கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (17-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (17-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 17, 2023



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 17, 2023



சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணி நிமிர்த்தமான பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆதரவாக இருந்தவர்கள் விலகி செல்வதற்கான சூழ்நிலைகள் நேரிடலாம். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


ரோகிணி : விட்டுக்கொடுத்து செல்லவும். 


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



மிதுனம்

பிப்ரவரி 17, 2023



மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.


திருவாதிரை : அனுகூலமான நாள்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 17, 2023



உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். விலகி இருந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 17, 2023



புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில விரயங்கள் நேரிடும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : அனுபவம் கிடைக்கும். 


பூரம் : பொறுப்புகள் குறையும். 


உத்திரம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 17, 2023



உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் புதிய நம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : உபாதைகள் நீங்கும். 


அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 17, 2023



சுபகாரியம் நிமிர்த்தமான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றத்தின் மூலம் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆசைகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




சித்திரை : விரயங்கள் ஏற்படும்.


சுவாதி : அனுபவம் உண்டாகும். 


விசாகம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 17, 2023



கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 17, 2023



புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் நிதானம் அவசியம். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான எண்ணங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மூலம் : மாற்றங்கள் ஏற்படும். 


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 17, 2023



உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதுமையான சிந்தனைகளின் மூலம் தொழிலில் மாற்றத்தை உருவாக்குவீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும். 


திருவோணம் : பயணங்கள் கைகூடும்.


அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 17, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : இழுபறிகள் குறையும்.


பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 17, 2023



சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : ஈர்ப்பு அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : ஆர்வம் மேம்படும்.


ரேவதி : அமைதியான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“Nature Camps” for Government School Students at Sathyamangalam Tiger Reserve – Ordinance G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 Issued

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “இயற்கை முகாம்கள்” - அரசாணை G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 வெளியீடு Envir...