கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 15, 2022



தாயின் மீது அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : அன்பு அதிகரிக்கும். 


பரணி : சிந்தனைகள் மேம்படும். 


கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 15, 2022



உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



கிருத்திகை : அனுகூலமான நாள். 


ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும். 


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 15, 2022



தூக்கமின்மையினால் ஆரோக்கியம் குறைவுபடும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப விவகாரங்களை புதிய நபர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.


திருவாதிரை : தாமதம் உண்டாகும். 


புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

ஜூலை 15, 2022



நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.  வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : அமைதி வேண்டும். 


பூசம் : அனுகூலமான நாள். 


ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 15, 2022



நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் :  நிதானம் வேண்டும். 


பூரம் : விருப்பம் நிறைவேறும். 


உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 15, 2022



வெளியூர் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : லாபகரமான நாள். 


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

சித்திரை : ஈடுபாடு உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஜூலை 15, 2022



தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும். 


சுவாதி : பயணங்கள் சாதகமாகும். 


விசாகம் : மாற்றமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 15, 2022



சுயதொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்கள் மீதான மரியாதை உயரும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சோர்வு குறையும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : மரியாதை உயரும்.


கேட்டை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 15, 2022



வாக்குவன்மையால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : தீர்வு கிடைக்கும். 


பூராடம் : புரிதல் உண்டாகும். 


உத்திராடம் : தேவைகள் நிறைவேறும். 

---------------------------------------





மகரம்

ஜூலை 15, 2022



மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். சர்வதேச வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தனம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : பதற்றமான நாள். 


திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




கும்பம்

ஜூலை 15, 2022



உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்கள் மாறுபடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : பயணங்கள் கைகூடும். 


சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 15, 2022



குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ரேவதி : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...