணியாளரின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவிற்காக  ரூ.20,000.


நிதி ஒதுக்கீடு: 1,500 பயனாளிகள் எனக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.3,00,00,000 (ரூ.3 கோடி) ஒதுக்கீடு செய்ய அனுமதி.


 IFHRMS DPC 2235 60 200 DU 310 01 என்ற கணக்குத் தலைப்பில் செலவினம் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் 23-10-2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 240, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் இயற்கை எய்தினால் அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகையை (Funeral Expenses Fund) வழங்குவதற்கான ஆணை ஆகும்.


இந்த அரசாணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

• முக்கிய நோக்கம்: ஓய்வு பெற்ற சத்துணவு இறக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பங்களின்  சுமையைக் கணிசமாகக் குறைப்பதற்காக இந்த நிதி உதவித் திட்டம் தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

• பின்னணி: முன்னதாக 13.02.2026 அன்று நிதித்துறை வெளியிட்ட அரசாணை எண் 41 மற்றும் சமூக நல இயக்குநரின் பரிந்துரைக் கடிதங்களின் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசுச் செயலாளர் (திருமதி. மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப.) அவர்களின் ஆணைப்படி இந்த அரசாணை (ப) எண் 240 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


TET Paper 1 & 2 Service Certificate & Application Covering Letter



 TET Paper 1 & 2 Service Certificate & Application Covering Letter


ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் பணிச் சான்று பெறுவதற்குரிய விண்ணப்பங்கள் 


குறிப்பு: முகப்பு கடிதம் - 1

பணிச்சான்று படிவம் - 3


TET DEO Permission Covering Letter & Service Certificate



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SMC உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் தொடர்பாக SPD செயல்முறைகள்



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SMC உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Energizing SMC Members - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



SMC 2026 : தமிழ்நாட்டில் 6,654 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வலுப்படுத்தல்! மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு


✅  இரண்டு கட்டங்களாக 6,654 பள்ளிகள் தேர்வு


📝 முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான 6 முக்கிய கட்டளைகள்



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-600 006


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ந.க.எண். 1338/A11/பமேகு/ஒபக/2026 , நாள்: 15/10/2026


பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடக்க நிலை / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களின் செயல்பாடுகள் வழிகாட்டுதல்கள் வழங்குதல்-சார்பு


பார்வை


(1) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை நாள். 19.08.2026.


(2) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள். நகஎண். 1077/A11/பமேரு/ஒப்சு/2025, நாள் 15.04.2025.


(3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள், நகஎண்: 1338/A11/பமேரு/ஒபக/2026, நாள் 02.06.2026.


பார்வை-1-இன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிடவும். குழுக் கூட்டங்களில் சிறப்பாகப் பங்கேற்கவும் ஊக்கப்படுத்துதல் அவசியமாகிறது.


பார்வை-2-இன்படி, முதல் கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட 3,744 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக, உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் (SMC-RPs) வழியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பார்வை-3-இல் உள்ளவாறு, இரண்டாம் கட்டமாக முதல் கட்டப் பள்ளிகளுக்கு அருகமையில் உள்ள 2,960 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு மொத்தம் 6,654 பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டில் கருத்தாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்ட்ட பணிகளை மேற்கொள்வதற்கு.


வழிகாட்டுதல்களில் உள்ளவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல் (இணைப்பு-1)இறுதி செய்யப்பட்டு பின்னர் அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதன்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களால் கவனம் செலுத்தப்படவுள்ள பள்ளிகளின் பட்டியல், முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் இரு பகுதிகளாக, இணைப்பு-1 ஆக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு


வ .எண் / கட்டம் / பள்ளிகளின் எண்ணிக்கை


1.   முதல் கட்டம் (இணைப்பு-1 பகுதி-அ). : 3,743 


2.  இரண்டாம் கட்டம் (இணைப்பு-1 பகுதி.ஆ) : 2,911


மொத்தம் : 6,654


இணைப்பு-1-இல் உள்ள பள்ளிகளில் பார்வை-3-இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கருத்தாளர்கள் பணிபுரிவார்கள். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைத் தங்கள் மாவட்டத்தில் உறுதிசெய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1) தங்கள் மாவட்டத்தில் உள்ள இணைப்பு-1 இல் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பள்ளிகள் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களால் சிறப்புக் கவனம் செலுத்தப்படவுள்ள பள்ளிகள் என்பதை உதவித் திட்ட அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (SMC-DCs) மற்றும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.


2) இப்பள்ளிகளுக்குக் அனுமதிக்கப்பட்ட கருத்தாளர்கள் வருகை தரும்போது, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் மற்றும் கிராம சபைக் கூட்டங்களைப் பார்வையிடுதல் பெற்றோர் செயலி பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பைத் தலைமையாசிரியர்கள் வழங்கிட வேண்டும்.


3) பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி மற்றும் கூட்டங்கள் குறித்த தகவல்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே சென்றடைவதையும், உறுப்பினர்கள் பங்கேற்பதையும் உறுதிசெய்யும் பணிகளை மேற்கொள்ளத்


தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பைத் தலைமையாசிரியர்கள் வழங்கிட வேண்டும்


4) கருத்தாளர்கள், தங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டுமே பணிபுரிவார்கள். மாநிலத் திட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள பணிகளைத் தவிர வேறு எந்தவொரு பணிகளிலும் கருத்தாளர்களை முன் அனுமதியின்றி ஈடுபடுத்தக் கூடாது.


5) பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிகளின் பட்டியலைச் சார்ந்த வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs), மேற்பார்வையாளர்களுடன் (Supervisors) பகிர்ந்து. கருத்தாளர்களுக்குத் தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.


6) இணைப்பு-1 இல் உள்ள பட்டியலில் ஏதேனும் திருத்தம் அல்லது விடுபாடு இருப்பின் அதனை மாநிலத் திட்ட அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.


எனவே 2026-2027ஆம் கல்வியாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வட்டார அளவில் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்கள். பணிகளை மேற்கொள்ளுவதற்குத் தேவையான அனுமதியும் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கிட உதவித் திட்ட அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு-1: தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல் (மின்னஞ்சல் வாயிலாக) 2:மாநில முதன்மைக் கருத்தாளர்கள் (Trainers) பெயர் பட்டியல் 3: பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களின் பெயர் பட்டியல்


 மாநிலத் திட்ட இயக்குநர்


பெறுநர் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்: (தகவலுக்காக அனுப்பலாகிறது)


1. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை


2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-6.



மாதம் ரூ.35,548 ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் (Field Assistant) நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு

 


Government order issued for the recruitment of 8,000 Field Assistants in the Tamil Nadu Electricity Board through the TNPSC, with a monthly salary of Rs. 35,548.


மாதம் ரூ.35,548 ஊதியத்தில் TNPSC மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் (Field Assistant) நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



Energy Department Tamil Nadu Power Distribution Corporation Limited Permission accorded to the Chairman cum Managing Director, Tamil Nadu Power Distribution Corporation Limited, to fill up 8,000 posts of Field Assistant in Tamil Nadu Power Distribution Corporation Limited in phased manner i.e., 5,000 posts in the calendar year 2027 and 3,000 posts in the calendar year 2028 by Direct Recruitment through Tamil Nadu Public Service Commission - Orders issued.


ENERGY (B2) DEPARTMENT


G.O. (Ms.) No.126 , Dated: 28.10.2026


பராபவ வருடம், ஐப்பசி 11 திருவள்ளுவர் ஆண்டு 2057


Read:


1. G.O.(Ms). No.72, Energy (B2) Department, Dated: 21.07.2025.


2. G.O.(Ms).No.106, Energy (B2) Department, Dated: 23.09.2026.


3. From the Chairman and Managing Director, Tamil Nadu Power Distribution Corporation Limited, Letter No.026398/G.19/G.192/2026-2, Dated: 30.09.2026.


ORDER:


In the letter third read above, the Chairman cum Managing Director, Tamil Nadu Power Distribution Corporation Limited, has requested the Government to accord permission to fill up 8,000 posts of Field Assistant in Tamil Nadu Power Distribution Corporation Limited, in phased manner i.e., 5,000 posts in the calendar year 2027 and 3,000 posts in the calendar year 2028 by Direct Recruitment through Tamil Nadu Public Service Commission.


அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு

 


அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு


G.O.Ms.No.18 - Cost Free Travel


மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe). புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.2)த் துறை


அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026


பராபவ, ஐப்பசி -10.


திருவள்ளுவர் ஆண்டு, 2057,


படிக்கப்பட்டது:


1. அரசாணை (நிலை) எண்.01, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந-2)த் துறை, நாள் 03.06.2021.


2. அரசாணை (நிலை) எண்.18, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந.2.2)த் துறை, நாள்.16.09.2025.


3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் 5.5.6:13390003/2-3/2026, 1:16.09.2026.


ஆணை:


மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 21 வகையான மாற்றுத்திறன்களில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட (Benchmark Disability) மாற்றுத்திறனாளிகள், உதவியாளர் ஒருவருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் (White Board) அனுமதிக்கப்பட்ட கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டத்தினை, தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும் 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் விரிவுபடுத்திடவும், அதன்படி 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்புத் தன்மை கொண்ட, (Benchmark Disability) மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள். துணையாளர் (Escort) ஒருவருடன் 100% மலைப்பகுதிகள் (Fully Ghat) மற்றும் பகுதி மலைப்பகுதிகளில் (Partially Ghal) இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் பேருந்து வசதி உள்ள பகுதிகளில் (Served Area) 35 கி.மீ. வரையிலும் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளில் (Unserved Area) 40 கி.மீ. வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.


3. இந்நிலையில், 2026-2027-ஆம் நிதி ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, 31.08.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-


"தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்து கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்."


4. மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தனது செயற்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பணி மற்றும் சுய தொழில் புரியவும், மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், தங்கள் இருப்பிடத்திலிருந்து 100 சதவீதம் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் செல்ல பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்படுவதாகவும், மேலும் நகரப் பேருந்துகள் மட்டுமல்லாது இதர பேருந்துகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 கிலோமீட்டர் தூர எல்லைக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி கட்டணமில்லாமல் செல்லச் சலுகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


5. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்போது பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டு வரும் பேருந்து பயணச் சலுகைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர சாதாரண, விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) மற்றும் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் (UDID) பயன்படுத்தி கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் செல்வதற்கும் சில நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.



>>> முழுமையான அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய ரயில்வேயில் 3144 வேலைவாய்ப்புகள் - RRB அறிவிப்பு

 இந்திய ரயில்வேயில் 3144 வேலைவாய்ப்புகள் - RRB அறிவிப்பு 1. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் - 1,265 காலியிடங்கள் 2. சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர்,...