தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு முறைப்படி தபால் வாக்குகள் வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முனைவர் அ.மாயவன் அவர்கள் கடந்த 30/1/2021 அன்று தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்க்கும் தபால் வாக்குகள் வழங்குவதில் அந்த மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இவர்கள் அனைவருக்கும் மின்னனனு இயந்திரம் மூலம் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக சிறப்பு வாக்கு பதிவு மையம் ஒன்றின் மூலம் அந்தந்த RO அலுவலுகத்தில் வாக்கு பதிவு செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துருந்தார் . தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகம் சார்பாக தொடுத்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சீவ் பானெர்ஜி மற்றும் செந்தில்குமார் அவர்களின் முன் வந்தது .
இந்த வழக்கை வி.அருண் வழக்கறிஞர் சார்பாக , மூத்த வழக்கறிஞர் ரா .விடுதலை ஆஜராகி தேர்தல் ஆணையம் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளுக்கு வழிகாட்டுதலை பின்பற்றுதல் , தகுதியுள்ள தேர்தல் பணி வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் அடிப்படை உரிமையான, ஜனநாயக கடைமையான வாக்கு செலுத்துவதில் தேர்தல் ஆணையமே தவறு செய்வதால் மற்றும் இந்த தவறினை தேர்தல் ஆணையம் கடந்த தேர்தலில் செய்தது போல் இந்த தேர்தலில் செய்யக்கூடாது என்றும், ஆசிரியரகளுக்கான தபால் வாக்கினை முழுமையாக வழங்கவேண்டும் , மேலும் தபால் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பூர்திசெய்த படிவம் 12 னை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதாவது முதல் பயிற்சி வகுப்பான 18/3/2021 க்குள் கொடுக்கவேண்டும் எனவும் கையெழுத்திட்ட படிவம் 12 ஐ உடனே பெற்று இரண்டாவது பயிற்சி வகுப்பில் 26/3/2021-ல் தபால் வாக்குகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று வாதாடினார். மேலும் அவர்கள் தேர்தல் 6/4/2021 அன்று முடிந்தாலும் 1/5/2021 வரை தேர்தல் பணி ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த உரிமையுள்ளது . ஆகவே தேர்தல் ஆணையமே தகுதியுள்ள வாக்காளர், வாக்கு செலுத்துவதை தடுக்கக்கூடாது என்று வாதிட்டார் . இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் , அரசு ஊழியர்கள் தங்கள் தபால் வாக்குகளை 1/5/2021 வரை தபாலில் செலுத்தலாம் என்றும் , தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தபால் வாக்குகளை எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் தபால் வாக்குகளை வழங்குவதில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும் என்று பதிலளித்தார் .
இருதரப்பினரையும் கேட்ட பிறகு தலைமை நீதியரசர் சஞ்சீவ் பானர்ஜி வாக்காளர் வாக்களிப்பது ஜனநாயக அடிப்படை உரிமை என்றும் , மனுதாரர் கோரியபடி தற்சமயம் EVM- ல் வாக்கு அளிக்க முடியாவிட்டாலும் , எதிர்காலத்தில் மனுதாரர் கூறியுள்ள நல்ல ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நினைவில் கொண்டு எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவேண்டும் .
தேர்தல் பணி அரசு ஊழியர்கள் மிக முக்கிய தேர்தல் பணியாற்றுவதால் , அவர்கள் ஓவ்வொருவருக்கும் நல்ல கௌரவமான ஊதியம் வழங்கி அவர்களின் அடிப்படை உரிமைகளான வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு , தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ள நடைமுறைப்படி தேர்தல் பணி ஆசிரியர்கள் / ஊழியர்கள் முழுமையாக தபால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.