கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (18-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 18, 2021



உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : மரியாதைகள் அதிகரிக்கும்.


பரணி : தாமதங்கள் குறையும்.


கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

மே 18, 2021



மனதில் தோன்றும் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் மறையும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மிதுனம்

மே 18, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் அகலும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவாதிரை : தாமதங்கள் அகலும்.


புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




கடகம்

மே 18, 2021



ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் கவலைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வேலையாட்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூசம் : இழுபறிகள் அகலும்.


ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

மே 18, 2021



உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். அவ்வப்போது மனதில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மகம் : சோர்வு நீங்கும்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------




கன்னி

மே 18, 2021



பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கும் திறமைகள் மேம்படும். எளிமையான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : திறமைகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

மே 18, 2021



உலகியல் நடைமுறைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். மனதில் புதிய தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். மறைந்திருந்த சில விஷயங்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : மாற்றமான நாள்.


சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


விசாகம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------




விருச்சகம்

மே 18, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் பொருளாதாரம் மேம்படும். விவேகமாக செயல்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : தெளிவு பிறக்கும்.


அனுஷம் : பொருளாதாரம் மேம்படும்.


கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மே 18, 2021



மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உணவு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து சிந்தித்து செயல்படவும். சகோதரர்களின் செயல்பாடுகள் மூலம் சிறு சிறு கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : குழப்பமான நாள்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : மனவருத்தங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 18, 2021



வெளியூர் தொடர்பான பயணங்கள் மற்றும் கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

மே 18, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்ப்புகளால் ஆதாயமான சூழ்நிலைகள் சிலருக்கு அமையும். மனதிற்கு விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் புதிய முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.


சதயம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மீனம்

மே 18, 2021



செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை அளிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : குழப்பங்கள் அகலும்.


உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.


ரேவதி : உதவிகள் சாதகமாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...