கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 03-01-2021 (ஞாயிறு)...

 


🌹இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் 

முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்.!

🌹🌹இன்னாரை போல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட,

நம்மைப் போல் வாழ வேண்டும் என்று பிறர் நினைக்கும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!!

🌹🌹🌹கஷ்டங்கள் தெரியாமல் பிள்ளைகள் சுகமாக வளர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒன்றை மறக்கின்றனர்.

எதிர்காலத்தில் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் மற்றும் சவால்களையும் எதிர்கொள்ள துணிவு இல்லாத பிள்ளைகளை

நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘மருத்துவ காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. 

கருணை அடிப்படையிலான பணி நியமன வயது 35 என்பதை மாற்றி அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

📕📘தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது 

📕📘ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் 

📕📘முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ரேங்க் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

📕📘மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 2020 டிச.,2 முதல் நடந்த (ஏப்.,2020) பி.எட்., தேர்வு முடிவுகள் mkuniversity.ac.in/dde என்ற பல்கலை இணையதளத்தில் 2020, டிச.,31ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

📕📘அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும், பிஎச்.டி. மாணவர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📕📘எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

📕📘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில்  மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு எதிர்வரும்

09.01.2021 (சனிக்கிழமை) அன்று  முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.

📕📘பள்ளி திறப்புக்கு பின்னர் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - அமைச்சர் செங்கோட்டையன்

📕📘பணியின் போது ஊனம் ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு : மத்திய அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் அறிவிப்பு

📕📘Yoga மருத்துவ படிப்பு கவுன்சிலிங் வரும் 7-ம் தேதி முதல் துவக்கம்

📕📘குரூப்-1 தேர்வு 856 இடங்களில் நடைபெறுகிறது: மாணவிகளே அதிகம் விண்ணப்பம்

📕📘கேட் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐஐஎம் இந்தூர் வெளியிட்டது

📕📘ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடுமையாக உழைக்கும் பிவி சிந்து

📕📘24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.

24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.                📕📘பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பி.என்.ஜி. பேஷன் கியர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.                                               

📕📘கேரளாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி. 

ஜனவரி 5 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்து முதல்வர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் வெளியாவதால் திரையரங்குகளை திறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

📕📘அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அவசர காலத்திற்கு கூட பயன்படுத்த ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் அந்த தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படவுள்ளது

இந்தியர்கள் ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப்பட போகிறார்களா? பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி

📕📘வரும் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமிக்கு முழு ஆதரவு-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

📕📘ஆன்லைன் லோன் ஆப் மோசடி தொடர்பாக 2 சீனர்கள் உள்பட 4 பேர் கைது.

சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலம் நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்.

- சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேட்டி.

📕📘பொங்கலுக்குப் பின்னரும் பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் செல்லூர் ராஜு

📕📘நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சவுரவ் கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனை தகவல்.

📕📘கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றியதாக ரோகித் சர்மா உட்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

📕📘நிவர் மற்றும் புரேவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் வரும் 7 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

📕📘Google-ல் பிழையை கண்டறிந்த தமிழக இளைஞருக்கு பெரிய பரிசு தொகை வழங்கி கௌரவித்த கூகுள் நிறுவனம்

📕📘கோவை திமுக கூட்டத்தில் திட்டமிட்டு பிரச்னை ஏற்படுத்திய அதிமுக பெண் நிர்வாகி - சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி புகார்.

திட்டமிட்டு திமுக கூட்டத்தில் புகுந்து ரகளை செய்த அதிமுக பெண் நிர்வாகி - அமைச்சருடன் போனில் பேசும் வீடியோ வெளியானதால் நாடகம் அம்பலம்; அதிமுகவின் சதிக்கு போலீசாரும் உடந்தை என புகார்

📕📘தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாளில் பாஜக அறிவிக்கும் என குஷ்பு கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் தயராக உள்ளேன் என கூறினார்.

📕📘சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமாக வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசியதாக வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.

📕📘முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான பூட்டாசிங் காலமானார்.

ஜவஹர்லால் நேரு காலத்து காங்கிரஸின் தலைவரான பூட்டாசிங், எட்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்மராவின் ஆட்சியில், உள்துறை உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர்.

📕📘12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் பேசினார்.

மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

📕📘ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்

👉ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

👉ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

👉கொரோனா விதிகளை மீறிய 5 வீரர்கள் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது                               📕📘சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - சோனியா காந்தி அறிவிப்பு

பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு

அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நியமனம்

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமனம்

விஜய் வசந்த் உள்பட 57 பேர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

📕📘தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது 

கார்த்தி சிதம்பரம்

📕📘புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு

📕📘தடையை எதிர்த்து குடியரசு தினத்தில் டெல்லிக்குள் நுழைவோம்.

ஜனவரி 6 முதல் 20 வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற உறுதியான முடிவெடுக்க வேண்டும்.

விவசாயிகள்

📕📘திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது

📕📘வருகிற 20ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்

கமலா ஹாரிஸ்

📕📘39வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.

நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

📕📘அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு

📕📘சட்டசபையில் எங்கள் குரல் கேட்டே தீரும்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns