கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 04.02.2021 (வியாழன்)...

 


🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.                                                           நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புகளும் தான் மிஞ்சும்.!

🌹🌹அடிச்சா தான் வலிக்கும்னு இல்ல நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட நடிச்சாக் கூட வலிக்கத் தான் செய்கிறது.!!

🌹🌹🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.ஏனெனில் இன்று நாம் பலம் மிக்கவராக இருக்கலாம் .

ஆனால் காலம் நம்மை விட பலம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்- அறிவுரை வழங்குதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

👉வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை

👉இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு

👉மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்.

📕📘சித்தா மருத்துவ படிப்புதரவரிசை வெளியீடு

📕📘தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

📕📘தினமும் 12 கி.மீ. நடந்து சென்று உணவு வழங்கிய குன்னூர் அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது

📕📘ஸ்ட்ரைக் காலத்தை முறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

📕📘DSE - அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) எந்தவொரு குறைபாடும் இன்றி கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சொல்லின் தாய் விருது: தமிழக அரசு அறிவிப்பு

📕📘சான்றிதழ் சரிபார்க்கப்பட்டும் பணி நியமன ஆணை வழங்காததால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வீட்டை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.

📕📘வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு.

📕📘SMC TRAINING & SCHOOL SAFETY AND SECURITY TRAINING EXTENDED UPTO 15-02-2021

📕📘G.O 9 - JACTTO - GEO வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் இரத்து - அரசாணை வெளியீடு

📕📘சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள்  மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது 

📕📘வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு

📕📘அகில இந்திய அளவில் சிஏ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சேலம் மாணவர் இசக்கிராஜ் சாதனை படைத்துள்ளார்

📕📘பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

📕📘பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் 

📕📘ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

📕📘முதுகலை பட்டதாரி (பொருளியல்)  ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

📕📘மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

📕📘அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்த புதிய தலைமைச்செயலர் தலைமையில் ஆலோசனை என தகவல்.

📕📘தர்மபுரி மாவட்டம் ரஜினி ரசிகர் மன்றம் துணை பொது செயலாளர் கௌசல்யா கிருபாகரன் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.                                                📕📘வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் - விவசாய போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ்

📕📘நடைமுறை சிக்கலின் காரணமாக திருவாரூர் - காரைக்குடி இடையேயான ரயில் சேவை தற்போது தொடங்குவதற்கான சூழல் இல்லை" -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்_

📕📘அதிமுக சட்டம் பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலே மட்டும் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்.-டிடிவி

📕📘அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி

நிர்வாகத் தலைவராக  நியமனம் செய்யப்படுவார் என அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது

📕📘தமிழகத்தின் தஞ்சாவூர்,நெய்வேலி,வேலூர், இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு .

📕📘பெரும்பாலும் சர்வாதிகாரிகளின் பெயர்கள் 'M' எனும் எழுத்தில் ஆரம்பிப்பது ஏன் ? - ராகுல் காந்தி.

📕📘அமைச்சர் காமராஜ் பூரண குணம் அடைந்துள்ளார். நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 95 சதவீத நுரையீரல் பாதி போடு அனுமதிக்கப்பட்ட காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார் - விஜயபாஸ்கர்.

📕📘குடிமக்கள் தேசிய பதிவு  என்ற பெயரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் NRC-ஐ  செயல்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

- மம்தா பானர்ஜி

📕📘விவசாயிகள் விவகாரம்: 

பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனை

விவசாயிகள் பிரச்சினை காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி வரக் கூடிய நிலையில் ஆலோசனை.

📕📘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொது செயலாளராக ராதிகா சரத்குமார் நியமனம்.

📕📘உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு. 

விஜய் ஹசாரே போட்டியில் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார்.

📕📘வரும் 11ம் தேதி கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் மநீம பொதுக்குழுக் கூட்டம்; பொதுக்குழு உறுப்பினர்கள் 650 பேருக்கு அழைப்பு, தேர்தல், கூட்டணி தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு.

📕📘உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது 

இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும்

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் 

- சச்சின்

📕📘கோவையில்  மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து  நடந்த போராட்டத்தில் சட்டநகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கிய வயதான தொழிற்சங்க நிர்வாகி நெஞ்சுவலிப்பதாக கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

📕📘80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு போட

விண்ணப்பித்தால் அனுமதி - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சத்யபிரதா சாகு தகவல்.

📕📘நாடு முழுவதும் அடுத்த மாதம் வரை தடுப்பூசிக்கான செலவை

ஏற்றது மத்திய அரசு - 82 சதவீத தொகையை பி.எம். கேர்ஸ்

நிதியம் வழங்கும் என அறிவிப்பு.

📕📘விமானப்படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயில் 83 தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்து.

📕📘நாட்டின் பாதுகாப்பில் இனியும் பிற நாடுகளை சார்ந்திருக்க

முடியாது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்.

📕📘இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

📕📘தனது அண்டை நாடுகளிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுவது கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

📕📘அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு - வெள்ளை மாளிகை கண்டனம்.

📕📘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு.

📕📘ஐசிசி புதிதாக அறிவித்துள்ள 'மாதத்தின் சிறந்த வீரா் விருது' இந்தியாவின் விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

📕📘இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து சவூதிக்குள் நுழைய தடை

📕📘பெங்களூரில் சசிகலாவை சந்திக்க சென்ற கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம்.

📕📘தனது பிறந்தநாளையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்றார் OP.ரவீந்தரநாத்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 ( RL / RH List 2025)

  Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... &...