🌹பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட
உண்மையாய் இருங்கள்.
அன்பை விட உண்மை அதிக ஆழமானது.
அதிக மகிழ்ச்சியானது.!
🌹🌹சிலவற்றை அடைந்தால் தான் நிம்மதி என்று நினைக்கக்கூடாது.
ஏனெனில் சிலவற்றை இழந்தாலும் கூட நிம்மதி கிடைக்கும் என்பதை மறக்கக் கூடாது.!!
🌹🌹🌹எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது.
ஓசையின்றி மெளனமாக அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘SPD - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு அட்டைக்கு ரூ.50/-க்கு மிகாமல் மாவட்டங்களில் அச்சடிக்க வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு SPD Proceedings வெளியீடு.
📕📘பிளஸ் 1 சேர்க்கையை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு - வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்
📕📘NATA நுழைவுத் தேர்வு விண்ணப்பம் நேற்று தொடக்கம்
📕📘தமிழக அரசு அலுவலக ஆணைகள் கட்டாயம் தமிழில் அனுப்ப வேண்டும் – உயர்கல்வித்துறை உத்தரவு
📕📘அரசுக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாணவி 10-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றவர்.
📕📘பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📕📘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்திய தமிழக அரசு :10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார் - நாளிதழ் செய்தி
📕📘தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், வாக்களிக்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்
📕📘திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 08.03.2021 ஆன்று நடைபெறுவதை முன்னிட்டு அள்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்லி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
📕📘பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி படிப்பில் சேர்ந்து இருந்தால், பணியில் சேர்ந்த பிறகு தேர்வு எழுதுவதற்கு தடையாணை NOC or Department Permission எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை - RTI Letter வெளியீடு.
📕📘தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
📕📘தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும், நான்கு கட்ட பயிற்சி - தேர்தல் கமிஷன் உத்தரவு.
📕📘712 காலியிடம் - சிவில் சர்வீஸ் பணி - மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம்
📕📘தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
📕📘தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டியவழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் . செயல்முறைகள் வெளியீடு
📕📘தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை
📕📘முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
📕📘அதிமுக-பாஜக அணியை வீழ்த்த அணியின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு உள்ளது.
-திருவான்மியூர் பொதுக்கூட்டத்தில் CPIM மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன்
📕📘அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு முழு ஆதரவு - அதிமுக
📕📘தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி- தே.மு.தி.க. பார்த்தசாரதி பேட்டி
அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி,
"அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். நாங்கள் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்டோம், அ.தி.மு.க.வும் தர ஒப்புக்கொண்டுள்ளது. தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். அ.தி.மு.க.வைத் தவிர வேறு யாருடனும் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்
📕📘பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21-வது பிறந்த நாள் இன்று. நீட் தேர்வாலும்-அதை திணித்தவர்களாலும் கூட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க-நீட் இல்லா தமிழகம் அமைக்க, அடிமைகள்-பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்
📕📘அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக அதிபர் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
📕📘கேரளாவை உலுக்கிய டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு
சுங்கத்துறை தாக்கல் செய்த பிராமணப்பத்திரத்தில் தகவல்
📕📘பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் :
காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேச்சு
📕📘கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை!:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
📕📘திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதியாகும் என கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.*
தமிழ்நாட்டில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
📕📘பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை முகப்பு புத்தகத்தில் கூட்டணி கட்சியான தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை: தேமுதிக அதிர்ச்சி*
3 சின்னங்கள் மட்டுமே இடம்பெற்றதால் வடமாவட்ட தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர்
📕📘கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார்.
சென்னை சத்யமூர்த்திபவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனது விருப்பமனுவை விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்
📕📘தொகுதி எண்ணிக்கையா லட்சியமா என்றால் லட்சியம் தான் முக்கியம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது எனவும் கூறினார்.
📕📘முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது ஊழல் புகார் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நத்தம் விஸ்வநாதன் ரூ.279 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரூ.279 கோடி வரி பாக்கியே இருக்குமானால் வருமானம் ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும். நத்தம் விஸ்வநாதன் தனது பதவிக்காலத்தில் ஊழல் மூலம் ரூ.2,000 கோடி சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாடினார். கடந்த 5 ஆண்டுகளில் நத்தம் விஸ்வநாதன் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
📕📘சென்னை தியாகராயநகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார்.
அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் சசிகலாவுடன் டிடிவி ஆலோசனை நடத்தியுள்ளார்.
📕📘ஜெயலலிதா ஆட்சியை அமைக்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 9-ம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுகவுடன் அமமுக இணக்கமாக போகாது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
📕📘உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை
📕📘பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்" -குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு.
📕📘கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒபெக் அமைப்பு நாடுகளுக்கு மத்திய அரசு மீண்டும் கோரிக்கை
📕📘பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது
📕📘சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.*
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது 📕📘இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் பாராட்டியுள்ளார்
📕📘முதல்வர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து - பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.*
தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
📕📘80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அளிக்கப்படும் தபால் வாக்கு நடைமுறையை திமுகவினர் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் மற்றும் நோயுற்றவர்களுக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை திமுகவினர் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📕📘முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
👉அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 20ஆம் தேதியும் ஜனவரி 2ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டன.
இவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல், அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு என்பது கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்து குறிப்பாக வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிக தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்று பொது பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும் பட்டியலினத்தவர் 5 பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல் அவரவர் சமூக பிரிவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சேர்த்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு விதிகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீட்டு விதிகளின் படியே புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் இருநபர் நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அதில் வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கி விட்டோம்.
எனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பாக ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதிக மதிப்பெண்கள் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த ஆசிரியர்களை பொது பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு பிரிவில் சேர்த்தது தவறு என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
📕📘10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.
📕📘பாமகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி வாயிலாக வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
📕📘திருச்சியில் மார்ச் 7ம்தேதி திமுக பொதுக் கூட்டம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
📕📘சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என்று மாம்பழம், இரட்டை இலை, தாமரை குறிப்பிடப்பட்டு பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு.
📕📘வாழ வசதியான நகரங்கள் பட்டியல்: இந்தியாவில் சென்னைக்கு 4-வது இடம்
📕📘பாமக தேர்தல் அறிக்கை: "இலவச உயர்கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கவிக் கடன் தள்ளிவைப்பு
📕📘மே 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு.
ரம்ஜான் காரணமாக வேறு தேதிக்கு தேர்வை மாற்றி, CBSE திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது.
📕📘திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
6 தொகுதிகள் ஒதுக்கீடு
📕📘அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தேர்தல் அறிக்கையை தயார் செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
📕📘விசிகவில் இன்று முதல் விருப்பமனுக்கள் கட்சித் தலைமையகம் அம்பேத்கர் திடலில் பெறப்படுகிறது.
06-03-2021 முதல் 08-03-2021 வரை விருப்பமனுக்களை கொடுக்கலாம்
- விசிக அறிவிப்பு
📕📘திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது வைகோ.
📕📘திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.
கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 தொகுதிகள் ஒதுக்கீடு
📕📘டெல்லி : வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 101-வது நாளை எட்டியது. மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டம். போராட்டக் களத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
📕📘கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில்
'வாட்ஸ் ஆப்' அழைப்புகள் மற்றும் 'வீடியோ' அழைப்புகள் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
📕📘ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
📕📘வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
📕📘பாகிஸ்தானில் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, பிரதமா் இம்ரான் கான் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.
📕📘பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளிட்ட 3 வீரர்களை தேர்வு செய்தது ஐசிசி.
📕📘14வது ஐபிஎல் சீசனில் விளையாட சென்னை வந்தார் தோனி.அம்பதி ராய்டு, ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் வருகை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926