கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...

 பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...



பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை-6. 


ந.க.எண்.31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021. 


பொருள் : 


பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகைவழங்கும்திட்டம் அரசுமற்றும் அரசு உதவிபெறம்பள்ளிகள் 10,11 மற்றும் 12 ஆம்வகுப்புமாணவமாணவியர் - இடைநிற்றலைமுற்றிலும்தவிர்த்தல் - 2011-2012 ஆம்கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை - பள்ளிப்படிப்பை தொடராத முதல் 12 ஆம்வகுப்புமாணவர் எண்ணிக்கைவிவரம் - கோருதல் - தொடர்பாக. 


பார்வை 


1. அரசாணை(நிலை) எண்.141 பள்ளிக்கல்வி (இ1)துறை நாள். 13.09.2011 


2. சென்னை-6,பள்ளிக்கல்வி இயக்குநரின்கடிதம் ந.க.எண்.31944/கே/இ2/2020,நாள்.16.10.2020, 04.12.2020,17.02.2021. 


3. சென்னை-18,மாநிலக்கணக்காயரின்(தணிக்கை-1)கடிதம் D.O.No.Repl/60-3/SPL/2020-21/DPA(AR2019-20)/81, நாள்.25.01.2021. 


4. சென்னை-5, மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலரின் கடிதம் எண்.2469/EE/SDPC/2020,நாள்.24.02.2021. :


 பார்வை (1)ல்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.141 பள்ளிக்கல்வித் (இ1)துறை, நாள்.13.09.2011-ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


மேற்காண் பொருள் தொடர்பாக பார்வை(3)ல் கண்டுள்ள சென்னை-18, மாநிலக் கணக்காயரின்(தணிக்கை -I) கடிதத்தில் மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற (Dropout)மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021- க்குள் இவ்வியக்கக 'கே'பிரிவு (Email) முகவரிக்கு(ksec.tndse@nic.in) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 


இணை இயக்குநர்


>>> பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (தொழிற்கல்வி)  செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்  இரயில்வே வேலை கனவை நனவாக்குங்கள்!  Assistant Loco Pilot (ALP)...