கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (28-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஆகஸ்ட் 28, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும். 


பரணி : தெளிவு ஏற்படும்.


கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 28, 2022



குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் உதவி மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 28, 2022



புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 28, 2022



கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும். 


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 28, 2022



சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரத்தில் சிறு சிறு மாற்றம் செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தெளிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : மாற்றமான நாள்.


பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 28, 2022



மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : மதிப்பளித்து செயல்படவும்.


அஸ்தம் : விருப்பம் நிறைவேறும்.


சித்திரை : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 28, 2022



உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். அரசு பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும். 


சுவாதி : ஆதாயம் உண்டாகும்.


விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 28, 2022



ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணியில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 28, 2022



உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவை காட்டிலும் செலவு மேம்படும். கூட்டாளிகளுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மேன்மை உண்டாகும். குடும்பத்திலுள்ள பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : திறமைகள் வெளிப்படும்.


பூராடம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 28, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : குழப்பம் உண்டாகும். 


திருவோணம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அவிட்டம் : போட்டிகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 28, 2022



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். முன்னேற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : ஆரோக்கியம் மேம்படும். 


பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 28, 2022



வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? What will be the major announcement tomorrow? தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாக...