கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 08.10.2020 (வியாழக்கிழமை)


🌹எத்தனை பேர் நம் கூட இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை.
நம்மை சுற்றி ஒருவராவது உண்மையாக இருக்கின்றார்களா  என்பதுதான் முக்கியம்.!
🌹🌹இருக்கப்பட்டவன் பொய்யே சொன்னாலும் நம்பும் இவ்வுலகம்,
இல்லாதவன் உண்மையே சொன்னாலும் நம்பாது.
ஏன்னா,இங்க உயிருள்ள மனுசனுக்கும் மதிப்பில்லை.
உணர்ச்சியுள்ள மனசுக்கும் மதிப்பில்லை.
இது ரெண்டுமே இல்லாத பணத்துக்கும், பதவிக்கும் தான் மதிப்புருக்கு.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக கருத்து கேட்பு கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை தகவல்.
🍒🍒அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்கள் ரூ.15000/- தொகுப்பூதியத்தில்  நியமனம் செய்ய அரசாணை வெளியீடு. 
🍒🍒RTE - தனியார் பள்ளிகளில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு  இரண்டாம் கட்ட மாணவர் 
சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🍒🍒இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. இன்று பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. 
🍒🍒தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்புகளைப் படிக்கும் மாணவா்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு செல்லும் - தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கில்  உயா்நீதிமன்றம் தீா்ப்பு. 
🍒🍒நாட்டில் செயல்பட்டு வரும் 24 பல்கலைக்கழகங்கள் போலி : பல்கலைக்கழக மானியக் குழு போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
🍒🍒வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி? நீதிமன்றம் சரமாரி கேள்வி
🍒🍒சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க  இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் NCERT  புரிந்துணர்வு ஒப்பந்தம்.   
 🍒🍒ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக ராஜேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍒🍒ஐபிஎல் 2020 : சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா.
🍒🍒தனியார் பல்கலை விவசாய படிப்பு துவங்க தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம் : தமிழக அரசு திட்டவட்டம்
🍒🍒மருத்துவக் கல்லூரிகளில் மேலும் சில காலம் ஆன்லைன் மருத்துவக் கல்வி தொடரும்
🍒🍒தமிழகத்தில் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்களை நியமிப்பது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி
🍒🍒தொல்லியலுக்கான தமிழ்வழி படிப்பு நீக்கம் - தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம்
தொல்லியில் படிப்புகளில் தமிழ்வழி படிப்பு நீக்கம் செய்யப்பட்டது மத்திய அரசின் தமிழ் விரோதப் போக்கை காட்டுகிறது என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
🍒🍒சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியதுள்ளார்.
இப்போதுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி , வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
🍒🍒முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது?-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி.
சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக உயர்த்தலாம் 
தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என கருத்து.                         
🍒🍒அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனிதான் அதிமுகவில் மோதல் தொடங்க போகிறது. தர்மயுத்தமும் தொடங்கபோகிறது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
🍒🍒தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 30.                  🍒🍒RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
🍒🍒தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறுபவை - 2020-21 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்குதல்-சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒வேளாண் படிப்புகளில் சேர போட்டாபோட்டி - 4,700 இடங்களுக்கு 48,820 பேர் விண்ணப்பம்- அக்.15-ல் தரவரிசைப் பட்டியல்.
🍒🍒புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
🍒🍒அரசாணை (நிலை)எண் :136 நாள்: 06.10.2020.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு.
🍒🍒அரசு கலை - அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 4,084 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலத்துக்கு ஊதியம் வழங்க அரசு ஒப்புதல். ரூ.36.93 கோடியை விடுவித்து அரசாணை.
🍒🍒சர்வதேச அளவில் சீனா மீதான மதிப்பு குறைவு.சீனா மீது நம்பிக்கை இல்லை என மக்கள் கருத்து:
ஜப்பான்-86%
ஸ்வீடன்-85%
ஆஸ்திரேலியா-81%
தென் கொரியா-75%
டென்மார்க்-75%
பிரிட்டன்-74%
அமெரிக்கா-73%
கனடா-73%
நெதர்லாந்து-73%
ஜெர்மனி-71%
பெல்ஜியம்-71%
பிரான்ஸ்-70%
ஸ்பெயின்-63%
இத்தாலி-62%
🍒🍒அதிமுக - 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு :
1. திண்டுக்கல் சீனிவாசன்
2. தங்கமணி
3. எஸ்.பி.வேலுமணி
4. ஜெயக்குமார்
5. சண்முகம்
6. காமராஜ்
7. ஜே.சி.டி பிரபாகர்
8. மனோஜ் பாண்டியன்
9. பா.மோகன்
10. இரா.கோபாலகிருஷ்ணன்
11. மாணிக்கம்
🍒🍒அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
🍒🍒வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு
இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு பரிசு
மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு
இமானுவேல் சார்பென்டியர் - பிரான்ஸ் நாட்டவர் 
ஜெனிஃபர் ஏ டவுட்னா - அமெரிக்க நாட்டவர்.
🍒🍒அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
🍒🍒தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை சீரும் சிறப்போடும், வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல அயராது உழைப்பேன் - முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவை அடுத்த நூறாண்டு காலத்திற்கு வெற்றி இயக்கமாக உருவாக்கிட உறுதி ஏற்கிறேன் - முதலமைச்சர்
அதிமுக முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி - முதலமைச்சர் பழனிசாமி
🍒🍒சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் நேற்று சந்திப்பு.
பசுமைவழிச்சாலையில் உள்ள தனபால் இல்லத்தில் சந்திப்பு நடைப்பெற்றது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்.
🍒🍒வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது தொடரும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
🍒🍒மிதமானது முதல் தீவிரமான கொரோனா நோயாளிகளில் இறப்பு விகிதத்தை குறைக்க எந்த வகையிலும் பிளாஸ்மா தெரபி பயன்படவில்லை என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
🍒🍒சட்டமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
🍒🍒தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில், RTE எனப்படும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை, வருகிற 12ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
🍒🍒அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🍒🍒குழந்தைகள் தாய்மொழியில் கல்வியை துவக்குவது அவசியம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
🍒🍒ஓமனில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு.
🍒🍒கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
🍒🍒ஆஸ்திரேலியாவிற்கு ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவை விட முக்கியமான நட்பு நாடுகள் இல்லை. - ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்.
🍒🍒கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது இதன் தொடர்ச்சியாக பார்வை 4ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🍒🍒 தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை
🍒🍒 B.E கவுன்சலிங் இன்று தொடக்கம்: 1.12 லட்சம் இடங்களுக்கு ஆன்லைன் கவுன்சலிங்:கால அட்டவணை வெளியீடு
🍒🍒தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் படிப்பில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
🍒🍒கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை முடிகிறது அவகாசம்
🍒🍒திமுகதான் ஜெயிக்கும் எனத் தெரிந்தே முதல்வர் வேட்பாளர் பதவியை ஓபிஎஸ் விட்டுக் கொடுத்திருக்கிறார்: 
தங்க தமிழ்ச்செல்வன்
🍒🍒நான் விவசாயி என்று சொன்னதில்லை; 
ஆனால் விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிவேன் 
மு.க.ஸ்டாலின்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...