கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (09-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 09, 2023



உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் மாற்றமான சூழல் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : புரிதல் உண்டாகும்.


பரணி : முன்னேற்றம் ஏற்படும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 09, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளினால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : பணவரவு கிடைக்கும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 09, 2023



நண்பர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். வெளியூர் பயணங்களின் மூலமாக அனுபவம் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : வருமானம் கிடைக்கும்.


புனர்பூசம் : அனுபவம் அதிகரிக்கும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 09, 2023



எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உணவு சம்பந்தமான விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். திடீர் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : அனுகூலம் உண்டாகும்.


ஆயில்யம் : சோர்வான நாள்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 09, 2023



நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத விரயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவுடன் செயல்பட வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : விரயம் உண்டாகும்.


பூரம் : தெளிவு ஏற்படும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 09, 2023



வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்க பெறுவீர்கள். உறவுகளின் வழியாக சில உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனைகள் பெற்று முடிவுகளை எடுக்கவும். பிள்ளைகளுடன் இருந்தவந்த கருத்து வேறுபாடு மறையும். உடல் அளவில் இருந்த சோர்வு நீங்கும். கீர்த்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : சோர்வு நீங்கும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 09, 2023



எந்தவொரு செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். உதவிகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : இன்னல்கள் குறையும்.


சுவாதி : அனுபவம் கிடைக்கும்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 09, 2023



செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மனதில் நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : மந்தமான நாள்.


அனுஷம் : மதிப்பு மேம்படும்.


கேட்டை : விவேகம் வேண்டும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 09, 2023



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் வருத்தம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் தோன்றும் கருத்துக்களை நிதானமாக சொல்வது நன்மை தரும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



மூலம் : நெருக்கடி உண்டாகும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : நன்மை தரும் நாள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 09, 2023



மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் மூலமாக சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : தடைகள் குறையும்.


அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 09, 2023



பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் விலகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : போட்டிகள் விலகும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 09, 2023



நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


ரேவதி : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...